Tuesday, August 17, 2010

The Crow and Swam

ஹிதோபதேச கதைகள்-5

காகமும், நாறையும்


காட்டிலே அரச மரத்தில் ஒரு காகமும் அன்னமும் சேர்ந்து வசித்துவந்தன. ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் கையில் வில்லும் அம்புமாக அந்த வழியே வந்தான். வெய்யலோ வெகு கடுமையாக இருந்தது. அந்த வழிப்போக்கன் அந்த மரத்தடியில் சற்று நேரம் உட்கார்ந்து இளப்பாறினான். களைப்பு அதிகமானதால் தன்முண்டாசை கழட்டிவைத்து அதை தலையணியாக வைத்துக்கொண்டு படுத்துவிட்டான். நன்றாகவும் உறங்கியும் விட்டான்.

சூரியனோ கொஞ்சநேரத்தில் தலைக்குமேல் வந்துவிட்டான். வெய்யல் இப்போது நேராக அந்த வழிப்போக்கன் முகத்தில் விழ தொடங்கியது. இதை பார்த்த அன்னம் பரிதாபபட்டு தன் இறக்கையை விரித்து அவனுக்கு வெய்யல் படாமல் மரக்கிளையில் உட்கார்ந்து உதவிக்கொண்டிருந்தது.


இதை பார்த்துக்கொண்டிருந்தது காகம். காகம் எப்போதும் ஒரு இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்காது. அது பறந்து அன்னத்திடம் வந்து எச்சில் போட்டுவிட்டு பறந்து போய்விட்டது.

தன் முகத்தில் ஏதோ விழுந்ததை கண்டு வழிபோக்கன் கண் விழித்துப்பார்த்தான். மேலே அன்னத்தை பார்த்து அதுதான் எச்சிலை போட்டது என்று கோபம்கொண்டு தன் அம்பால் அந்த அன்னத்தை கொண்றான். அன்னமும் உயிரை விட்டு கிழே விழுந்தது.

தகாத உறவுடன் சேர்ந்தால் நாசமே விளையும்.

------------------------------------------------------------

No comments:

Post a Comment