Thursday, April 8, 2010

சஞ்சார பத்ததி-11


சஞ்சார பத்ததி-11

அக்ரதஸ்தே கமிஷ்யாமி
ம்ருத்நந்தீ குசகண்டகாந்
இதி ஸீதாsபி யத்வ்ருத்தீம்
இயேஷ ப்ரணமாமி தாம் //

ராமர் ஸீதயை காட்டிற்கு வரவேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஸீதையோ அவருக்கு முன்னால் புறப்பட்டுவிட்டாள். எதற்காக என்றால் அவருக்கு காட்டில் முள் குத்தக்கூடாது என்று பாதுகாக்க. பாதுகை செய்யவேண்டியதை தாயாரே செய்து காண்பித்தாள்-அதாவது ஆசார்யர் ஜீவனை ஒழுங்கு செய்து நல் வழிக்கு கொண்டுவந்தால் பகவான் அவ்னிடம் நெருங்கி வருகிறார்.

ரஜஸா தமஸா ச துஷ்டஸத்த்வே
கஹ.நே சேதஸீ மாமகே முகுந்த:
உசிதம் ம்ருகயாவிஹாரம் இச்சந்
பவதீம் ஆத்ருத: பாதுகே ! பதாப்யாம் //

பாதுகையே ! என்னிடம் ரஜோ குணம், தமோ குணம் நிரம்பி ஸத்வகுணம் குறைந்துவிட்டது. அதனால் நல்ல சங்கதிகள் படமாட்டேன் என்கிறது. அதை போக்கத்தான் பகவான் உன்மூலம் வழி காட்டி இருக்கிறார் ( பகவான் வேட்டையாடுவதற்கு உன்னை சாற்றிக்கொண்டு புறப்படுகிறார்)

சரணத்வயம் அர்ப்பகஸ்ய சௌரே:
சரதம்போருஹ சாதுரீதுரீணம்
சகடாஸுர தாட.நேsபி குப்தம்
தவசக்த்யா கில பாதுகே ! ததாஸீத் //

பாதுகையே ! க்ருஷ்ணாவதாரத்தில் பகவான் கண்ணனாக குழ/ந்தையாக தொட்டிலில் படுத்திருந்தபோது சகடாஸுரன் தொந்தரவு கொடுத்தபோது அவனை உதைத்து தூக்கி எறிந்தாய். அந்த பலம் உன் திருவடியில் பாதுகை இருந்ததால் தானோ !

உபாகதாநாம் உபதாபசா.ந்த்யை
ஸுகாவகாஹாம் அதிம் உத்வஹ.ந்தீம்
பச்யாமி சௌரே: பதவாஹி.நீம் த்வாம்
நிம்.நேஷூ துங்கேஷு ச நிர்விசேஷாம் //

பாதுகையே! நீ பெருமாளை எழு.ந்தருளப்பண்ணிக்கொண்டு வருகிற சமயத்தில் ஜனங்கள் நன்றாக சேவிக்க நீ மெதுவாக போகின்றாய். உனக்கு யாரும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் கிடையாது.

நிஜஸம் ஹநநப்ரஸக்தலாஸ்யம்
சரதி த்வாம் அதிருஹ்ய ரங்கநாத:
பதரக்ஷணி ! பாவநத்வமாஸ்தம்
ரஸிகாஸ்வாதம் அத: பரம் ந வித்ம: //

பாதுகையே! பகவான் உன்னை சாற்றிக்கொண்டு எழுந்தருளி ஒய்யார நடையோடு வெளியே வவரும்போது பக்தர்கள் தங்களை மறந்து ரங்கா ரங்கா என்று உன் அழகை கண்டு ஆன.ந்த பாஷ்பம் வடிக்கிறார்கள். அ.ந்த க்ஷணமே அவர்கள் பாபங்கள் போய்விடுகின்றன.( கெட்டவன் ஆசார்யர் சம்பந்தத்தினால் பெருமாளை அடைகிறான் என்ன ஆச்சர்யம்!

தவயாநுபத்தாம் மணிபாதரக்ஷே !
லீலாகதிம் ரங்கசயஸ்ய பும்ஸ:
நிசாமயந்தோ ந புநர்பஜந்தே
ஸம்ஸாரகாந்தார கதாகதாநி //

பாதுகையே ! பகவான் உன்னை சாற்றிக்கொண்டு திருமாமணி மண்டபத்தை விட்டு வெளியே வருகிறார். அந்த அழகை காணும் பகதர்களுக்கு ஜனன மரண பயம் போய்விடுகிறது.

விக்ரம்ய பூமிம் அகிலாம் பலிநா ப்ரதிஷ்டாம்
தேவே பதாவநி திவம் பரிமாதுகாமே
ஆஸீததோ தி.நகரஸ்ய கரோபதாபாத்
ஸம்ரக்ஷிதும் பதஸரோஜம் உபர்யபூஸ்த்வம் //


பாதுகையே ! பகவான் த்ரிவிக்ரமாவதாரத்தில்  ஒரு அடியில் ஆகாயத்தை அளந்தார். அவரது திருவடியில் வெய்யல் படாமல் நீ அதை தாங்கி கொண்டு தொண்டு செய்தாய்.

ரங்கேச்வரேண ஸஹ லாஸ்ய விசேஷ பாஜோ
லீலோசிதேஷூ தவ ரத்னசிலாதலேஷு
மத்யே ஸ்திதாநி கசிசிந் மணிபாதரக்ஷே
ஸப்யாந் விசேஷம் அ.நுயோக்தும் இதி ப்ரதீம: //

பெருமாள் உன்னை சாற்றிக்கொண்டு உல்லாசமாக எழுந்தருளுகிறார்.ந்டுவில் ரத்னமயமான கல்லில் சற்று நிற்கிறார். பக்தர்களை பார்த்து க்ஷேமம் விசாரிப்பதுபோல் தோன்றும்-அதாவது பக்தர்களின் அமுது செய்கிறதை ஸாதித்தபடி.

நித்யம் பதாவநி நிவேச்ய பதம் பவத்யாம்
நிஷ்பந்தகல்பபரிமேய பரிச்சதாநி
ச்ருங்காரசீதலதராணி பவந்திகாலே
ரங்கேச்வரஸ்ய லலிதாநி கதாகதாநி //

ஏ பாதுகையே ! அந்த அந்த சமயங்களில் பெருமாள் உன்னை சாற்றிக்கொண்டு ஒய்யார நடை போடுகிறார். அப்போது குடையை வேகமாக சுற்றுகிறார்கள்.அந்த வேகத்தில் குடை காற்றாடி போல  குடை அசையாமல் இருக்கிறது. ஸ்ரீ ரங்கநாதனுடைய நடை அழகில் ஒய்யார நடையும் ஒன்று-காண கண் கொள்ளாக்காட்சி.

ஸ்ப்ருசஸி பதஸரோஜம் பாதுகே ! நிர்விகாதம்
ப்ரவிசஸி ச ஸமஸ்தாம் தேவி ! சுத்தாந்த கக்ஷ்யாம்
அபரமபி முராரே: பூர்வம் ஆபீரகந்யாஸு
அபிஸரண விதீநாம் அக்ரிமா ஸாக்ஷிணீ த்வம் //

ஏ பாதுகையே ! நீ பெருமாள் பாதததை எ.ந்த சமயத்திலும் தொடுகிறாய். உன்னை சாற்றிக்கொண்டு பகவான் எல்லா இடத்திற்கும் போகிறார். க்ருஷ்ணன் ராஸக்ரீடையின் போது உன்னை சாற்றிக்கொண்டு தான் விளயாடினார்.

ஸ்த்யால்லோகாத் ஸகலமஹிதாத் ஸ்தா.நதோ வா ரகூணாம்
சங்கே மாத: ! ஸமதிககுணம் ஸைகதம் ஸஹ்யஜாயா:
பூர்வம் பூர்வம் சிரபரிசிதம் பாதுகே யத் த்யஜந்த்யா
நீதோ நாதஸ்ததிதமிதரந்நீயதே ந த்வயாsஸௌ //

ஏ ! பாதுகையே ! முதலில் பெருமாள் ப்ரம்ம லோகத்தில் எழுந்தருளி இருந்தார். பிறகு அவரை அயோத்திக்கு கொண்டுவந்தாய். ஆனால் ஸ்ரீரங்கம் வந்தபிறகு அவர் எங்கும் போகவில்லை. ஸ்ரீ ரங்கத்தைவிட மேற்ப்பட்ட இடம் வேறு கிடையாது

R.Jagannathan.