Tuesday, October 26, 2010

எனக்கு வந்த ஜாக்பாட் மெயில்

எனக்கு வந்த ஜாக்பாட் மெயில்

சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுத்தவன் மாதிரி எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. நெம்பர்-7 உங்களுடைய இ-மெயில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 7- நபராக ஜாக்பாட் பரிசு கிடைத்திருக்கிறது. உடனே கிழ்கண்ட முகவரிக்கு அணுகவும் என்று ஒரு PDF-பைல் ஒன்றை திறந்து பார்க்கவும் என்று இருந்தது.

எனக்கு ஒரே அதிர்ச்சி! அதன் நகலை கீழே பார்க்கவும்:

Attn Winner No. (7).

This is to bring to your notice that your mail was received here in our office.

Dear winner please you are mandated to fill the attatched form that was sent to you from our office here in Uk for verification purposes inorder for us to proceed with the transfer of your won fund into your specified Bank Account.

Therefore, we once again attatch the form to this mail for you to fill completely and return it back to us to enable us process the transfer of your won fund.

We look forward to your urgent response to this mail.

Sincerely,
Dr. Duke Larry.
MEGA MILLIONS FINANCIAL DIRECTOR.


WINNERS VERIFICATION FORM FOR FUND TRANSFER..docx

எனக்கு நன்றாக தெரியும் இது ஒரு போலி மெயில்-நம்மிடமிருந்து பல விஷயங்களை கறக்க ஒரு வழி என்று சும்மா இருந்துவிட்டேன். ஆனாலும் என் எண்ணங்கள் என்னை சும்ம இருக்கவிடமுடியவில்லை. ஒரு வேளை இது நிஜமாக இருக்கலாமோ! இருந்தால்------

நான் கனவு காண தொடங்கிவிட்டேன்.

அந்த சமயத்தில் TV-யில் தினம் ஒரு திவ்ய நாமம்-என்ற தொடரில் ஒரு பாழடைந்த கோவிலை காண்பித்து இதை புனருத்தானம் செய்ய அன்பர்களை அழைத்தார்-திரு. அனந்த பத்மநாபாச்சாரியார். தமிழ் நாட்டில் எத்தனையோ கோயில்கள் இது மாதிரி இருக்கின்றன. என் எண்ணம் அங்கே சுழன்றது. நமக்கு கிடைக்கபோகும் ஜாக்பாட்டில்-ஒரு கோடி இதற்கு ஒதுக்கிவிடலாம். என் மனம் சந்தோஷம் அடைந்தது.

அடுத்து-எல்லா கர்நாடக கோயில்களிலும் மதியம் வரும் யாத்திரீகர்களுக்கு சாப்பாடு கிடைக்கும். நம் தமிழ் நாட்டில் அப்படி இல்லையே என்று ரொம்ப நாளாக வருத்தம். உடனே என் மனம்-ஜாக்பாட்டிலிருந்து ஒரு கோடி இதற்கு கொடுத்து நிறந்தர கட்டளை ஏற்பாடு செய்துவிடலாம்.

நான் அயோத்திக்கு சென்றபோது அங்கு வால்மீகி பவனுக்கு சென்றிருந்தேன். அங்கே வால்மிகி ராமாயணத்தில் உள்ள 22,000 ஸ்லோகங்களையும் சலவை கல்லில் எழுதி பார்வைக்கு வைத்திருந்தார்கள். அன்று நான் நினைத்தேன்- இது மாதிரி நமது நாலாயிரம் திவ்ய ப்ரப்ந்தத்தை இது மாதிரி ஸ்ரீரங்கம் ரங்கவிலாஸில் எழுதி மாட்டிவைத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். என் மனம் அங்கே ஓடியது. நமக்கு கிடைக்கும் ஜாக் பாட்டில் ( சுமார்-20- கோடி ) ஒரு கோடி இதற்கு ஒதுக்கிவிடலாம்.

என்னை சமயத்தில் கைதூக்கிவிட்டது- திருப்பதி-ஸ்ரீனிவாச பெருமாளின் கருணை உள்ளம் தான். இதை நான் ஒருபோதும் மறக்கவில்லை, மறக்கவும் முடியாது. பகவான் நன்றி கடனை ஒரு போதும் எதிர்பார்க்கமாட்டார். இந்த ஜாக்பாட் பரிசும் அவர் கருணதானே! அதனால் ஒரு கோடி உண்டியலில் யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு வந்துவிடவேண்டும்.

என் பையன் ஒரு டாக்டர். அவனும் சில டாக்டர் நண்பர்களும் சேர்ந்து முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்கள். இதை விரிவு படுத்தி பெங்களூரில் குறைந்தது- 50 பேர்களுக்கு தங்கும் வசதி, மருத்துவ வசதி போன்றவைகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆவல். அதற்கும் இந்த பணம் உதவும். அதற்காக ஒரு கோடி ஒதுக்கலாம்.

பல வருஷங்களாக என் குடும்பத்தினர் நிறைய தோட்டம் துறவோடு இருக்கும் வீட்டில் வருஷத்திற்கு சில மாதம் தங்கி இருக்கவேண்டும் என்று கனவு காண்பார்கள். அவர்கள் கனவை நிறைவேற்ற இதோ ஒரு வரப்ரசாதம்.

இப்படியாக பல பல திட்டங்களை மனதில் சிந்தித்துகொண்டே துங்கிவிட்டேன். சுமார் விடியற்காலம் 3- மணிக்கு ஒரு கனவு கண்டேன்- என் வங்கி பணத்தை திருடி அதை சுமார் ஒரு லட்சமாக மாற்றி யாரோ- நைஜீரியாவில் சேர்த்துக்கொண்டார்கள் அதை நான் உடனே கட்டவேண்டும் என்று வங்கியிலிருந்து கட்டளை வந்ததாக அந்த கனவு. திடீரென்று விழித்துக்கொண்டு இது ஒரு வேளை உண்மையாக இருக்கலாமோ! என்ற கவலை. அதன்பிறகு தூக்கம் வரவில்லை.

உடனே கடவுளை வேண்ட ஆரம்பித்தேன்-தெய்வமே இது உண்மையாக இருக்கக்கூடாது-எனக்கு ஜாக்பாட் ஒன்றும் வேண்டாம்-என்னை விட்டால் போதும் என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன். மறு நாள் வங்கிக்கு ஓடினேன். வங்கி மேனேஜரை சந்தித்து-என் கவலையை சொன்னேன்.

அவர் அதற்கு இது மாதிரி நிறையபேர் எங்களை தேடி வருகிறார்கள். எங்களுக்கு பலத்த பாதுகாப்பு-இண்டர்னெட் ஸெக்யூரிடி- இருக்கிறது. இம்மாதிரி போலி மெயில்கள் எல்லாவற்றையும் வடிகட்டி குப்பையில் போட்டுவிடுவோம்- நீங்கள் கவலை படாமல் போங்கள் என்றார்.

அப்பா! நாம் தப்பித்தோம் என்று சமாதானம் அடைந்தேன்.

மறு நாள் இதுமாதிரி மெயில் ஒன்று வந்தது. அதை உடனேயே அழித்துவிட்டேன்.

R.Jagannathan.

( பல பேர்கள் இம்மாதிரி தவிப்பார்கள்- அவர்களுக்கு இது மாதிரி மெயில் வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை அடுத்த பிளாக்கில் விவரமாக பார்க்கலாம். )