Thursday, December 9, 2010

106-திவ்யதேச அட்டவனை-2


106-திவ்யதேச அட்டவனை-2

10. திரு ஆதனூர்:

ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரெங்கநாயகி- ப்ரணவ விமாநம்- சூரிய புஷ்கரிணி -கிழக்கே திருமுகமண்டலம்- புஜங்க சயனம்-காமதேனுவுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: அன்னவனை.

11. திருவழுந்தூர்:

ஆமருவியப்பன்- செங்கமலவல்லி தாயார்- கருட விமாநம் - தர்சனபுஷ்கரிணி- கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் - உபரிசர்வஸுவுக்கும், காவேரிக்கும், தருமதேவதைக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: தந்தைகாலில், சிங்கமதாய், திருவுக்கும், செங்கமல, கல்லுயர்ந்த, தேமருவு, கீறார்கணபுரம், அள்ளல்வாய்.

12. சிறுப்புலியூர்:

அருமா கடல்- திருமாமகள் நாச்சியார்- நந்தவர்த்தந விமாநம்- அநந்தஸரஸுமாநஸ புஷ்கரிணி- தெற்கே திருமிக மண்டலம்- புஜங்க சயனம்- வ்யாஸ மகரிஷிக்கும், வ்யாக்ரமருக்கும் ப்ரத்யக்ஷம்

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்:  கள்ளம்.

13. திருச்சேறை: ஸார க்ஷேத்ரம்:

சாரநாதன்- ஸாரநாயகி- ஸார விமாநம்- ஸார புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்-நின்ற திருக்கோலம்- காவேரிக்கு ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: கண்சோர- வானையார்- சீரார்கணபுரம்- மன்னியதன்.

14. தலைச்சங்க நாண்மதியம்:

நாண்மதிய பெருமாள்- வெண்சுடர் பெருமாள் -தலைச்சங்கநாச்சியார்-செங்கமலவல்லி-சந்திர விமாநம்- கிழக்கே திருமுக மண்டலம்-சந்திர புஷ்கரிணி- நின்ற திருக்கோலம்-தேவப்ருந்தங்களுக்கும், சந்திரனுக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: நன்னீர்.

15. திருக்குடந்தை ( கும்பகோனம் )

சாரங்கபாணி பெருமாள்- ஆராவமுதன்- கோமளவல்லி-வைதிக விமாநம்- ஹேமபுஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- உத்யோக சயனம்-ஹேம மஹரிஷிக்கு ப்ரத்யக்ஷம்

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
பெரியாழ்வார்-கொங்கும், குடங்கள்
திருமழிசையாழ்வார்: இலங்கை, நடந்த.நாகத்தணை
திருமங்கையாழ்வார்: ஆவியே, இற்பிறப்பு, அன்றாயர், வாளாய, குயிலாலும், வாராளும், பொங்கேறு, வந்த நாள், பேரானை, வந்தாய், தோடவிழ்-வானையார், இங்கே, அண்டத்தின், மூவரில், காவியை, பொங்கார், முற்றாரா, அன்றாயர், ஒரு பேருந்தி, செல்வமல்லார், காரார் குடந்தை, பொன்னிம
.பூதத்தாழ்வார்: .எங்கள் பெருமான்., தமருள்ளம்.
பேயாழ்வார்: சேர்ந்த திருமால், விண்ணகரம்.
நம்மாழ்வார்:ஆராவமுதே,

16. திருகண்டியூர்:

அரன்சாபம் தீர்த்தவர் -கமலவல்லி நாச்சியார், கமலாக்ருதி விமாநம், கபால தீர்த்தம், கிழக்கே திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம்-ருத்ரனுக்கு கபாலவ்ருத்திச்ய்தவர், அகஸ்தியருக்கு ப்ரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார்: பிண்டியார்.

17. திருவிண்ணகர்:

உப்பிலியப்பன், பூமிதேவி நாச்சியார், விஷ்ணு விமாநம், அர்த்தி புஷ்கரிணி, கிழக்கே திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம், மார்க்கண்டேயருக்கும், பெரிய திருவடிக்கும், காவேரி, தர்ம தேவதைக்கும் ப்ரத்யக்ஷம்.

திருமங்கையாழ்வார்:வண்டுணு, பொருத்தேன், துறப்பேன், பத்தராவியை, அன்றாயர்.
பொய்கையாழ்வார்: வேங்கடமும்.
பேயாழ்வார்:பண்டெல்லாம், விண்ணகரம்.
திருமங்கையாழ்வார்: காரார்மணிநிற,
நம்மாழ்வார்:நல்குரவும்

18. திருகண்ணபுரம்:
சௌரிராஜர் -கண்ணபுரிநாயகி - உத்பலாவர்த்தக விமாநம்- நித்ய புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்-கண்வ மாமுனிக்கு ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
பெரியாழ்வார்: உன்னையும்.
ஆண்டாள்: காட்டில்.
குலசேகர ஆழ்வார்: மன்னு புகழ்
திருமங்கையாழ்வார்:  சிலையிலங்கு, தெல்ளியீர், கரையெடுத்த, விண்ணவர், தந்தைகாலில், தொண்டீர், வியமுடை, வானேரளவு,கைம்மாணம், வண்டார், கன்றுமேய்த்து, செங்கால, சீரார்கணபுரம்,கணபுரத்து, கண்ணனை,
நம்மாழ்வார்:மாலைகண்ணி

19. திருவாலி:

வயலாலிமணவாளன்-அம்ருதகடவல்லி- அஷ்டாக்ஷர விமாநம்- இலாக்ஷணி புஷ்கரிணி- அலாத்நி புஷ்கரிணி- மேற்கே திருமுக மண்டலம்- வீற்றிருந்த கோலம்- அலாதநிகஞ்சம ப்ரஜாபதிக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம்
பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: கள்வன், எஞ்சா கற்றார், படை நின்ற, நெஞ்சுருகி, பேராலி, மாமலர்மேல்.

20. திருநாகை:

சௌந்தர்ய ராஜர் - சௌந்தர்ய வல்லி- சௌந்தர்ய விமாநம்- ஸார புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்- நாகராஜனுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம் -

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: பொன்னிவர்.


R.Jagannathan.



Wednesday, December 1, 2010

108- திவ்யதேசங்களின் அட்டவணையும் குறிப்பும்



பல வருஷங்களாக வைஷ்ணவத்தைப்பற்றி பல அரிய நூல்களை அடியேன் படித்து வருகின்றேன். அன்பர்களுக்கும் அவைகளை-வேகா சேது- என்ற பிளாக்கில்- ஓம் நமோ நாராயணா! என்ற பகுதியிலும், ஹரே குருவாயூரப்பா என்ற பகுதியிலும் தொடர்ந்து அளித்து வருகிறேன். சில புத்தகங்கள் 60- வருஷத்திற்கு முன்பே வெளிவந்தவை-பக்கங்கள் எல்லாம் நசிந்து பொடியாகி விட்டன.

அவைகளை வெளிகொணர்ந்து மீண்டும் அன்பர்களுக்கு அளிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது பகவானின் பெரும் கருணை. அதில் முக்கியமான ஒரு நூல்- 60- வருஷத்திற்கு முன்பு எழுதிய-நாலாயிர திவ்யப்பிரபந்தைப்பற்றி- அந்த நூல் யார் எழுதினார் என்று கண்டுபிடிக்க முடியாமல்-பக்கம் அரித்துவிட்டது. அந்த புத்தகத்தின் படத்தை பார்க்கலாம்-அதில் வரையப்பட்டிருக்கும் ஆழ்வார்களின் படத்தையும் பார்க்கலாம்- இந்த படங்கள் வேறு எங்கும் பார்க்கமுடியாத ஒரு அரிய பொக்கிஷம்.

அந்த புத்தகத்திலிருந்து சில முக்கியமான பகுதிகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம்

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பெற்ற
108- திவ்யதேசங்களின் அட்டவணையும் குறிப்பும்

கீழ் கண்ட பாசுரம் வெகு அரிது: திவ்ய தேசத்தைப்பற்றி:

ஈரிருப தாஞ்சோழ மீரொன்ப தாம்பாண்டி
ஓர்பதின்மூன் ராமலைநா டோரிண்டாம்- சீர்நடுநா
டாறோம் ரெட்டுதொண்டையவ்வடநா டாறிண்டு
கூறுதிரு நாடொன்றாம் கொள்

திவ்ய தேசங்களின் ப்ரபாவம்:

1. சோழ நாட்டு திருப்பதிகள்.


1. க. திருவரங்கம் பெரிய கோயில்:
ஸ்ரீரங்கம்- ஸ்ரீரங்கநாதன் - நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார்- ப்ரணவாக்ருதி விமானம்-காவேரி நதி- சந்திர புஷ்கரிணி-புன்னை விருக்ஷம்- புஜங்க சயநம்-தெற்கே திருமண்டலம்-தர்மவர்மாவுக்கும், ரவிதர்மனுக்கும் ப்ரத்யக்ஷம்.

மங்களாசாஸனம் செய்த ஆழ்வார்கள்-பாசுரங்களின் தலைப்பு:

பெரியாழ்வார்: கருவுடை- சீமாலிகன் - வண்டுகளித்து- கன்னிநன்மா -மாதவத்தோ- மரவடியை- துப்புடையா-
ஆண்டாள்: தாமுகக்கும்.
குலசேகராழ்வார்: இருளிரிய- தேட்டரும்- மெய்யில்-திருச்சந்த விருத்தம்-மண்ணு.
தொண்டரடிபொடியாழ்வார்: காவலில்- கதிரவன்.
திருப்பாணாழ்வார்: அமலன்
திருமங்கையாழ்வார்: பள்ளியாவது-உந்திமேல்-வெருவாதாள்- கைம்மானம்-பண்டை- ஏழை-உரங்களால்- தரங்கநீர்- புனைவளர்-கண்ணன்- அணியார்- இம்மையை-ஆவியை- இரும்பு- பிண்டியார்- பட்டுடுக்கும்- நெஞ்சுருகி- முளைக்கதிரை-கார்வண்ணம்- முற்றாரா- கைவள.
பொய்கையாழ்வார்: ஒன்றுமறந்து.
பூதத்தார்: மனத்துள்ளான்-பயின்றதரங்கம்- தமருள்ளம்
பேயாழ்வார்: விண்ணகரம்.
திருமழிசையாழ்வார்: பாலில்கிடந்து - அவ்வென்னை-நாகத்துணை- ஆள்பார்த்து-
நம்மாழ்வார்: தண்ணந்துழாய்.
திருமங்கையாழ்வார்: ஆராமம்சூழ்ந்த- மன்ணுமரங்கத்து-


2. உ.. உறையூர்- நிசுளாபுரி: திவ்ய தேசங்களின் ப்ரபாவம்:

அழகிய மணவாளன் - கல்யாண விமானம் - வாஸலக்ஷ்மி- உறையூர்வல்லி- கல்யாண தீர்த்தம்-
குடமுருட்டி ஆறு- வடக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்- முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ரவிதர்ம ராஜாவிற்கும் ப்ரத்யக்ஷம்.
மங்களாசாஸனம் செய்த ஆழ்வார்கள்-பாசுரங்களின் தலைப்பு:
திருமங்கையாழ்வார்- கோழியும் கூடலு

3. தஞ்சை மாமணிக்கோவில்:

நீலமேகப்பெருமாள்- செங்கமலவல்லி-சௌந்தர்ய விமானம் -கன்னிகா புஷ்கரணி- அமுத தீர்த்தம்- கிழக்கே திருமுகமண்டலம்- வீற்றிருந்த திருக்கோலம்-பராசமுனிக்கு ப்ரத்யக்ஷம்.
தஞ்சையாளிநகர்:
நரசிங்க பெருமாள்- தஞ்சைநாயகி-வேதசுந்தர விமானம்-சூரிய புஷ்கரிணி -ஸ்ரீராம தீர்த்தம்- கிழக்கே திருமுக மண்டலம்-வீற்றிருந்த திருக்கோலம்-மார்கண்டேயருக்கு ப்ரத்யக்ஷம்-
திருமங்கையாழ்வார்-எம்பிரான், உடம்புருவில்.
பூதத்தார்-தமருள்ளம்.

4. அன்பில்:

திருவழகிய நம்பி- அழகியவல்லித்தாயார்- தாரகவிமாநம்- மண்டூக புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்-நின்ற திருக்கோலம் -புஜங்கசயனம்-ப்ரம்மாவிற்கும், வால்மீகருக்கும் ப்ரத்யக்ஷம்
திருமழிசையாழ்வார்- நாகத்தணை

5. கரம்பனூர்( உத்தமர் கோயில் ):

புருஷோத்தமன்- பூர்வாதேவி- உத்யோக விமாநம்- கதம்ப தீர்த்தம்- வாழைமரம்-கிழக்கே திருமண்டலம்- புஜங்க சயனம்- கதம்ப மகரிஷிக்கும், திருமங்கையாழ்வாருக்கும்,உபரி சரவஸுவுக்கும், ஸநக, ஸநந்தன குமாரர்களுக்கும் ப்ரத்யக்ஷம்
திருமங்கையாழ்வார்: பேரானை.

6. திருவெள்ளரை:

புண்டரீகாக்ஷன்- பங்கையச்செல்வி- செண்பகவல்லி - விமலாக்ருதி விமாநம்- குச தீர்த்தம், மணிகர்ணிகா தீர்த்தம், சக்ர தீர்த்தம், திவ்ய புஷ்கரணி, புஷ்கல தீர்த்தம், பத்ம தீர்த்தம், கந்த புஷ்கரிணி, க்ஷீர புஷ்கரிணி, வராக தீர்த்தம், சுவேதகிரி-கிழக்கே திருமண்டலம்-நின்ற திருக்கோலம்- பெரிய திருவடிக்கும், சிபி சக்ரவர்த்திக்கும், பூதேவிக்கும், மார்க்கண்டேயருக்கும் ப்ரத்யக்ஷம்-

பேயாழ்வார்: உன்னையும், இந்திரனோடு
திருமங்கையாழ்வார்: வென்றிமா, துளக்கமில், பேராமருதிறுத்தா, மின்னயிருசுடரை

7. புள்ளம்பூதங்குடி:

வல்விலிராமன் - பொற்றாமரையாள்-சோபாவிமாநம்- க்ருத்ர தீர்த்தம்- கிழக்கே திருமண்டலம்- புஜங்க சயனம்- சக்ரவர்த்தி திருமகனுக்கும், க்ருத்ர ராஜனுக்கும் ப்ரத்யக்ஷமாய் மோக்ஷம் தந்தவிடம்.

திருமங்கையாழ்வார்: அறிவதரியான்.

8. திருப்பேர்நகர்:

அப்பக்குடத்தான்- கமலவல்லி தாயார்- இந்திர விமாநம்- மேற்கே திருமண்டலம்- புஜங்க சயனம் - வலது கையின் கீழே குடம்- உபமனுவுக்கும், பராசரருக்கும் ப்ரத்யக்ஷம்.

பெரியாழ்வார்: கொங்கும், கொண்டல்
திருமங்கையாழ்வார்: கையிலங்கு, பிண்டியார், மதிளகச்சி
திருமழிசையாழ்வார்: நீரகத்தாய்,
நம்மாழ்வார்:திருமாலிரும்.

R.Jagannathan