Thursday, December 9, 2010

106-திவ்யதேச அட்டவனை-2


106-திவ்யதேச அட்டவனை-2

10. திரு ஆதனூர்:

ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரெங்கநாயகி- ப்ரணவ விமாநம்- சூரிய புஷ்கரிணி -கிழக்கே திருமுகமண்டலம்- புஜங்க சயனம்-காமதேனுவுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: அன்னவனை.

11. திருவழுந்தூர்:

ஆமருவியப்பன்- செங்கமலவல்லி தாயார்- கருட விமாநம் - தர்சனபுஷ்கரிணி- கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் - உபரிசர்வஸுவுக்கும், காவேரிக்கும், தருமதேவதைக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: தந்தைகாலில், சிங்கமதாய், திருவுக்கும், செங்கமல, கல்லுயர்ந்த, தேமருவு, கீறார்கணபுரம், அள்ளல்வாய்.

12. சிறுப்புலியூர்:

அருமா கடல்- திருமாமகள் நாச்சியார்- நந்தவர்த்தந விமாநம்- அநந்தஸரஸுமாநஸ புஷ்கரிணி- தெற்கே திருமிக மண்டலம்- புஜங்க சயனம்- வ்யாஸ மகரிஷிக்கும், வ்யாக்ரமருக்கும் ப்ரத்யக்ஷம்

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்:  கள்ளம்.

13. திருச்சேறை: ஸார க்ஷேத்ரம்:

சாரநாதன்- ஸாரநாயகி- ஸார விமாநம்- ஸார புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்-நின்ற திருக்கோலம்- காவேரிக்கு ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: கண்சோர- வானையார்- சீரார்கணபுரம்- மன்னியதன்.

14. தலைச்சங்க நாண்மதியம்:

நாண்மதிய பெருமாள்- வெண்சுடர் பெருமாள் -தலைச்சங்கநாச்சியார்-செங்கமலவல்லி-சந்திர விமாநம்- கிழக்கே திருமுக மண்டலம்-சந்திர புஷ்கரிணி- நின்ற திருக்கோலம்-தேவப்ருந்தங்களுக்கும், சந்திரனுக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: நன்னீர்.

15. திருக்குடந்தை ( கும்பகோனம் )

சாரங்கபாணி பெருமாள்- ஆராவமுதன்- கோமளவல்லி-வைதிக விமாநம்- ஹேமபுஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- உத்யோக சயனம்-ஹேம மஹரிஷிக்கு ப்ரத்யக்ஷம்

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
பெரியாழ்வார்-கொங்கும், குடங்கள்
திருமழிசையாழ்வார்: இலங்கை, நடந்த.நாகத்தணை
திருமங்கையாழ்வார்: ஆவியே, இற்பிறப்பு, அன்றாயர், வாளாய, குயிலாலும், வாராளும், பொங்கேறு, வந்த நாள், பேரானை, வந்தாய், தோடவிழ்-வானையார், இங்கே, அண்டத்தின், மூவரில், காவியை, பொங்கார், முற்றாரா, அன்றாயர், ஒரு பேருந்தி, செல்வமல்லார், காரார் குடந்தை, பொன்னிம
.பூதத்தாழ்வார்: .எங்கள் பெருமான்., தமருள்ளம்.
பேயாழ்வார்: சேர்ந்த திருமால், விண்ணகரம்.
நம்மாழ்வார்:ஆராவமுதே,

16. திருகண்டியூர்:

அரன்சாபம் தீர்த்தவர் -கமலவல்லி நாச்சியார், கமலாக்ருதி விமாநம், கபால தீர்த்தம், கிழக்கே திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம்-ருத்ரனுக்கு கபாலவ்ருத்திச்ய்தவர், அகஸ்தியருக்கு ப்ரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார்: பிண்டியார்.

17. திருவிண்ணகர்:

உப்பிலியப்பன், பூமிதேவி நாச்சியார், விஷ்ணு விமாநம், அர்த்தி புஷ்கரிணி, கிழக்கே திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம், மார்க்கண்டேயருக்கும், பெரிய திருவடிக்கும், காவேரி, தர்ம தேவதைக்கும் ப்ரத்யக்ஷம்.

திருமங்கையாழ்வார்:வண்டுணு, பொருத்தேன், துறப்பேன், பத்தராவியை, அன்றாயர்.
பொய்கையாழ்வார்: வேங்கடமும்.
பேயாழ்வார்:பண்டெல்லாம், விண்ணகரம்.
திருமங்கையாழ்வார்: காரார்மணிநிற,
நம்மாழ்வார்:நல்குரவும்

18. திருகண்ணபுரம்:
சௌரிராஜர் -கண்ணபுரிநாயகி - உத்பலாவர்த்தக விமாநம்- நித்ய புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்-கண்வ மாமுனிக்கு ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
பெரியாழ்வார்: உன்னையும்.
ஆண்டாள்: காட்டில்.
குலசேகர ஆழ்வார்: மன்னு புகழ்
திருமங்கையாழ்வார்:  சிலையிலங்கு, தெல்ளியீர், கரையெடுத்த, விண்ணவர், தந்தைகாலில், தொண்டீர், வியமுடை, வானேரளவு,கைம்மாணம், வண்டார், கன்றுமேய்த்து, செங்கால, சீரார்கணபுரம்,கணபுரத்து, கண்ணனை,
நம்மாழ்வார்:மாலைகண்ணி

19. திருவாலி:

வயலாலிமணவாளன்-அம்ருதகடவல்லி- அஷ்டாக்ஷர விமாநம்- இலாக்ஷணி புஷ்கரிணி- அலாத்நி புஷ்கரிணி- மேற்கே திருமுக மண்டலம்- வீற்றிருந்த கோலம்- அலாதநிகஞ்சம ப்ரஜாபதிக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம்
பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: கள்வன், எஞ்சா கற்றார், படை நின்ற, நெஞ்சுருகி, பேராலி, மாமலர்மேல்.

20. திருநாகை:

சௌந்தர்ய ராஜர் - சௌந்தர்ய வல்லி- சௌந்தர்ய விமாநம்- ஸார புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்- நாகராஜனுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம் -

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: பொன்னிவர்.


R.Jagannathan.



1 comment:

  1. திவ்யதேச வைபவங்களை எடுத்துக் கூறும் தங்கள் பணி மிகவும் உயர்ந்தது. ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் பற்றி எழுதுகையில் அதைச் சென்றடையும் வழியும் சொன்னால் என் போன்றவர்க்கு உதவியாக இருக்கும். ஒரு சில திவ்ய தேசங்களில் இன்று ஆழ்வார்கள் பாடிய மூர்த்திகளும், கோவில்களும் இல்லை என்றும் கூறுகிறார்கள். அவை பற்றிய விவரங்கள் இணைக்கப் பட்டால் நன்றியுடைவனாவேன்.

    ReplyDelete