Saturday, February 27, 2010

பாதுகா ஸஹஸ்ரம்- ப்ரபாவ பத்ததி-3பாதுகா ஸஹஸ்ரம்- ப்ரபாவ பத்ததி-3

வந்தே தத் ரங்கநாதஸ்ய மான்யம் பாதுகயோர்யுகம்
உந்நதாநாமாவநதி: நதாம் யத்ர சோந்நதி: //


பாதுகையை வணங்காதவர்களுக்கு தாழ்ந்த தன்மை உண்டாகிறது. அதை வணங்கியவர்கள்: உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். எல்லோராலும் கொண்டாடப்படும் அப்பேற்ப்பட்ட பாதுகையை வணங்கி இ.ந்த 70- ஸ்லோகங்களினால் பாதுகையின் ப்ரபாவத்தை தொடற்கிறேன். ஆழ்வாரை வணங்கியவர்கள் மோக்ஷத்தை அடைகிறார்கள். வணங்காதவர்கள் சம்ஸார ப.ந்தத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.


வேதோபப்ருஹ்மணகுதூஹலி.நா நிபத்தம்
விச்வம்பராச்ருதிபவேந மஹர்ஷிணா யத் /
வ்யாஸேந யச்ச மதுஸூதநபாதரக்ஷே
த்வே சக்ஷுஷீ த்வதநுபாவமவேக்ஷிதும் .ந: //


வேதத்தின் உண்மையான அர்த்தம் தெரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அத்னால் வால்மீகி ராமாயணத்தையும் வ்யாஸ  பகவான் மஹாபாரதத்தையும் அருளிச்செய்தார்கள்.  இவ்விரு காவ்யங்களும் பாதுகையின் பெருமைக்கு இரு கண்கள். அதாவது இந்த இரு க்ரந்தகளிலும் பாதுகையின் பெருமையை பல இடங்களில் எடுத்துக்காட்டியிருக்கின்றன.. இரண்டுமே பெருமாள் திருவடியை பற்றினவர்களின்  பெருமையை சொல்லுகின்றன.


தத் விஷ்ணோ: பரமம் பதத்ரயுகளம் த்ரய்ய.ந்தபர்யந்தகம்
சி.ந்தாதீதவிபூதிகம் விதரது ச்ரேயாம்ஸி பூயாம்ஸி ந:
யத்விக்ரா.ந்திதசாஸமுத்திதபதப்ரஸ்யந்திபாதஸ்வி.நீ
ஸக்யே.நேவ ஸதாநதஸ்ய தநுதே மௌளௌ ஸ்திதம் சூலிந: 


பாதுகையின் பெருமையை பற்றி உப.நிஷத்துகள் சொல்லுகின்றன. பாதுகையின் பெருமை எல்லையில் அடங்காதது. அப்படிப்பட்ட பாதுகை நமக்கு எல்லையில்லத க்ஷேமங்களை கொடுக்கவேண்டும். திருவிக்ரமாவதாரம் செய்த பெருமாளின் திருவடியினின்றும் உண்டான கங்கயுடன் கூட வஸிப்பதால் அ.ந்த கங்கையோடு எப்போதும் பரம சிவன் தலையில் பாதுகையாக இருக்கிறது. 


பதகமலரஜோபிர் வாஸிதே ரங்கபர்த்து:
பரிசித.நிகமா.ந்தே பாதுகே தாரய.ந்த:
அவிதிதபரிபாகம் ச.ந்த்ரமுத்தம்ஸய.ந்தே
பரிணதபுவனம் தத் பத்மமத்யாஸதே //


ஸ்ரீரங்க..நாதனுடைய திருவடிதாமரைகளின் தூளிகளால் வாஸனையுள்ள்தும் வேதா.ந்தக்கு நிகரான பாதுகைகளை தலையில் வைத்துக்கொள்கிறவர்களுக்கு  ப்ரம்ம பட்டம் அல்லது சிவ பட்டமாவது வருகிறது.


பதஸரஸிஜயோஸ்த்வம் பாதுகே ரங்கபர்த்து:
ம.நஸி மு.நிஜ.நா.நாம் மௌளிதேசே ச்ருதீ.நாம்
வசஸி ச ஸுகவீ.நாம் வர்த்தஸே நித்யமேகா
ததிதமவகதம் தே சாச்வதம் வைச்வரூப்யம் //


பாதுகையே! நீ ஒன்றாய் இருந்தாலும் அநேக இடங்ககளில் எப்போதும் இருக்கிறாய்.ஸ்ரீ கிருஷ்ணனை போல் உனக்கும் பல சரீரங்கள் இருக்கின்றது. பெருமாள் திருவடி, ருஷிகள்: மனதில், வேதாந்தங்கள், கவிகள் வாக்கில்- இப்படியாக இருக்கிறாய். பெருமாள் உன்னை தன் திருவடியில் சாற்றிக்கொண்டிருக்கிறார். உப.நிஷத்துக்கள் உன்னை பற்றி சொல்லுகிறது..


ஸக்ருதபி புவ.நேஸ்மி.ந் சார்ங்கிண: பாதுகே த்வாம்
உப.நிஷத.நுகல்பைருத்தமாங்கைர்ததா.நா /
நரகமிவ மஹா.ந்தோ நாகமுல்லங்கய.ந்த:
பரிஷதி நிவிச.ந்தே ப்ராக்த.நாம் குரூணாம்//


பாதுகையே ! உன்னை ஒரு தரமாவது பக்தியோடு தலையில் வைத்துக்கொள்ளுகிறவர்கள் மிக பெரியவர்களாகி ஸ்வர்க்கத்தை விரும்பாமல் ஆச்சார்யர்கள் கோஷ்டியே சிற.ந்தது என்று இரு.ந்துவிடுகிறார்கள் ( மோக்ஷத்தை அடைகிறார்கள் )


பரிசிதபதபத்மாம் பாதுகே ரங்கிணஸ்த்வாம்
த்ரிபுவ.நமஹ.நீயாம் ஸாதரம் தாரய.ந்த: /
நிஜஸிரஸி நிலீநம்  தேவீ ம.ந்தாரமால்யம் 
நிகபரிமளைஸ்தே வாஸய.ந்தீவ தேவா: //


ஏ ! பாதுகையே ! எல்லா தேவதைகளும் நீ பெருமாள் திருவடியில் இருப்பதாலும் வேதங்கள் உன்னை பற்றி சொல்வதாலும் புஷ்பத்தை காட்டிலும் அதிக ப்ரீதியுடன் உன்னை தலையில் வைத்துக்கொள்ளுகிறார்கள்


சரணாகதஸார்த்தவாஹசீலாம்
ச்ருதிஸீம.ந்த பதப்ரஸாத.நார்ஹாம்
அதிரங்கமுபாஸ்மஹே முராரேர்
மஹ.நீயாம் தப.நீய பாதுகே த்வாம் //


ஏ! பாதுகே! வேதா.ந்தங்களால் சொல்லப்பட்ட நீ ஸ்ரீரங்கவிமானத்திலிருந்து ஜனங்களை கூட்டம் கூட்டமாக சரணாகதி பண்ணும்படியாக பண்ணி, பரமபதத்திற்கு அனுப்புகிறாய். அப்பேற்ப்பட்ட உன்னை ஸ்ரீரங்கவிமானத்தில் தியானிக்கிறேன்.


தவ கேசவபாதுகே ப்ரபாவோ
மம துஷ்கர்ம ச நந்வநந்தஸாரே
நியமே.ந ததாபி பஸ்சிமஸ்ய
ப்ரதமே.நைவ ப்ராபவம் ப்ரதீம: //


ஏ பாதுகேயே! உனது பெருமைகளுக்கும் எனது பாபங்களுக்கும் எல்லையே இல்லை. ஆனாலும் உன் பெருமைகளினால் எனது பாபங்கள் நிச்சியமாக போய்விடுகின்றன
மஹா பாபியாக இருந்தாலும் ஆச்சார்யர்களுடைய சம்பந்தத்தினால் சகல பாபங்கக்ளும் போய்விடுகின்றன என்பது கருத்து.


பாதௌ முராரேச் சரணம் ப்ரஜா.நாம்
தயோஸ் ததேவாஸி பதாவ.நி த்வம்
சரண்யதாயா: த்வம.ந.ந்ய ரக்ஷா
ஸமத்ருஸ்யஸே விஸ்ரமபூமிரேகா //


ஏ பாதுகையே! உலகங்ககளை எல்லாம் ரக்ஷிக்கின்ற பெருமாள் திருவடிகளை கூட நீ தாங்குகின்றாய். உனக்கு வேறு ரக்ஷகர் தேவையில்லை ஆதலால் காப்பாற்றும் விஷயம் உனக்கு இயற்கையாகவே இருக்கிறது


முதல் 10- ஸ்லோகங்ககளில் ஸ்ரீ தேசிகன் பாதுகையினுடைய ப்ரபாவத்தை ஸாதித்தார். அடுத்த 10-ல் பாதுகைஎன்கிற சடகோபன் - என்ற பெயரின் ப்ரபாவத்தை ஸாதித்தார். திருவடியின் பெருமையை 70-ஸ்லோகங்களினால் தலை கட்டுகிறார்.


R.Jagannathan. 
.

  

No comments:

Post a Comment