Monday, March 1, 2010

சமர்ப்பண பத்ததி -4

பாதுகா

 சமர்ப்பண பத்ததி -4


பஜாம: பாதுகே யாப்யாம் பரதஸ்யாக்ரஜஸ்ததா
ப்ராய: ப்ரதிப்ரயாணாய ப்ராஸ்தாநிகமகல்பயத் //


லோகத்தில் ஒருவன் ஊருக்கு போக ஏற்பாடு செய்து ஆனால் அந்த நாளில் பெட்டி ப்டுக்கையை வேறு இடத்தில்வைப்பார். அதற்கு பரஸ்தானம்  என்று பெயர். அதுபோல் பரதன் அபேக்ஷித்த காலத்தில் ஸ்ரீ ராமனால் எழு.ந்தருள முடியாமல் போனதால் தன் பாதுகையை பர்ஸ்தானம் பண்ணினார். ( பெருமாளிடம் நாம் அவரோடு இருக்க ஆசைப்பட்டால் முதலில் நல்ல ஆசார்யரை நமக்கு அளிக்கிறார். ஆசார்யர் சொல்படி நட.ந்தால் அவருடைய பரிபூர்ண அ.நுக்ரஹத்தால் ஜீவனும் பெருமாளும் பிரியாமல் சேருகிறார்கள். )


ராமே வனம் வ்ரஜதி பங்க்திரதே ப்ரஸுப்தே
ராஜ்யாபவாதசகிதே பரதே ததா.நீம்
ஆச்வாஸயேத் க இவ கோஸலவாஸி.நஸ்தா.ந்
ஸீதேவ சேத் த்வமபி ஸாஹஸவ்ரித்திராஸீ //


ஸ்ரீராமன் காட்டுக்கு எழு.ந்தருளிவிட்டார். தசரதர் மரணமடை.ந்து விட்டார். பரதனோ ராஜ்யத்தை ஒப்புக்கொள்ளமாட்டேனென்கிறார். அப்போது பாதுகையை அனுப்பாவிட்டால் கோஸல மக்கள் தவித்து போய்விடுவார்கள். 


வாக்யே கரீயஸி பிதுர்விஹிதேப்யத்ருபத்யா
மாதுர்மனோரதமசேஷமவ.ந்த்யயிஷ்ய.ந்
மத்யே ததா ரகுபதி: பரதஸ்ய தே.நே
மாதஸ்த்வயைவ மணிமௌளி நிவேச லக்ஷ்மீம் //


தசரதர் கொடுத்த வரத்தினால்- ஸ்ரீ ராமர் காட்டுக்கு போகவேண்டும்-பரதன் ராஜ்யம் ஆளவேண்டும் என்று இரு வரன்களை கைகேயி கேட்டாள். ராமன் காட்டுக்கு போனாலும் மற்ற வரனை நிறைவேற்ற பாதுகைகளால் பரதன் சிரஸில் கிரீடம் வைத்தார்-ஸமர்ப்பணமாக.


ரகுபதி பதபத்மாத் ரத்னபீடே நிவேஷ்டும்
பரதசிரஸி லக்.நாம் ப்ரேக்ஷ்ய: பாதாவ.நி த்வாம்
பரிணதபுருஷார்த்த: பௌரவர்க்க: ஸ்வயம் தே
விதிமபஜத ஸர்வோ வ.ந்தி வைதாளிகா.நாம் //


பாதுகையே ! உனக்கு பட்டாபிஷேகம் செய்வத்ற்காக பரதன் ஸ்ரீ ராமன் திருவடியிலிரு.ந்து உன்னை தன் தலையில் எழு.ந்தருள பண்ணிக்கொண்டபோது கோஸல தேசத்து ஜனங்கள் தங்களுக்கு எல்லா புருஷார்த்தங்களும் அடை.ந்து உன்னை ஸ்தோத்ரம் செய்தார்கள்.


யத் ப்ராத்ரே பரதாய ரங்கபதிநா ராமத்வமாதஸ்துஷா
நித்யோபாஸ்ய நிஜாங்கிரி நிஷ்க்ரியதா நிஸ்சித்ய விஸ்ராணிதம்
யோகக்ஷேமவஹம் ஸம்ஸ்தஜகதாம் யத்கீயதே யோகிபி:
பாத்த்ராணமிதம் மிதம்பச கதாமஹ்நாய மே நிஹ்நுதாம் // 


ஸ்ரீ ரங்க.நாதன் ராமனாக அவதரித்து தன் பாதுகையை தன் திருவடிக்கு பதிலாக பரதனுக்கு அளித்தார். பெருமாள் தனக்கு பதிலாக நல்ல ஆசார்யர்களையும் பாகவதர்களையும் நமக்கு அளித்து அவர்களால் எல்லா லோகங்களும் க்ஷேமங்களை அடைகின்றன. அவர்கள் கடாக்ஷத்தினால் என் அல்பத்தனம் போகவேண்டும். ( அதாவது-பெருமை வாய்ந்த பாதுகையினால் என் அல்பத்தனத்தினால் போகவேண்டும். )


பரதஸ்யேவ மமாபி ப்ரஸமித விஸ்வாபவாத துர்ஜ்ஜாதா:
ஸேஷேவ ஸிரஸி நித்யம் விஹரது ரகுவீரபாதுகே பவதீ //


பரதன் பாதுகையை பெற்று தன் தலையில் எழு.ந்தருளப் பண்னி கொண்டபடியால் அவருக்கு லோக அபவாதம் வராமல் தடுக்கப்பட்டது. அதுமாதிரி என் தலையில் பரிவட்டம் போலிரு.ந்து என்னுடைய சகல அபவாதங்களையும் போக்கடிக்க வேண்டும். ( நல்ல ஆசார்யர்களை பக்தியுடன் ஆச்ரயித்தால் அவனுக்கு அபவாதம் முதலான சகல கெடுதல்களும் போய்விடும் )


 R.Jagannathan. 

No comments:

Post a Comment