பெருமாள் அந்த்புரம் செல்லும்போது பாதுகையை சாற்றிக்கொண்டு செல்கிறார்.நாயகிகளின் சுகத்தை பாதுகையின் மூலம் பெருமாள் அனுபவிகின்றார் - அதவத் ஆழ்வார்கள் தங்களை பெண்ணாகவும் பெருமாளை புருஷனாகவும் பாவிக்கின்றனர் என்பது கருத்து.
அவதாத்ஹிமாம்சுகாநுஷக்தம்
பதரக்ஷே! த்வயி ரங்கிண: கதாசித்
கிமபி ஸ்திதம் அத்விதீயமால்யம்
விரளாவஸ்திதமௌக்திகம் ஸ்மராமி //
பாதுகையே !உன்னை அணிந்து கொண்டு ஸ்ரீ ரங்கநாதன் அபிஷேகத்தின்போது வெண்மை பட்டாடையோடு துளஸி மாலையுடன் காட்சி தரும்போது பக்தர்கள் எல்லாம் தங்களை மெய்மறந்து சேவிக்கின்றார்கள்.
சரணகமலஸங்காத் ரங்க.நாதஸ்ய நித்யம்
நிகமபரிமளம் த்வம் பாதுகே ! நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதிவஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம் //
பாதுகையே ! பெருமாள் தன் திருமார்பில் லக்ஷ்மியை தாங்கி வைஜயந்திமாலையுடன் காட்சி தருகிறார். உன்னிடத்தில் பகவானின் திருவடி சம்பந்தம் நிறைய இருப்பதால் நீ வேத வாஸனையை அள்ளி தருகிறாய்.
அகிலாந்த: புரவாரேஷு
அ.நேகவாரம் பதாவ.நி ஸ்வைரம்
அநுபவதி ரங்கநாதோ
விஹாரவிக்ராந்தி ஸஹசரீம் பவதீம்//
பாதுகையே! ஸ்ரீ ரங்கநாதன் எப்போதும் எங்கே எழு.ந்தருளினாலும் உன்னை சாற்றிக்கொண்டுதான் புறப்படுகிறார். அவருக்கு பல தேவிகள் இருப்பதால் அவர்களுக்குள் சச்சறவு வராமல் இருக்க ஒரு முறை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் நீயோ அவரிடமே எப்போதும் இருக்கிறாய்!
ஏ பாதுகையே ! ஜனங்களுடைய ஜனன மரணத்தை போக்குகின்ற உன்னை ஸேவிக்கின்றேன். உப.நிஷத்துக்கள் பெருமாளை ஸ்தோத்ரங்கள் மூலம் துயில் எழுப்பி பிறகு பகவான் உன்னை சாற்றிக்கொள்ள பிரார்திக்கின்றன.
ஸ்ரீ ரங்கநாதா ! வெளியே ப்ரம்மா, சிவன், ஸநகர் முதலிய ரிஷிகள் உங்கள் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கருணை காட்டவேண்டும். தங்களது திருவடி சுகத்தை அநுபவிப்பது என்பது ஒரு சாம்ராஜ்யத்தையே அடைவது போன்றதாகும். அதை முதலில் பெறுவது பாதுகையாகிற நீ தான்.
ஸ்ரீ ரங்கநாதனே ! தாங்கள் இந்த ஆஸனத்திலிருந்து வேறு ஆஸனத்திற்கு எழுந்தருள வேணும்.
அதற்காக ப்ரம்மா பாதுகையை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார். அதை சாற்றிக்கொண்டு சேவை தரவேண்டும்.
பாதுகைக்கு பட்டாபிஷேகம் நட.ந்தது மகோன்னதமான உத்ஸவமாக இருந்தது. அதைவிட கோலாகலமான நிகழ்ச்சி அது ராமர் 14- வருஷம் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியபோது பரதன் அந்த பாதுகையை திரும்ப ராமனிடம் சேர்த்தபோது. அப்பேற்ப்பட்ட பாதுகையை நான் ஸேவிக்கிறேன்.
உபாஸ்ய வர்ஷாணி சதுர்தச த்வாம்
உத்தாரிகாம் உத்தரகோஸலஸ்தா:
ஸநந்தநாத்யைரபி துர்விகாஹம்
ஸா.ந்தா.நிகம் லோகமவாபுரக்ர்யம் //
பாதுகையே ! வடக்கு கோஸல நாட்டவர்கள் உனக்கு 14-வருஷம் அடிமைகளாக இருந்ததால் ஆழ்வார்கள், யோகிகள் அடையமுடியாத ஸாந்தானிகம் என்ற லோகத்தை அடைந்தார்கள். ப்ரப்த்தி பண்ணாமல் உன்னால் கோஸல தேசத்தவர்கள் எல்லோரும் பகவானை வந்து அடை.ந்தது பாதுகையின் தனி சிறப்பினால். ( ஆசார்யர்கள், பாகவதர்கள்சிலருக்கு ப்ரப்த்தி பண்ணி வைக்கிறார்கள்-அதனால் சிலர் ப்ரப்த்தி பண்ணாமலேயே பலனை அடைகிறார்கள் என்பது கருத்து )
ராமஸ்ய ராக்ஷஸ வதத்வரிதஸ்ய காலே
பாதாவநி ப்ரகடயந் இவ பார்ஷ்ணிகுப்திம்
ஆசித்ரகூடம் அதிகம்ய சசம்ஸ வார்த்தாம்
அவ்யாஹதத்வதபிஷேக ம்ருதங்கநாத: //
பாதுகைக்கு பட்டாபிஷேகம் பண்ணும்போது வாத்ய கோஷங்கள் முழங்கின அந்த சப்தம் சித்ரகூடம் வரை கேட்டதாம். அது ஸ்ரீ ராமருக்கு பின் பக்கபலமாக நாங்களும் வ.ந்துவிட்டேன் என்று அறிவிப்பது போல இருந்ததாம். ( பகவான் ஆசார்யர்கள் மூலமாகத்தான் ஜீவனுக்கு முக்தி அளிக்கிறார் என்பது கருத்து )
தேவி த்வயா ஸ்நபநஸம்பதி ஸம்ச்ரிதாயாம்
தக்தே புரே தசமுகஸ்ய வலீமுகேந
ஆஸீத் தத: ப்ரப்ருதி விச்வஜநநப்ரதீதம்
அத்ப்யோ அக்நிரிதி அவிததம் வசநம் முநீநாம் //
ஏ பாதுகையே! உனக்கு பட்டாபிஷேகம் முடிந்தது. லங்கையிலோ ஹனுமார் லங்கையே கொளுத்தினார். அப்போது ஜலதில் இருந்து அக்னி கிளம்பியது.இப்படி ஆகும் என்று ரிஷிகள் முன்பே சொல்லியிருந்தார்கள். அ.ந்த வாக்கு பலித்தது.
நிர்கத்ய தேவி பரதாஞ்சலி பத்மமத்யாத்
பூய: ஸமாகதவதீ புருஷோத்தமேந
பத்மேவ பத்ரமகிலம் மணிபாதரக்ஷே
ப்ராதுச்சகார பவதீ ஜகதாம் த்ரயாணாம் //
ஏ பாதுகையே ! துர்வாஸர் இ.ந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவாக ல்க்ஷ்மி மறைந்துபோய் பிறகு பாற்கடல் கடையப்பெற்றபோது அதிலிருந்து தாமரை பூவில் அமர்ந்து பெருமாளை அடை.ந்து எல்லா உலகங்களுக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணினாள். அதுபோல பரதர் உன்னை ஸ்ரீ ராமர் திருவடியில் சேர்த்தார். அவரோடு கூட நீ சகல உலகங்களுக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணினாய்.
பொழுது விடிந்தால் ராமருக்கு பட்டாபிஷேகம் என்று இருந்தபோது அவர் காட்டிற்கு போகவேண்டும் என்றாயிவிட்டது. ராமரோ பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்ட பொருள்களை எல்லாம் வலம் வந்து கௌரவித்தார். அப்படி மனப்பூர்வமாக ஸ.ந்தோஷப்பட்டதால் அந்த பட்டாபிஷேகம் உனக்கு கிடைத்தது.
( பெருமாள் நல்ல ஆசார்யர்களுக்கு தன்னை காட்டிலும் மேலாக மரியாதை செய்கிறார் என்பது கருத்து )
ஏ பாதுகையே ! நீ பட்டாபிஷேகம் அடைந்து ஸிமாஸனத்தில் அமர்ந்து நல்ல பராக்ரமத்தோடு ராஜ்ய பரிபாலனம் செய்து ஜனங்களுக்கு நல்ல பாதுகாவனாக இருந்தாய். ஒன்றிலும் ஒரு குறையில்லாமல் பார்த்துக்கொண்டாய்.
ராமனை விட்டு பிரிந்ததால் பூமி வருத்தம் அடைந்தது. அதை போக்க நீ பட்டாபிஷேகம் செய்து கொண்டு அதை குளிர்ச்சியடைய செய்தாய்.நித்யசூரிகளும் பெருமாளும் இவ்வுலகில் அவதாரம் செய்தது நம்முடைய நன்மைக்காகத்தான்.
உன்னுடைய பட்டாபிஷேக ஜலம் எல்லாம் ஆறுகளில் சேர்ந்ததினால் ஆறுகள் வற்றாதவைகள் ஆயின. துங்கபத்ரா நதி போல காட்சியளித்தன என்கிறார் ஸ்வாமி தேசிகர். .நம்மாழ்வார் அவதரித்து அவருடைய ப்ரப்ந்தத்தினால் எல்லா லோகங்களும் க்ஷேம ம் அடைந்தன.
ஏ பாதுகையே ! ஸ்ரீ ராமர் கொஞ்ச நாள் உன்னை பரதனுடன் சென்று அவனுக்கு ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவினார். கொஞ்ச நாள் பிரிவது உனக்கு ஒரு கடுமையான வ்ரதம். அதை நீ செய்ததால் அசுரர்கள் அழிந்து மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.ஆசார்யர்கள், ஆழ்வார்கள் பகவானை பிரிந்து பூமியில் அவதரித்து தங்கள் அனுஷ்டானத்தினாலும்,உபதேசங்களாலும் நம்மை நல் வழிக்கு இட்டு செல்கிறார்கள். பகவானை விட்டு பிரிவது கடுமையான வ்ரதம் அல்லவா!
பாதுகை அயோத்தியில் எழுந்தருளி இரு.ந்தபோது அயோத்தியே மஹோத்ஸவமாயிருந்தது. அவை காட்டுக்கு எழுந்தருளியபோது அயோத்தி வெறுச்சோடியது. அதுபோல் ஸ்ரீ நம் பெருமாள் பல இடங்களில் எழு.ந்தருளும் போது அங்கெல்லாம் கல்யாண கோலம் காணலாம். பிறகு அவர் மூலஸ்தானம் சேர்ந்தவுடன் அங்கு கலையெல்லாம் போய்விடும்.
ஸாம்ராஜ்ய ஸம்பதிவ தாஸஜ.நோசிதா த்வம்
ராமேண ஸத்யவசஸா பரதாய தத்தா
ஸ த்வாம் .நிவேஸ்ய சரணாவநி பத்ரபீடே
ப்ருத்வீம் புபோஜ புபுஜே ச யஸோ விபூதிம் //
ஸ்ரீ ராமர் காட்டிற்கு போவதாக ஒப்புக்கொண்ட பிறகு பரதனுக்கு உன்னை அளித்தார். பரதனோ உன்னை ஸிம்மாஸனத்தில் ஏற்றி வைத்து பூமியை காப்பாற்றி எல்லையில்லா புகழை அடை.ந்தார். ஒரு சிஷ்யன் நல்ல ஆசார்யரிடத்தில் பக்தியோடு கைங்கரியம் செய்தால் அவன் பாபங்கள் போய் நல்ல கதியை அடைகிறான்.
ராமப்ரயாண ஜ.நிதம் வ்யபநீய ஸோகம்
ரத்நாஸனே ஸ்திதவதீ மணிபாதரக்ஷே
ப்ருத்வீம் நிஜேந யஸஸா விஹிதோத்தரீயா
மேகாதபத்ரதிலகாம் பவதீ விதேநே//
பாதுகையே ! நீ ராமனை விட்டு பிரிந்த துக்கத்தை உன்னிடத்தில் அடக்கிக்கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து மக்களை காப்பாற்றினாய். ( ஆச்சார்யர்கள் பகவானை விட்டு பிரி.ந்து அ.ந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு சிஷ்யர்களுக்கு ஸகல ஸௌக்கியங்களையும் உண்டுபண்ணுகிறார்கள்.
ப்ராப்தே திவம் தசரதே பரதே விலக்ஷே
பர்யாகுலேஷு ப்ருசமுத்தர கோஸலேஷு
தவம் சேத் உபேக்ஷிதவதீ க இபாவவிஷ்யத்
கோபாயிதும் குஹஸஹய விபோ: பதம் தத் //
ஸ்ரீ ராமர் காட்டிற்கு சென்ற பின் தசரதர் ஸ்வர்கலோகம் சென்றுவிட்டார். ராஜா இல்லாமல் ஜனங்கள் தவித்தார்கள். நீ பட்டத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் ராஜ்யத்தை யார் காப்பாற்றுவார்கள்? ( ந்ல்ல ஆச்சார்யர்கள் இல்லாமல் போனால் உலகம் எப்படி நன்மை அடையும்? )
வீரவ்ரதப்ரணயிநி ப்ரதமே ரகூணாம்
ப்ராப்தே சிராய பரதே வதம் ஆஸிதாரம்
த்யக்த்வா பதாவநி விவிதாந் விஹாராந்
ஏகாஸிகாவ்ரதம் அபூர்வம் அவர்த்தயஸ் த்வம் //
ஸ்ரீ ராமரோ சத்ருக்களை அழிக்காமல் அயோத்தி திரும்பமாட்டேன் என்று வ்ரதம் பூண்டார். பரதனோ பட்டத்தை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றார். நீயோ ! உன்னுடைய சஞ்சார குணத்தை விட்டு ஒரே இடத்தில் 14- வருஷம் இருந்தாய். ராமர் வ்ரதம் க்ஷத்திரியர்களுக்கு ஏற்றதே. பரதன் இந்திரியங்களை அடக்கியது கொஞ்சம் கஷ்டம். அதைவிட கடினம் நீ செய்தது. ( ஆழ்வார் அவதரித்தது முதல் மரப்பொந்தில் 16- வருஷம் இரு.ந்தது மிக ஆச்சர்யம் )
ப்ராப்யாதிகாரம் உசிதம் புவந்ஸ்ய குப்த்யை:
பத்ராஸநம் பரதவந்திதம் ஆச்ரயந்த்யா:
மத்யேsவதீர்ணமிவ மாதவ பாதரக்ஷே
மாதஸ் த்வயாபி மநுவம்ஸமஹீபதீ.நாம் //
ஏ பாதுகையே ! லோகங்ககளை காப்பாற்ற நீ ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தது மனு வ்ம்ஸ ராஜாக்கள் மத்தியில் நீயும் ஒருத்தியாக தோன்றுகிறது. அது உனக்கு பொருந்தும். ஆழ்வார் ஆச்சார்யர்கள் பரம்பரையில் சேர்ந்தது அந்த பரம்பரைக்கு அல்ங்காரமாக இருந்தது.
பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தம் ஆஸீத்
தேவீ க்ஷணம் தக்ஷிணதோமுகம் தே
கதம் பவேத் காஞ்சனபாதரக்ஷே
ராமஸ்ய ரக்ஷோம்ருகயாவிஹார: //
ஏ பாதுகையே ! உனது ஸிம்ஹாஸனத்தை தெற்கு முகமாக திருப்பினேயானால் லங்கையில் உள்ள ராக்ஷஸர்கள் எல்லாம் அழி.ந்துவிடுவார்கள். அப்போது ஸ்ரீ ராமனுக்கு வேலையே இருக்காது.
மகதாங்க களிங்க வங்கமுக்யான்
விமதாந் ரந்த்ரகவேஷண: ஸ்ஸைந்யாந்
ரகுபுங்கவபாதுகே விஜிக்யே
பரதஸ்ஸாஸநம் உத்வஹந் பவத்யா: //
பாதுகையே ! உன்னிடம் நியமனம் பெற்று பரதன் எல்லா சத்ருக்களையும் ஜயித்தார். ( ஒருவன் நல்ல ஆசார்யர் கிடைகக பெற்றால் எல்லாவற்றையும் வெல்லமுடியும் என்பது கருத்து.
பாதுகை அயோத்திக்கு திரும்பி வ.ந்ததால் அயோத்தி மக்கள் மிக ப்ரீதியுடன் அதை வரவேற்றார்கள். அதன் தயையை ராமனைகாட்டிலும் மேலானது என்று அதை தியானிக்கிறார்-கருத்து- பகவானை காட்டிலும் ஆச்சார்யர்களுக்கே தயை அதிகம்.
ராமர் காட்டிற்க்கு சென்றதால் இரு காரியங்ககளை சாதித்தார். கைகேயி தசரதரிடம் கேட்ட வரமான ராமன் காட்டுக்கு போவது- ராவண ஸம்ஹாரம். பிறகு பரதன் கேட்டுக்கொண்டதால் பாதுகையை ராமன் பரதனுக்கு அளித்தது-பாதுகை இல்லாவிட்டால் மேற்படி இரண்டு காரியங்களுமே நட.ந்திருக்காது- கருத்து-ஆச்சார்யர்கள் உதவி இல்லாவிட்டால் ஜீவன்கள் பகவானை அடைவது கஷ்டம்.
ரக்ஷார்த்தமஸ்ய ஜகதோ மணிபாதரக்ஷே
ராமஸ்யபாதகமலம் ஸமயே த்யஜந்த்யா:
கிம் துஷ்கரம் தவ விபூதி பரிக்ரஹோ வா
கிம் வா விதேஹ துஹிது: க்ருபணா தசா ஸா //
லோகத்தை காக்க ராமன் பாதுகையையும் ஸீதா தேவியையும் பிரிந்தார். ஸீதையோ அழுது கொண்டிருந்தாள். நீயோ அதே துக்கத்துடன் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தாய். இரண்டுமே மிக துக்கமான விஷயம். கருத்து- ஒரு ஜீவனை கடைதேற ஆச்சார்யர் படும் கஷ்டம் சொல்லமுடியாது.
பாதுகையே ! நீ அயோத்திக்கு எழுந்தருளிய போது அப்பட்டணத்து ஸ்திரீகளுடைய கண்கள் கருநெல் புஷ்பம் போல மல்ர்ந்தன. உன்னை பார்த்தால் சரத் காலமாகவும், உனக்கு பிடித்த குடையோ பூர்ண சந்திரன் போலவும், சாமரங்கள் நாணல் பூ போலவும் மலர்ந்தன. கலியுகத்தை கண்டு எல்லா பெரியோர்களும் நடுங்குகிறார்கள். ஆனால் நம்மாழ்வார், ஸ்ரீ பாஷ்யகாரர் அவதரித்தது அவர்கள் கண் மலர்ந்தன என்ன ஆச்சர்யம்!
மேய்ச்சலுக்கு போன மாடு அஸ்தமன சமயம் தன் கன்னுக்குட்டியிடம் எப்படி திரும்பி விடுமோ அதுபோல நீ சித்ரகூடத்திற்கும் பரதனுக்கும் தொந்தரவு வந்தபடியால் அவைகளிடம் நீ திரும்பி வ.ந்தாய்.-கருத்து- ஆசார்யர்கள் ஜீவனை காப்பாற்ற பெருமாளையே விட்டுவிட்டு பாடுபடுகிறார்கள். அதனால் ஜீவன்கள் சௌக்கியங்களை அடைகிறார்கள்.
லோகத்தில் ஒருவன் ஊருக்கு போக ஏற்பாடு செய்து ஆனால் அந்த நாளில் பெட்டி ப்டுக்கையை வேறு இடத்தில்வைப்பார். அதற்கு பரஸ்தானம் என்று பெயர். அதுபோல் பரதன் அபேக்ஷித்த காலத்தில் ஸ்ரீ ராமனால் எழு.ந்தருள முடியாமல் போனதால் தன் பாதுகையை பர்ஸ்தானம் பண்ணினார். ( பெருமாளிடம் நாம் அவரோடு இருக்க ஆசைப்பட்டால் முதலில் நல்ல ஆசார்யரை நமக்கு அளிக்கிறார். ஆசார்யர் சொல்படி நட.ந்தால் அவருடைய பரிபூர்ண அ.நுக்ரஹத்தால் ஜீவனும் பெருமாளும் பிரியாமல் சேருகிறார்கள். )
தசரதர் கொடுத்த வரத்தினால்- ஸ்ரீ ராமர் காட்டுக்கு போகவேண்டும்-பரதன் ராஜ்யம் ஆளவேண்டும் என்று இரு வரன்களை கைகேயி கேட்டாள். ராமன் காட்டுக்கு போனாலும் மற்ற வரனை நிறைவேற்ற பாதுகைகளால் பரதன் சிரஸில் கிரீடம் வைத்தார்-ஸமர்ப்பணமாக.
பாதுகையே ! உனக்கு பட்டாபிஷேகம் செய்வத்ற்காக பரதன் ஸ்ரீ ராமன் திருவடியிலிரு.ந்து உன்னை தன் தலையில் எழு.ந்தருள பண்ணிக்கொண்டபோது கோஸல தேசத்து ஜனங்கள் தங்களுக்கு எல்லா புருஷார்த்தங்களும் அடை.ந்து உன்னை ஸ்தோத்ரம் செய்தார்கள்.
ஸ்ரீ ரங்க.நாதன் ராமனாக அவதரித்து தன் பாதுகையை தன் திருவடிக்கு பதிலாக பரதனுக்கு அளித்தார். பெருமாள் தனக்கு பதிலாக நல்ல ஆசார்யர்களையும் பாகவதர்களையும் நமக்கு அளித்து அவர்களால் எல்லா லோகங்களும் க்ஷேமங்களை அடைகின்றன. அவர்கள் கடாக்ஷத்தினால் என் அல்பத்தனம் போகவேண்டும். ( அதாவது-பெருமை வாய்ந்த பாதுகையினால் என் அல்பத்தனத்தினால் போகவேண்டும். )
பரதன் பாதுகையை பெற்று தன் தலையில் எழு.ந்தருளப் பண்னி கொண்டபடியால் அவருக்கு லோக அபவாதம் வராமல் தடுக்கப்பட்டது. அதுமாதிரி என் தலையில் பரிவட்டம் போலிரு.ந்து என்னுடைய சகல அபவாதங்களையும் போக்கடிக்க வேண்டும். ( நல்ல ஆசார்யர்களை பக்தியுடன் ஆச்ரயித்தால் அவனுக்கு அபவாதம் முதலான சகல கெடுதல்களும் போய்விடும் )