Monday, March 22, 2010

ச்ருங்கார பத்ததி-10


ச்ருங்கார பத்ததி

சௌரே: ச்ருங்கார சேஷ்டாநாம்
ப்ரஸூதிம் பாதுகாம் பஜே
யாம் ஏஷ புங்க்தே ஸுத்தாந்தாத்
பூர்வம் பச்சாதபி ப்ரபு: //

பெருமாள் அந்த்புரம் செல்லும்போது பாதுகையை சாற்றிக்கொண்டு செல்கிறார்.நாயகிகளின் சுகத்தை பாதுகையின் மூலம் பெருமாள் அனுபவிகின்றார் - அதவத் ஆழ்வார்கள் தங்களை பெண்ணாகவும் பெருமாளை புருஷனாகவும் பாவிக்கின்றனர் என்பது கருத்து.

அவதாத்ஹிமாம்சுகாநுஷக்தம்
பதரக்ஷே! த்வயி ரங்கிண: கதாசித்
கிமபி ஸ்திதம் அத்விதீயமால்யம்
விரளாவஸ்திதமௌக்திகம் ஸ்மராமி //

பாதுகையே !உன்னை அணிந்து கொண்டு ஸ்ரீ ரங்கநாதன் அபிஷேகத்தின்போது வெண்மை பட்டாடையோடு துளஸி மாலையுடன் காட்சி தரும்போது பக்தர்கள் எல்லாம் தங்களை மெய்மறந்து சேவிக்கின்றார்கள்.

சரணகமலஸங்காத் ரங்க.நாதஸ்ய நித்யம்
நிகமபரிமளம் த்வம் பாதுகே ! நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதிவஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம் //

பாதுகையே !  பெருமாள் தன் திருமார்பில் லக்ஷ்மியை தாங்கி வைஜயந்திமாலையுடன் காட்சி தருகிறார். உன்னிடத்தில் பகவானின் திருவடி சம்பந்தம் நிறைய இருப்பதால் நீ வேத வாஸனையை அள்ளி தருகிறாய்.

அகிலாந்த: புரவாரேஷு
அ.நேகவாரம் பதாவ.நி ஸ்வைரம்
அநுபவதி ரங்கநாதோ
விஹாரவிக்ராந்தி ஸஹசரீம் பவதீம்//

பாதுகையே! ஸ்ரீ ரங்கநாதன் எப்போதும் எங்கே எழு.ந்தருளினாலும் உன்னை சாற்றிக்கொண்டுதான் புறப்படுகிறார். அவருக்கு பல தேவிகள் இருப்பதால் அவர்களுக்குள் சச்சறவு வராமல் இருக்க ஒரு முறை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் நீயோ அவரிடமே எப்போதும் இருக்கிறாய்!

R.Jagannathan.

No comments:

Post a Comment