Thursday, March 4, 2010

ப்ரதிப்ரஸ்தானபத்ததி- 5

ப்ரதிப்ரஸ்தானபத்ததி- 5


பாதுகையை ஆச்சார்யர்களுக்கு ஈடாக பாவித்து அது அயோத்திக்கு திரும்பி வ.ந்ததை பற்றி 20-ஸ்லோகங்களால் தலை கட்டுகிறார்.

ப்ரசஸ்தே ராமபாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மகே
ஆ.ந்ருசம்ஸ்யம் யயோராஸீதாச்ரிதேஷ்வ.நவக்ரஹம் //


பாதுகை அயோத்திக்கு திரும்பி வ.ந்ததால் அயோத்தி மக்கள் மிக ப்ரீதியுடன் அதை வரவேற்றார்கள். அதன் தயையை ராமனைகாட்டிலும் மேலானது என்று அதை தியானிக்கிறார்-கருத்து- பகவானை காட்டிலும் ஆச்சார்யர்களுக்கே தயை அதிகம்.

தசவதந வினாசம் வாஞ்சதோ யஸ்ய சக்ரே
தஸரதமநகோக்திம் தண்டகாரண்ய யாத்ரா
ஸ ச பரதவிமர்த்தே ஸத்யஸ.ந்தஸ் த்வயாஸீத்
ரகுபதிபதரக்ஷே ராஹதாநீம் ப்ரயாந்த்யா //


ராமர் காட்டிற்க்கு சென்றதால் இரு காரியங்ககளை சாதித்தார். கைகேயி தசரதரிடம் கேட்ட வரமான ராமன் காட்டுக்கு போவது- ராவண ஸம்ஹாரம். பிறகு பரதன் கேட்டுக்கொண்டதால் பாதுகையை ராமன் பரதனுக்கு அளித்தது-பாதுகை இல்லாவிட்டால் மேற்படி இரண்டு காரியங்களுமே நட.ந்திருக்காது- கருத்து-ஆச்சார்யர்கள் உதவி இல்லாவிட்டால் ஜீவன்கள் பகவானை அடைவது கஷ்டம்.

ரக்ஷார்த்தமஸ்ய ஜகதோ மணிபாதரக்ஷே
ராமஸ்யபாதகமலம் ஸமயே த்யஜந்த்யா:
கிம் துஷ்கரம் தவ விபூதி பரிக்ரஹோ வா
கிம் வா விதேஹ துஹிது: க்ருபணா தசா ஸா //

லோகத்தை காக்க ராமன் பாதுகையையும் ஸீதா தேவியையும் பிரிந்தார். ஸீதையோ அழுது கொண்டிருந்தாள். நீயோ அதே துக்கத்துடன் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தாய். இரண்டுமே மிக துக்கமான விஷயம். கருத்து- ஒரு ஜீவனை கடைதேற ஆச்சார்யர் படும் கஷ்டம் சொல்லமுடியாது.

சத்ரேந்துமண்டலவதீ மணிபாதுகே த்வம்
வ்யாதூத சாமரகலாப சரப்ரஸூநா
ஸத்யோ பபூவித ஸம்க்ர விகாஸஹேது:
ஸாகேத் பௌரவநிதா நயநோத்பலா.நாம் //

பாதுகையே ! நீ அயோத்திக்கு எழுந்தருளிய போது அப்பட்டணத்து ஸ்திரீகளுடைய கண்கள் கருநெல் புஷ்பம் போல மல்ர்ந்தன. உன்னை பார்த்தால் சரத் காலமாகவும், உனக்கு பிடித்த குடையோ பூர்ண சந்திரன் போலவும், சாமரங்கள் நாணல் பூ போலவும் மலர்ந்தன. கலியுகத்தை கண்டு எல்லா பெரியோர்களும் நடுங்குகிறார்கள். ஆனால் நம்மாழ்வார், ஸ்ரீ பாஷ்யகாரர் அவதரித்தது அவர்கள் கண் மலர்ந்தன என்ன ஆச்சர்யம்!

ஸமுபஸ்திதே ப்ரதோஷே
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூடவநாத்
அபஜத புநர்ஜநபதம்
வத்ஸம் தே.நுரிவ பாதுகே பவதீ .//


மேய்ச்சலுக்கு போன மாடு அஸ்தமன சமயம் தன் கன்னுக்குட்டியிடம் எப்படி திரும்பி விடுமோ அதுபோல நீ சித்ரகூடத்திற்கும் பரதனுக்கும் தொந்தரவு வந்தபடியால் அவைகளிடம் நீ திரும்பி வ.ந்தாய்.-கருத்து- ஆசார்யர்கள் ஜீவனை காப்பாற்ற பெருமாளையே விட்டுவிட்டு பாடுபடுகிறார்கள். அதனால் ஜீவன்கள் சௌக்கியங்களை அடைகிறார்கள்.

R.Jagannathan.

No comments:

Post a Comment