Thursday, March 18, 2010

வைதாளிக பத்ததி-9

வைதாளிக பத்ததி-9


நமஸ்தே பாதுகே பும்ஸாம்
ஸம்ஸார்ணவ ஸேதவே
யதாரோஹஸ்ய வேதாந்தா:
வந்தி வைதாளிகா: ஸ்வயம் //


ஏ பாதுகையே ! ஜனங்களுடைய ஜனன மரணத்தை போக்குகின்ற உன்னை ஸேவிக்கின்றேன். உப.நிஷத்துக்கள் பெருமாளை ஸ்தோத்ரங்கள் மூலம் துயில் எழுப்பி பிறகு பகவான் உன்னை சாற்றிக்கொள்ள பிரார்திக்கின்றன.

உசிதம் உபசரிஷ்யந் ரங்க.நாத ! ப்ரபாதே
விதிசிவஸநகாத்யாந் பாஹ்யகக்ஷ்யா.நிருத்தாந்
சரணகமலஸேவாஸௌக்யஸாம்ராஜ்யபாஜாம்
ப்ரதமவிஹிதபாகாம் பாதுகாம் ஆத்ரியேதா: //


ஸ்ரீ ரங்கநாதா ! வெளியே ப்ரம்மா, சிவன், ஸநகர் முதலிய ரிஷிகள் உங்கள் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கருணை காட்டவேண்டும். தங்களது திருவடி சுகத்தை அநுபவிப்பது என்பது ஒரு சாம்ராஜ்யத்தையே அடைவது போன்றதாகும். அதை முதலில் பெறுவது பாதுகையாகிற நீ தான்.

ஆஸ.நாதுசிதம் ஆஸநாந்தரம்
ரங்கநாத யதி கந்தும் ஈஹஸே
ஸந்நதேந விதிநா ஸமர்ப்பிதாம்
ஸப்ரஸாதம் அதிரோஹ பாதுகாம் //


ஸ்ரீ ரங்கநாதனே ! தாங்கள் இந்த ஆஸனத்திலிருந்து வேறு ஆஸனத்திற்கு எழுந்தருள வேணும்.
அதற்காக ப்ரம்மா பாதுகையை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார். அதை சாற்றிக்கொண்டு சேவை தரவேண்டும்.

இதி நிகமவந்திவசஸா ஸமயே ஸமயே க்ருஹீதஸங்கேத:
அபிஸரதி ரங்கநாத: ப்ரதிபதபோகாய பாதுகே ! பவதீம் //


பாதுகையே ! அந்த அந்த காலங்களில் உப.நிஷத்துக்கள் காலங்களை தெரிவிக்கின்றன. அக்காலங்களின் சுகங்களை அ.நுபவிக்க ரங்கநாதன் உன்னை சாற்றிக்கொள்கிறார்.

R. Jagannathan.

No comments:

Post a Comment