Thursday, March 18, 2010

அபிஷேக பத்ததி-7

அபிஷேக பத்ததி-7

பாஹி ந: பாதுகே யஸ்யா
விதாஸ்ய.ந் அபிஷேசநம்
ஆபிஷேசநிகம் பாண்டம்
சக்ரே ராம: ப்ரதக்ஷிணம் //


பொழுது விடிந்தால் ராமருக்கு பட்டாபிஷேகம் என்று இருந்தபோது அவர் காட்டிற்கு போகவேண்டும் என்றாயிவிட்டது. ராமரோ பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்ட பொருள்களை எல்லாம் வலம் வந்து கௌரவித்தார். அப்படி மனப்பூர்வமாக ஸ.ந்தோஷப்பட்டதால் அந்த பட்டாபிஷேகம் உனக்கு கிடைத்தது.
( பெருமாள் நல்ல ஆசார்யர்களுக்கு தன்னை காட்டிலும் மேலாக மரியாதை செய்கிறார் என்பது கருத்து )

நிவேஸ்ய ரங்கேஸ்வர பாதரக்ஷே
பத்ராஸநே ஸாதரம் அப்யஷிஞ்சத்
வஸீ வஸிஷ்டோ மனுவம்சஜாநாம்
மஹீக்ஷிதாம் வம்ச புரோஹிதஸ் த்வாம் //


ஏ பாதுகையே ! உன்னுடைய ப்ரபாவங்களை அறிந்த இக்ஷ்வாகு வம்ச புரோஹிதரான வஸிஷ்டர் உனக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைத்தார்

ப்ராப்தாபிஷேகா மணிபாதரக்ஷே
ப்ரதாபம் உக்ரம்ப்ரதிபத்யமாநா
சசாஸ ப்ருத்வீம் பவதீ யதாவத்
ஸாகேதஸிமாஸந ஸார்வபௌமீ //


ஏ பாதுகையே ! நீ பட்டாபிஷேகம் அடைந்து ஸிமாஸனத்தில் அமர்ந்து நல்ல பராக்ரமத்தோடு ராஜ்ய பரிபாலனம் செய்து ஜனங்களுக்கு நல்ல பாதுகாவனாக இருந்தாய். ஒன்றிலும் ஒரு குறையில்லாமல் பார்த்துக்கொண்டாய்.

அஹ்நாய ராமவிஹாத் பரிகிந்நவ்ருத்தே.
ஆச்வாஸநாய பவதீ மணிபாதரக்ஷே !
தீர்த்தாபிஷேகம் அபதிச்ய வஸு.ந்தராயா
சக்ரே ததா ஸமுசிதம் சிசிரோபசாரம் //


ராமனை விட்டு பிரிந்ததால் பூமி வருத்தம் அடைந்தது. அதை போக்க நீ பட்டாபிஷேகம் செய்து கொண்டு அதை குளிர்ச்சியடைய செய்தாய்.நித்யசூரிகளும் பெருமாளும் இவ்வுலகில் அவதாரம் செய்தது நம்முடைய நன்மைக்காகத்தான்.

திநகரகுலஜாநாம் தேவீ ப்ருத்வீபதீநாம்
நிருபதிம் அதிகாரம் ப்ராப்.நுவத்யாம் பவத்யாம்
அஜநிஷத ஸம்ஸ்தா: பாதுகே தாவகீந-
ஸ்நபநஸலிலயோகாந் நிம்நகா துங்கபத்ரா: //


உன்னுடைய பட்டாபிஷேக ஜலம் எல்லாம் ஆறுகளில் சேர்ந்ததினால் ஆறுகள் வற்றாதவைகள் ஆயின. துங்கபத்ரா நதி போல காட்சியளித்தன என்கிறார் ஸ்வாமி தேசிகர். .நம்மாழ்வார் அவதரித்து அவருடைய ப்ரப்ந்தத்தினால் எல்லா லோகங்களும் க்ஷேம ம் அடைந்தன.

கதிசந பதபத்ம ஸ்பர்ச ஸௌக்யம் த்யஜந்தீ
வ்ரதம் அதுலம் அதாஸ்த்வம்வத்ஸராந் ஸாவதாநா
ரகுபதி பதரக்ஷே ராக்ஷஸைஸ் த்ராஸிதாநாம்
ரணரணகவிமுக்தம் யேந ராஜ்யம்
ஸுராணாம் //

ஏ பாதுகையே ! ஸ்ரீ ராமர் கொஞ்ச நாள் உன்னை பரதனுடன் சென்று அவனுக்கு ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவினார். கொஞ்ச நாள் பிரிவது உனக்கு ஒரு கடுமையான வ்ரதம். அதை நீ செய்ததால் அசுரர்கள் அழிந்து மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.ஆசார்யர்கள், ஆழ்வார்கள் பகவானை பிரிந்து பூமியில் அவதரித்து தங்கள் அனுஷ்டானத்தினாலும்,உபதேசங்களாலும் நம்மை நல் வழிக்கு இட்டு செல்கிறார்கள். பகவானை விட்டு பிரிவது கடுமையான வ்ரதம் அல்லவா!


R.Jagannathan.


.

No comments:

Post a Comment