Thursday, September 23, 2010

மூட்டை பூச்சியும், கொசுவும்

மூட்டை பூச்சியும், கொசுவும்

ஒரு நகரத்தில் ஒரு பணக்காரர் வீட்டில் அழகான, மிருதுவான பட்டு மெத்தை, தலைகாணியுடன் படுக்கை அறை அமைந்திருந்தது. அதில் மதியமும், இரவும் தனவானும் அவரது மனைவியும் படுப்பதற்கு வருவார்கள். பாக்கி நேரம் முழுவதும் யாரும் கிடையாது.

அந்த படுக்கையில் சுதந்திரமாக மூட்டை பூச்சி குடும்பம் வாழ்ந்து வந்தது. இப்படியே பல காலம் சென்றன. இதற்கிடையில் ஒரு கொசு ஜன்னல் திறந்து இருந்ததால் உள்ளே நுழைந்தது. இதை கண்ட மூட்டை பூச்சி அதை தடுத்து நிறுத்தியது.

கொசு தாழ்ந்த குரலிலும், வணக்கத்துடன்- நான் இதுவரையிலும் அருகில் உள்ள மிலிடெரி காம்பில் வசிக்கும் ராணுவ வீரர்களை ந்ம்பி வாழ்ந்துவந்தேன். அவர்கள் இரத்தம் தடித்து விட்டது-உப்பும் அதிகமாகி விட்டது. அதனால் வேறு இடத்தை தேடி இருந்தேன்.

உங்களோடு போட்டி போடமாட்டேன். நீங்கள் அனுமதித்தால் நானும் இங்கு தங்குகிறேன் என்றது. மூட்டை பூச்சி இதற்கு ஒரு நிபந்தனை பேரில் அனுமதித்தது. கொசு பகலில் தனவான் பகலில் கொஞ்ச நேரம் தூங்க வருவார். அப்போது அவரது காலில் நீ கடிக்கலாம் என்றது மூட்டை பூச்சி. இதற்கு கொசு சம்மதித்தது.

அது மாதிரி கொசு செய்தது. அப்போது தனவானுக்கு கடுமையான கோபம் வந்தது. வேலையாட்களை கூப்பிட்டு படுக்கையை உதறி செய்து அவரை கடித்த பூச்சிகளை கொன்று விடுங்கள் என்றது. அதை கேட்ட கொசு பறந்து போய்விட்டது. ஆனால் மூட்டை பூச்சிக் குடும்பத்துடன் மாட்டிக்கொண்டது. வேலை காரர்கள் அவைகளை கொன்றுவிட்டார்கள்.

புதிதாக நண்பர்களை சேர்க்கும் போது தீர ஆலோசனை செய்யவேண்டும், இல்லாவிட்டல் முதலுக்கே மோசமாகிவிடும்.

Monday, September 20, 2010

Three Fishes

மூன்று மீன்கள்

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவர்கள் சந்தோஷமாக காலம் தள்ளிவந்தன. ஒரு நாள் சில மீனவர்கள் அந்த பக்கம் வந்தார்கள். அவர்கள் இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன. வலையை வீசினால் நல்ல மீன்கள் கிடைக்கும் என்று பேசிக்கொண்டிருந்ததை மூன்று மீன்களும் கேட்டன.

முதல் மீன் எதற்கும் உடனேயே பதட்டப்படும் வகை. நாம் இனி இங்கு இருக்க கூடாது. உடனே புறப்பட்டு வேறு குளத்திற்கு போய்விடவேண்டும் என்றது.

இரண்டாவது மீன் எப்போதும் விதிப்படி தான் நடக்கும் என்ற வகையை சேர்ந்தது.விதி இப்படி தான் நடக்கும் என்றால் அப்படி தான் நடக்கும்-அதற்காக கவலை படக்கூடாது-ஆகையால் நான் எங்கும் போகவில்லை என்றது.

மூன்றாவது மீன்- இதை தவிற்க ஏதாவது செய்யவேண்டும்-தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்ன முயற்சி எடுக்கவேண்டும்? என்ற வகையை சேர்ந்தது.

மீனவன் வலையை வீசினான். முதல் மீன் குளத்தை விட்டு வேறு குளத்திற்கு புறப்பட்டது- ஆனால் பெரிய ஆற்றில் மாட்டிக்கொண்டது. ஒரு பெரிய மீன் அதை விழுங்கி விட்டது.

இரண்டாவது மீன் தன் விதியை நினைத்து பேசாமல் மூச்சு திணறி இறந்தது.

மூன்றாவது மீன் தான் செத்ததுபோல் வலையில் கிடந்தது. மீனவன் அது செத்தது என்று எடுத்து வீசி எறிந்தான். அது தத்தி தத்தி மீண்டும் குளத்தில் குதித்து மீனவர் வலையில் விழாமல் பிழைத்து.

ஆபத்து காலத்தில் புத்தியை உபயோகித்து செயல் படவேண்டும்

Four Friends

நான்கு சினேகிதர்கள்

ஒரு சமயம் ஒரு காட்டில் மூன்று நண்பர்கள்- ஒரு காகம், எலி, ஆமை-கூடி வாழ்ந்தார்கள். அவைகளில் எலி ரொம்ப புத்திசாலி.ஒரு நாள் சித்ராங்கன் என்ற மான் வெகு வேகமாக ஓடி வந்தது, அதை ஒரு வேடன் துரத்தி பிடிக்கவந்துகொண்டிருந்தான் என்று பயந்து. இதை பார்த்த எலி பொந்துக்குள் புகுந்து கொண்டது. ஆமை தண்ணீருக்குள் சென்றது. காகம் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.

கொஞ்சநேரம் சென்றது. யாரையும் காணாமல் எல்லாம் வெளியே வந்தன. மானை பார்த்து-நீ பயப்படாமல் எங்களுடன் நாலாவது நண்பனாய் இரு. எங்களிடையே வாசம் செய் என்று மானை சேர்த்துகொண்டன.

மான் மிக்க வந்தனத்தை தெரிவித்து-நான் வேட்டைகாரனுக்கு பயந்து ஓடி வந்தேன். உலகில் நான்கு வித நண்பர்களை பார்க்கலாம். ஒருவன் ரத்த சம்பந்தப்பட்டவன். ஒருவன் உறவினன், ஒருவன் விவாகத்தால் சம்பந்தப்பட்டவன், ஒருவன் ஆபத்து காலத்தில் உதவுபவன். கடைசீயில் சொல்லப்பட்டவன் மிக சிலாக்கியமானவன். நீங்கள் அந்த கடைசி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். நான் பாகியசாலி என்றது.

நான்கும் சந்தோஷமாக காலம் கழித்துவந்தன. ஆனால் ஆமைக்கு ஒரு சந்தேகம். அது மானை-உன்னை யாராவது துரத்தியது நிஜமா? என்று கேட்டது. அதற்கு மான் அது நிஜம்-இங்கு ருமாங்கதன் என்ற ராஜா வேட்டையாட கூடாரம் போட்டிருக்கிறான். அவனால் எந்த நேரமும் ஆபத்து. அவன் இங்கு வருவதாக வதந்தி.

இதை கேட்ட ஆமை பயத்துடன் நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. காகமும, மானும் இதற்கு ஒப்புக்கொண்டன. ஆனால் புத்திசாலி எலி கேட்டது- நீங்கள் வேறு இடத்தை சேறும் வரை நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஆமையோ மெதுவாக நகரும், அது தவிர போன இடம் பத்திரமானது என்று எப்படி தெரியும்? என்றது.

ஆமை பயத்தால் வேறு இடத்திற்கு போக முடிவு செய்து விட்டது. அதற்கு எலி ஆமையிடம் நன்றாக யோஜனை செய். ஒருவனுக்கு தன் உண்மையான கடமை என்ன? அது கஷ்டப்படுபவரை கண்டு இரக்கபட்டு உதவுவதுதான். உண்மையான சந்தோஷம் எது? நல்ல ஆரோக்கியமான சரீரம், உண்மையான நேசம்-அன்பு-மற்றவர்களுக்கு நன்மைகளை விரும்புவது-கடைசீயாக எது புத்திசாலித்தனம்? சமயத்தை அறிந்து, ஆபத்தை உணர்ந்து முடிவு எடுப்பதுதான்.

கஷ்ட காலத்தில் புத்திசாலித்தனம் நல்ல முடிவை எடுக்க உதவும். ஒரு குடும்பத்தை காப்பாத்த-ஒருவனை பலி கொடுக்கலாம், ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம், ஒரு தேசத்தை காக்க ஒரு கிராமத்தை விட்டு கொடுக்கலாம்-ஒருவனுக்கு தனக்கே கஷ்டம் வந்தால் அந்த இடத்தை விட்டே நகரலாம்- யோஜித்து முடிவு எடு என்றது எலி.

ஆமை என்ன சொல்லியும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகர ஆரம்பித்தது. அது கொஞ்ச தூரம் சென்றதும் வேட்டைக்காரன் அதை எடுத்து வலையில் போட்டுக்கொண்டான். இதை பார்த்த மற்ற நண்பர்கள் தன் நண்பனுக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து வருந்தின.ஆபத்து காலத்தில் உதவுவது தான் தர்மம். ஒரு நல்ல நண்பன் மனைவி, மக்களை காட்டிலும் உயர்ந்தவன், அவனுடைய ஆனந்தமே தன் ஆனந்தம், அவனது கஷ்டமே தன் கஷ்டம் என்று உணர்பவன் தான் நல்ல நண்பன். எலி மற்ற நண்பர்களை அழைத்து, காலத்தை வீணாக்காமல் நண்பனை காப்பாற்ற முயர்ச்சி உடனடியாக எடுக்கவேண்டும் என்றது.

எலி சித்ராங்கதன் என்ற மானினிடம்-நீ வேடன் முன்பாக ஓடி அந்தஓடையின் முன்பாக இறந்தது மாதிரி படுத்துக்கொள். காகம் உன்மேல் உட்கார்ந்து உன்னை கொத்துவதுபோல் நடிக்கட்டும். வேடன் நிச்சியமாக ஆமையை வைத்துவிட்டு உன்னிடம் வருவான். அதற்குள் நான் அந்த வலயை கடித்து துளைத்து ஆமையை விடுவித்துவிடுகிறேன். ஆமையும் நகர்ந்து பக்கத்தில் உள்ள நீரில் புகுந்துவிடட்டும் என்று யோஜனை கூறியது.

அதன்படி மான் செய்தது. வேடனுக்கோ ரொம்பவும் சந்தோஷம். தனக்கு ஆமையோடு கூட மான் மாமிசமும் கிடைக்கபோகிறது என்று ஆமையை ஓரத்தில் வைத்துவிட்டு மான் பக்கம் போனான். அதற்குள் எலி ஆமையை விடுவித்து மரபொந்தில் புகுந்துவிட்டது. ஆமையும் நகர்ந்து தண்ணீரில் புகுந்து கொண்டது. மானும் ஓட்டம் பிடித்தது. வேடனுக்கு ஆமையும் கிடைக்கவில்லை, மானும் கிடைக்கவில்லை.

பேராசை பெரு நஷ்டம்.
நண்பர்களின் ஒற்றுமை லாபகரமானது.

Foolish Weaver

ஏழை முட்டாள் நெசவாளி

ஒரு ஊரில் ஒரு ஏழை நெசவாளி வெகு கஷ்டப்பட்டு உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். அவனுடைய தறியும் பழுதான நிலையில் இருந்தது. அதை சரி செய்ய காட்டிற்கு சென்று மரத்தை கொண்டுவர புறப்பட்டான்.

அவன் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதை வெட்ட கோடாறியை எடுத்தான். அப்போது அந்த மரத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது அந்த மரத்தில் வசிக்கும் தேவதையுடைய குரல். நண்பா! நான் பலகாலம் இந்த மரத்தில் வசித்து வருகிறேன். இதை வெட்டதே- அதற்கு பதிலாக ஒரு வரம் கேள், தருகிறேன் என்றது. விவசாயும் தன் மனைவியை கலந்து சொல்கிறேன் என்று விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினான்.

வழியில் அவன் சிநேகிதனை கண்டான்-தேவதை சொன்னதை சொல்லி யோஜனை கேட்டான். அதற்கு நண்பன்-நான் இந்த இடத்திற்கு ராஜாவாக வேண்டும் என்று கேள் என்றான். நெசவாளி வீடு திரும்பியவுடன் மனைவியுடன் நடந்ததை சொல்லி என்ன கேட்கலாம் என்று சொல் என்று கேட்டான்.

அவன் மனைவியும் நமக்கு அரசு வேண்டாம்-அதை நிர்வாகம் செய்ய நம்மால் முடியாது. நமக்கு இப்போது இரண்டு கைகள் தான் இருக்கின்றன. அதனால் நம்மால் கொஞ்சம் தான் துணி நெய்ய முடிகிறது. அதற்கு பதிலாக நாங்கு கைகள் இருந்தால் நிறைய துணிகள் நெய்யலாம்-நல்ல லாபமும் கிடைக்கும்-ஆகையால் நீ போய் எனக்கு நான்கு கைகள் இரண்டு தலைகள் வேண்டும் என்று கேள் என்றாள்.

அவனும் தேவதையை அப்படியே கேட்டான்-அதுவும் அப்படியே தந்தது. அவன் சந்தோஷமாக வீடு திரும்பினான். அவனை பார்த்த மக்கள் பயந்து இது ஏதோ ஒரு பேய் அல்லது காட்டு மிருகம் என்று அவனை அடித்து கொன்றுவிட்டார்கள். முட்டாள்தனமான ஆசையால் முதலே போய்விட்டது.

நல்ல நேரம் வரும்போது நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும்.

The Bull and the Lion


காளையும், சிங்கமும்-முதுகில் குத்தாதே!

ஒரு சிறிய நகரத்தில் சாம்பன் என்ற வியாபாரி சிறு பொருட்களை விற்று குடும்பன் நடத்திகொண்டிருந்தான். அவனது வருமானம் போதுமானதாக இருந்தாலும் தன்னால் தன் குழந்தைகளுக்கு கேட்டதை எல்லாம் வாங்கி தர முடியாதநிலையில் இருந்தான். தான் இங்கேயே இருந்து இதற்கு மேல் சம்பாதிக்க முடியாது-வேறு இடங்களுக்கு போய் பொருட்கள் கொண்டு வந்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைத்தான்.

அதன் பிரகாரம் ஒரு இரட்டை மாட்டு வண்டியையும் இரண்டு காளைகளையும் வாங்கி வெளியூருக்கு புறப்பட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு காளைக்கு காலில் காயம் பட்டு நடக்கமுடியாமல் போய்விட்டது. வியாபாரி யோஜனை செய்து-இதனால் தன் முயர்ச்சிக்கு தடங்கல் வர்க்கூடாது என்று அந்த காளையை அங்குள்ள வயலில் விட்டு விட்டு மெதுவாக வண்டியை ஒரு காளையோடு ஓட்டி சென்று பக்கத்து நகரில் வேறு காளையை வாங்கி பயணத்தை தொடர்ந்தான்.

நிற்க, வயலில் விடப்பட்ட காளை அங்குள்ள புல்லை தின்று கொஞ்சம் கொஞ்சமாக தேறி மறுபடியும் பழைய காளையாகிவிட்டதுகாளைக்கு ரொம்பவும் சந்தோஷம். வேளாவேளைக்கு சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை. சுதந்திரமாக திரியலாம். அந்த சந்தோஷத்தில் அது பெரிய குரலில் கத்திற்று. அப்போது அந்த பக்கம் ஒரு சிங்கம் தண்ணீர் குடிக்க வந்தது. தான் இதுவரை கேட்டிராத குரலை கேட்டு பயந்து ஓடிவிட்டது.

இதை பார்த்துகொண்டிருந்த இரு நரிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திகொள்ள முடிவு செய்தன. அதற்கு முதலில் சிங்கத்தினிடம் நல்ல பேயர் வாங்கி அவனுக்கு வேலைக்காரர்கள் ஆகவேண்டும். அதில் ஒரு நரி முதலில் சிங்கத்தினிடம் சென்று-சிங்க ராஜாவை பலவாறு புகழ்ந்து சிங்கத்தினிடமிருந்து அதன் பயத்திற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொண்டது.

பிறகு அந்த நரி தான் அதன் பயத்தை போக்குவதாக சொல்லி காளையிடம் சென்றது. காளையாரே! நாம் எல்லோரும் இந்த சிங்க ராஜாவிற்கு அடிமைகள் நாம் சந்தோஷமாக இங்கு இருக்கவேண்டுமானால் அவனுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்றது. காளையும் அது சரிதான் என்று நரியுடன் சென்று சிங்கத்தை பார்த்தது.

நரி சிங்கத்தினிடம் சென்று தாங்கள் பயந்த சப்தம் இந்த காளையிடமிருந்து தான் வந்தது-இனி பயப்படவேண்டாம் என்றது. சிங்கமும் நரியின் இந்த வீர செயலை பாராட்டி நரியை தனக்கு மந்திரியாக நியமித்தது.

கொஞ்சநாள் சென்றதுநரியின் அதிகாரத்தை பொறுக்கமுடியாமல் காளை மெதுவாக சிங்கத்தின் நட்பை பெற பல வேலைகளை செய்து சிங்கத்தை திருப்தி ச்ய்து கொண்டு வந்தது. சிங்கமும் மகிழ்ந்து காளையை பிரதம மந்திரியாக்கியது.காளையும் சிங்கமும் நெருங்கி பழக ஆரம்பித்தன.

இதை கண்ட நரிகள் பொறாமையுற்றன. இதை எப்படியாவது முறித்து விடவேண்டும் என்று யோஜனை செய்தன. மெதுவாக சிங்கத்தினிடம் வருத்ததுடன்-தாங்கள் நம்பியிருக்கும் காளை மமதையால் தானே அரசனாக வேண்டும் என்று உங்களை சமயம் பார்த்து கொண்று விட முடிவு செய்திருக்கிறது என்று பணிவுடன் கூறின. இதை நான் எப்படி நம்புவது என்று சிங்கம் கேட்டது. அதற்கு நரி- உங்களை பார்த்தவுடன் தன் கால்களை உதைத்துக்கொண்டு கொம்பை தாழ்த்தி உங்களை குத்த வரும் பாருங்கள் என்றன.

பிறகு நரிகள் காளையிடம் இதேமாதிரி மாற்றி சொல்லி விரோதத்தை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்தன. காளையும் அதே மாதிரி சிங்கத்தை நோக்கி பாய்ந்தது. சிங்கமும் கோபத்துடன் காளையின் மீது பாய்ந்து காளையை கொன்றது. நரிகளுக்கு மிகவும் சந்தோஷம்.

ல்ல நண்பர்கள் பிறர் சொல்வதை அப்படியே நம்பாமல் தீர விசாரித்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விபரீதமே!


Monday, September 13, 2010

நாரையும், பாம்பும், கீரியும்

நாரையும், பாம்பும், கீரியும்

ஒரு தடாகத்தில் நாரைகள் வாழ்ந்துவந்தன. அருகில் உள்ள மரத்தில் முட்டையிட கூடுகட்டி முட்டையிடும். அந்த மரத்தின் பொந்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது.  நாரைகள் இறை தேட போகும் சமயத்தில் பாம்பு மெதுவாக மரத்தின்மேல் ஏறி முட்டைகளை தின்றுவிடும்.

பாம்பின் இந்த செய்கையால் கவலை அடைந்த நாரைகள் தன்னுள் முதியவரை யோஜனை கேட்டன. அவர்-நீங்கள் நிறைய மீன்களை பிடித்து வரிசையாக இந்த மரத்திற்கு எதிர்த்தால் போல் உள்ள மரப்பொந்தின் வரை போடுங்கள். அந்த மர பொந்தில் கீரி ஒன்று வசித்துவருகிறது. அது மீன்களை புசித்துக்கொண்டே பாம்பு வசிக்கும் புத்திற்கு வரும். அப்போது பாம்பிற்கும், கீரிக்கும் சண்டை வரு, கீரி பாம்பை கொன்றுவிடும்-உங்கள் கவலை தீரும் என்றது.

அப்படியே நாரைகள் செய்தன. கீரியும் பாம்பை கொன்று விட்டது. இனி நிம்மதியாக இருக்கலாம் என்றால்-அது நடக்கவில்லை. இப்போது கீரி நாரையின் முட்டையை சாப்பிட ஆரம்பித்துவிட்டது.

தலிவலி போக திருகு வலி வந்ததாம்!
ஒருவனுடைய எதிரிக்கு எதிரி அவன்மேலும்  அதிக நம்பிக்கை வைக்ககூடாது.