நான்கு சினேகிதர்கள்
ஒரு சமயம் ஒரு காட்டில் மூன்று நண்பர்கள்- ஒரு காகம், எலி, ஆமை-கூடி வாழ்ந்தார்கள். அவைகளில் எலி ரொம்ப புத்திசாலி.ஒரு நாள் சித்ராங்கன் என்ற மான் வெகு வேகமாக ஓடி வந்தது, அதை ஒரு வேடன் துரத்தி பிடிக்கவந்துகொண்டிருந்தான் என்று பயந்து. இதை பார்த்த எலி பொந்துக்குள் புகுந்து கொண்டது. ஆமை தண்ணீருக்குள் சென்றது. காகம் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.
கொஞ்சநேரம் சென்றது. யாரையும் காணாமல் எல்லாம் வெளியே வந்தன. மானை பார்த்து-நீ பயப்படாமல் எங்களுடன் நாலாவது நண்பனாய் இரு. எங்களிடையே வாசம் செய் என்று மானை சேர்த்துகொண்டன.
மான் மிக்க வந்தனத்தை தெரிவித்து-நான் வேட்டைகாரனுக்கு பயந்து ஓடி வந்தேன். உலகில் நான்கு வித நண்பர்களை பார்க்கலாம். ஒருவன் ரத்த சம்பந்தப்பட்டவன். ஒருவன் உறவினன், ஒருவன் விவாகத்தால் சம்பந்தப்பட்டவன், ஒருவன் ஆபத்து காலத்தில் உதவுபவன். கடைசீயில் சொல்லப்பட்டவன் மிக சிலாக்கியமானவன். நீங்கள் அந்த கடைசி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். நான் பாகியசாலி என்றது.
நான்கும் சந்தோஷமாக காலம் கழித்துவந்தன. ஆனால் ஆமைக்கு ஒரு சந்தேகம். அது மானை-உன்னை யாராவது துரத்தியது நிஜமா? என்று கேட்டது. அதற்கு மான் அது நிஜம்-இங்கு ருமாங்கதன் என்ற ராஜா வேட்டையாட கூடாரம் போட்டிருக்கிறான். அவனால் எந்த நேரமும் ஆபத்து. அவன் இங்கு வருவதாக வதந்தி.
இதை கேட்ட ஆமை பயத்துடன் நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. காகமும, மானும் இதற்கு ஒப்புக்கொண்டன. ஆனால் புத்திசாலி எலி கேட்டது- நீங்கள் வேறு இடத்தை சேறும் வரை நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஆமையோ மெதுவாக நகரும், அது தவிர போன இடம் பத்திரமானது என்று எப்படி தெரியும்? என்றது.
ஆமை பயத்தால் வேறு இடத்திற்கு போக முடிவு செய்து விட்டது. அதற்கு எலி ஆமையிடம் நன்றாக யோஜனை செய். ஒருவனுக்கு தன் உண்மையான கடமை என்ன? அது கஷ்டப்படுபவரை கண்டு இரக்கபட்டு உதவுவதுதான். உண்மையான சந்தோஷம் எது? நல்ல ஆரோக்கியமான சரீரம், உண்மையான நேசம்-அன்பு-மற்றவர்களுக்கு நன்மைகளை விரும்புவது-கடைசீயாக எது புத்திசாலித்தனம்? சமயத்தை அறிந்து, ஆபத்தை உணர்ந்து முடிவு எடுப்பதுதான்.
கஷ்ட காலத்தில் புத்திசாலித்தனம் நல்ல முடிவை எடுக்க உதவும். ஒரு குடும்பத்தை காப்பாத்த-ஒருவனை பலி கொடுக்கலாம், ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம், ஒரு தேசத்தை காக்க ஒரு கிராமத்தை விட்டு கொடுக்கலாம்-ஒருவனுக்கு தனக்கே கஷ்டம் வந்தால் அந்த இடத்தை விட்டே நகரலாம்- யோஜித்து முடிவு எடு என்றது எலி.
ஆமை என்ன சொல்லியும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகர ஆரம்பித்தது. அது கொஞ்ச தூரம் சென்றதும் வேட்டைக்காரன் அதை எடுத்து வலையில் போட்டுக்கொண்டான். இதை பார்த்த மற்ற நண்பர்கள் தன் நண்பனுக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து வருந்தின.ஆபத்து காலத்தில் உதவுவது தான் தர்மம். ஒரு நல்ல நண்பன் மனைவி, மக்களை காட்டிலும் உயர்ந்தவன், அவனுடைய ஆனந்தமே தன் ஆனந்தம், அவனது கஷ்டமே தன் கஷ்டம் என்று உணர்பவன் தான் நல்ல நண்பன். எலி மற்ற நண்பர்களை அழைத்து, காலத்தை வீணாக்காமல் நண்பனை காப்பாற்ற முயர்ச்சி உடனடியாக எடுக்கவேண்டும் என்றது.
எலி சித்ராங்கதன் என்ற மானினிடம்-நீ வேடன் முன்பாக ஓடி அந்தஓடையின் முன்பாக இறந்தது மாதிரி படுத்துக்கொள். காகம் உன்மேல் உட்கார்ந்து உன்னை கொத்துவதுபோல் நடிக்கட்டும். வேடன் நிச்சியமாக ஆமையை வைத்துவிட்டு உன்னிடம் வருவான். அதற்குள் நான் அந்த வலயை கடித்து துளைத்து ஆமையை விடுவித்துவிடுகிறேன். ஆமையும் நகர்ந்து பக்கத்தில் உள்ள நீரில் புகுந்துவிடட்டும் என்று யோஜனை கூறியது.
அதன்படி மான் செய்தது. வேடனுக்கோ ரொம்பவும் சந்தோஷம். தனக்கு ஆமையோடு கூட மான் மாமிசமும் கிடைக்கபோகிறது என்று ஆமையை ஓரத்தில் வைத்துவிட்டு மான் பக்கம் போனான். அதற்குள் எலி ஆமையை விடுவித்து மரபொந்தில் புகுந்துவிட்டது. ஆமையும் நகர்ந்து தண்ணீரில் புகுந்து கொண்டது. மானும் ஓட்டம் பிடித்தது. வேடனுக்கு ஆமையும் கிடைக்கவில்லை, மானும் கிடைக்கவில்லை.
பேராசை பெரு நஷ்டம்.
நண்பர்களின் ஒற்றுமை லாபகரமானது.
No comments:
Post a Comment