Monday, September 6, 2010

CUNNING CROW


தந்திர காகம்


ஒரு காட்டில் ஒரு சிங்கமும், புலியும், நரியும், காகமும் சேர்ந்து வாழ்ந்துவந்தன. அவர்களிடையே ஒரு நட்பு ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி சிங்கம் வேட்டையாடி கொண்டுவரும் உணவை சிங்கம் தின்றுவிட்டு மிச்சத்தை புலியும், நரியும் காகமும் புசிக்கும்.

இப்படியே பல காலம் சென்றது.நடுவில் ஒரு ஒட்டகம் பாதை தடுமாறி சிங்கம் இருக்கும் இடத்தில் வந்து சேர்ந்தது. அந்த நாள் ஒரு நல்ல நாளானாதால் சிங்கம் மகிழ்ச்சியுடன் இருந்தது. ஒட்டகத்தை கண்டவுடன் அதை வரவேற்று தன் நண்பனாக ஏற்றுக்கொண்டது. இது மற்றைய மிருகங்கள், காக்கைக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் சிங்கம் ராஜாவாயிற்றே!

ஐந்தும் பல காலம் சேர்ந்தே சந்தோஷமாக காலத்தை கழித்துவந்தன. ஒரு நாள் சிங்கம் தான் முதுமை அடைந்துகொண்டிருக்கும் நிலமையை புரிந்துகொண்டது. முன்பு போல் இறையை தேட முடியவில்லை. திடீரென்று உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டது. ஆகாரத்தையும் புசிக்காமல் படுத்துவிட்டது.

சிங்கத்தின் இந்தநிலையை கண்டு மற்றையவைகள் கவலைகொள்ள தொடங்கின. சிங்கம் சாப்பிடாததால் தங்களும் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்றுஒட்டகம் வெளியே சென்றதும் காகம், நரி, புலி மூன்றும் கூடி யோஜனை செய்தன. காகம் ஒரு யோஜனை தெரிவித்தது. அதன்படி பெரிய மிருகமான ஒட்டகத்தை சிங்கம் இறையாக்கி கொண்டால் -பல நாட்களுக்கு கவலை இல்லை என்றது. இதற்கு சிங்கம் ஒப்புக்கொள்ளாதே!

அதைபற்றி என்னிடம் விட்டுவிடுங்கள், நான் சிங்கத்தை சம்மதிக்கவைக்கிறேன் என்றது காகம். நான் சொல்வதுபோல் நடந்துகொள்ளுங்கள் என்றது காகம்.
காகம் சிங்கத்திடம் வந்து அதன் நிலையை எடுத்து சொல்லி-தன்னை இறையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றது.

சிங்கம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு நரி வந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியது. அதற்கும் சிங்கம் மறுத்துவிட்டது. புலியும் இதுமாதிரி கேட்டது, அதற்கும் சிங்கம் ம்றுத்துவிட்டது.

இவைகள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த ஒட்டகம் தான் சும்மா இருக்ககூடாது, தானும் அவ்வாறே செய்யவேண்டும் என்று கூட்டமாக நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்கு வந்து சிங்கத்திடம் தன்னை இறையாக ஏற்று கொள்ளுமாறு வேண்டியது. அந்த சமயம் புலி அதன்மீது பாய்ந்து ஒட்டகத்தை கொன்று அதை இறையாக சிங்கத்திற்கு அளித்தன.

சிங்கமும் ஒட்டகம் தானே முன்வந்து தன்னை அளித்ததால் வருத்தப்படாமல் மறுபடும்  பலம் பெற்று வேட்டையாட தொடங்கியது.

சில சமயம் நல்லவர்கள் கூட சந்தர்ப்பவாதிகளால் கெட்டுவிடுகிறார்கள்.

              

No comments:

Post a Comment