நாரையும், மயிலும்
ஒரு தடாகத்தில் சில நாரைகள் வந்து, வந்து போகும். அவைகள் ஆனந்தமாக பறந்து தடாகத்தில் உள்ள மீன்களை கொத்தி இறையாக்கி கொள்ளும். தடாகத்தின் கரையில் ஒரு மயில் வசித்து வந்தது.
ஒரு நாள் மயில் சும்மா இருக்காமல் நாரையை வம்புக்கு இழுத்தது. நீ உன் பறக்கும் அழகை நீரில் பார்த்து மகிழ்ந்து போகிறாய். உன்னால் என்னை போல அழகாக தோகையை விரித்து ஆட முடியாது. உனக்கு என் மாதிரி தோகை இல்லையே! என்றது.
நாரை மேலும் கீழுமாக பறந்து தண்னீரில் புகுந்து மீனை கவ்விக்கொண்டு-மயிலை பார்த்து கேட்டது-உன்னால் இப்படி முடியுமா? உன் அழகு தோகை கவைக்கு உதவாது என்று கேலி செய்தது.
மயில் இதை உணர்ந்து வெட்கப்பட்டு-தான் ஏன் இந்த வம்பை விலைக்கு வாங்கினோம் என்று நொந்து கொண்டது.
ஆட்டின் வாலை அளந்துதான் பகவான் வைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment