நாரையும், பாம்பும், கீரியும்
ஒரு தடாகத்தில் நாரைகள் வாழ்ந்துவந்தன. அருகில் உள்ள மரத்தில் முட்டையிட கூடுகட்டி முட்டையிடும். அந்த மரத்தின் பொந்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது. நாரைகள் இறை தேட போகும் சமயத்தில் பாம்பு மெதுவாக மரத்தின்மேல் ஏறி முட்டைகளை தின்றுவிடும்.
பாம்பின் இந்த செய்கையால் கவலை அடைந்த நாரைகள் தன்னுள் முதியவரை யோஜனை கேட்டன. அவர்-நீங்கள் நிறைய மீன்களை பிடித்து வரிசையாக இந்த மரத்திற்கு எதிர்த்தால் போல் உள்ள மரப்பொந்தின் வரை போடுங்கள். அந்த மர பொந்தில் கீரி ஒன்று வசித்துவருகிறது. அது மீன்களை புசித்துக்கொண்டே பாம்பு வசிக்கும் புத்திற்கு வரும். அப்போது பாம்பிற்கும், கீரிக்கும் சண்டை வரு, கீரி பாம்பை கொன்றுவிடும்-உங்கள் கவலை தீரும் என்றது.
அப்படியே நாரைகள் செய்தன. கீரியும் பாம்பை கொன்று விட்டது. இனி நிம்மதியாக இருக்கலாம் என்றால்-அது நடக்கவில்லை. இப்போது கீரி நாரையின் முட்டையை சாப்பிட ஆரம்பித்துவிட்டது.
தலிவலி போக திருகு வலி வந்ததாம்!
ஒருவனுடைய எதிரிக்கு எதிரி அவன்மேலும் அதிக நம்பிக்கை வைக்ககூடாது.
No comments:
Post a Comment