Monday, September 20, 2010

The Bull and the Lion


காளையும், சிங்கமும்-முதுகில் குத்தாதே!

ஒரு சிறிய நகரத்தில் சாம்பன் என்ற வியாபாரி சிறு பொருட்களை விற்று குடும்பன் நடத்திகொண்டிருந்தான். அவனது வருமானம் போதுமானதாக இருந்தாலும் தன்னால் தன் குழந்தைகளுக்கு கேட்டதை எல்லாம் வாங்கி தர முடியாதநிலையில் இருந்தான். தான் இங்கேயே இருந்து இதற்கு மேல் சம்பாதிக்க முடியாது-வேறு இடங்களுக்கு போய் பொருட்கள் கொண்டு வந்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைத்தான்.

அதன் பிரகாரம் ஒரு இரட்டை மாட்டு வண்டியையும் இரண்டு காளைகளையும் வாங்கி வெளியூருக்கு புறப்பட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு காளைக்கு காலில் காயம் பட்டு நடக்கமுடியாமல் போய்விட்டது. வியாபாரி யோஜனை செய்து-இதனால் தன் முயர்ச்சிக்கு தடங்கல் வர்க்கூடாது என்று அந்த காளையை அங்குள்ள வயலில் விட்டு விட்டு மெதுவாக வண்டியை ஒரு காளையோடு ஓட்டி சென்று பக்கத்து நகரில் வேறு காளையை வாங்கி பயணத்தை தொடர்ந்தான்.

நிற்க, வயலில் விடப்பட்ட காளை அங்குள்ள புல்லை தின்று கொஞ்சம் கொஞ்சமாக தேறி மறுபடியும் பழைய காளையாகிவிட்டதுகாளைக்கு ரொம்பவும் சந்தோஷம். வேளாவேளைக்கு சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை. சுதந்திரமாக திரியலாம். அந்த சந்தோஷத்தில் அது பெரிய குரலில் கத்திற்று. அப்போது அந்த பக்கம் ஒரு சிங்கம் தண்ணீர் குடிக்க வந்தது. தான் இதுவரை கேட்டிராத குரலை கேட்டு பயந்து ஓடிவிட்டது.

இதை பார்த்துகொண்டிருந்த இரு நரிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திகொள்ள முடிவு செய்தன. அதற்கு முதலில் சிங்கத்தினிடம் நல்ல பேயர் வாங்கி அவனுக்கு வேலைக்காரர்கள் ஆகவேண்டும். அதில் ஒரு நரி முதலில் சிங்கத்தினிடம் சென்று-சிங்க ராஜாவை பலவாறு புகழ்ந்து சிங்கத்தினிடமிருந்து அதன் பயத்திற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொண்டது.

பிறகு அந்த நரி தான் அதன் பயத்தை போக்குவதாக சொல்லி காளையிடம் சென்றது. காளையாரே! நாம் எல்லோரும் இந்த சிங்க ராஜாவிற்கு அடிமைகள் நாம் சந்தோஷமாக இங்கு இருக்கவேண்டுமானால் அவனுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்றது. காளையும் அது சரிதான் என்று நரியுடன் சென்று சிங்கத்தை பார்த்தது.

நரி சிங்கத்தினிடம் சென்று தாங்கள் பயந்த சப்தம் இந்த காளையிடமிருந்து தான் வந்தது-இனி பயப்படவேண்டாம் என்றது. சிங்கமும் நரியின் இந்த வீர செயலை பாராட்டி நரியை தனக்கு மந்திரியாக நியமித்தது.

கொஞ்சநாள் சென்றதுநரியின் அதிகாரத்தை பொறுக்கமுடியாமல் காளை மெதுவாக சிங்கத்தின் நட்பை பெற பல வேலைகளை செய்து சிங்கத்தை திருப்தி ச்ய்து கொண்டு வந்தது. சிங்கமும் மகிழ்ந்து காளையை பிரதம மந்திரியாக்கியது.காளையும் சிங்கமும் நெருங்கி பழக ஆரம்பித்தன.

இதை கண்ட நரிகள் பொறாமையுற்றன. இதை எப்படியாவது முறித்து விடவேண்டும் என்று யோஜனை செய்தன. மெதுவாக சிங்கத்தினிடம் வருத்ததுடன்-தாங்கள் நம்பியிருக்கும் காளை மமதையால் தானே அரசனாக வேண்டும் என்று உங்களை சமயம் பார்த்து கொண்று விட முடிவு செய்திருக்கிறது என்று பணிவுடன் கூறின. இதை நான் எப்படி நம்புவது என்று சிங்கம் கேட்டது. அதற்கு நரி- உங்களை பார்த்தவுடன் தன் கால்களை உதைத்துக்கொண்டு கொம்பை தாழ்த்தி உங்களை குத்த வரும் பாருங்கள் என்றன.

பிறகு நரிகள் காளையிடம் இதேமாதிரி மாற்றி சொல்லி விரோதத்தை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்தன. காளையும் அதே மாதிரி சிங்கத்தை நோக்கி பாய்ந்தது. சிங்கமும் கோபத்துடன் காளையின் மீது பாய்ந்து காளையை கொன்றது. நரிகளுக்கு மிகவும் சந்தோஷம்.

ல்ல நண்பர்கள் பிறர் சொல்வதை அப்படியே நம்பாமல் தீர விசாரித்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விபரீதமே!


No comments:

Post a Comment