மூட்டை பூச்சியும், கொசுவும்
ஒரு நகரத்தில் ஒரு பணக்காரர் வீட்டில் அழகான, மிருதுவான பட்டு மெத்தை, தலைகாணியுடன் படுக்கை அறை அமைந்திருந்தது. அதில் மதியமும், இரவும் தனவானும் அவரது மனைவியும் படுப்பதற்கு வருவார்கள். பாக்கி நேரம் முழுவதும் யாரும் கிடையாது.
அந்த படுக்கையில் சுதந்திரமாக மூட்டை பூச்சி குடும்பம் வாழ்ந்து வந்தது. இப்படியே பல காலம் சென்றன. இதற்கிடையில் ஒரு கொசு ஜன்னல் திறந்து இருந்ததால் உள்ளே நுழைந்தது. இதை கண்ட மூட்டை பூச்சி அதை தடுத்து நிறுத்தியது.
கொசு தாழ்ந்த குரலிலும், வணக்கத்துடன்- நான் இதுவரையிலும் அருகில் உள்ள மிலிடெரி காம்பில் வசிக்கும் ராணுவ வீரர்களை ந்ம்பி வாழ்ந்துவந்தேன். அவர்கள் இரத்தம் தடித்து விட்டது-உப்பும் அதிகமாகி விட்டது. அதனால் வேறு இடத்தை தேடி இருந்தேன்.
உங்களோடு போட்டி போடமாட்டேன். நீங்கள் அனுமதித்தால் நானும் இங்கு தங்குகிறேன் என்றது. மூட்டை பூச்சி இதற்கு ஒரு நிபந்தனை பேரில் அனுமதித்தது. கொசு பகலில் தனவான் பகலில் கொஞ்ச நேரம் தூங்க வருவார். அப்போது அவரது காலில் நீ கடிக்கலாம் என்றது மூட்டை பூச்சி. இதற்கு கொசு சம்மதித்தது.
அது மாதிரி கொசு செய்தது. அப்போது தனவானுக்கு கடுமையான கோபம் வந்தது. வேலையாட்களை கூப்பிட்டு படுக்கையை உதறி செய்து அவரை கடித்த பூச்சிகளை கொன்று விடுங்கள் என்றது. அதை கேட்ட கொசு பறந்து போய்விட்டது. ஆனால் மூட்டை பூச்சிக் குடும்பத்துடன் மாட்டிக்கொண்டது. வேலை காரர்கள் அவைகளை கொன்றுவிட்டார்கள்.
புதிதாக நண்பர்களை சேர்க்கும் போது தீர ஆலோசனை செய்யவேண்டும், இல்லாவிட்டல் முதலுக்கே மோசமாகிவிடும்.
No comments:
Post a Comment