ஏழை முட்டாள் நெசவாளி
ஒரு ஊரில் ஒரு ஏழை நெசவாளி வெகு கஷ்டப்பட்டு உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். அவனுடைய தறியும் பழுதான நிலையில் இருந்தது. அதை சரி செய்ய காட்டிற்கு சென்று மரத்தை கொண்டுவர புறப்பட்டான்.
அவன் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதை வெட்ட கோடாறியை எடுத்தான். அப்போது அந்த மரத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது அந்த மரத்தில் வசிக்கும் தேவதையுடைய குரல். நண்பா! நான் பலகாலம் இந்த மரத்தில் வசித்து வருகிறேன். இதை வெட்டதே- அதற்கு பதிலாக ஒரு வரம் கேள், தருகிறேன் என்றது. விவசாயும் தன் மனைவியை கலந்து சொல்கிறேன் என்று விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினான்.
வழியில் அவன் சிநேகிதனை கண்டான்-தேவதை சொன்னதை சொல்லி யோஜனை கேட்டான். அதற்கு நண்பன்-நான் இந்த இடத்திற்கு ராஜாவாக வேண்டும் என்று கேள் என்றான். நெசவாளி வீடு திரும்பியவுடன் மனைவியுடன் நடந்ததை சொல்லி என்ன கேட்கலாம் என்று சொல் என்று கேட்டான்.
அவன் மனைவியும் நமக்கு அரசு வேண்டாம்-அதை நிர்வாகம் செய்ய நம்மால் முடியாது. நமக்கு இப்போது இரண்டு கைகள் தான் இருக்கின்றன. அதனால் நம்மால் கொஞ்சம் தான் துணி நெய்ய முடிகிறது. அதற்கு பதிலாக நாங்கு கைகள் இருந்தால் நிறைய துணிகள் நெய்யலாம்-நல்ல லாபமும் கிடைக்கும்-ஆகையால் நீ போய் எனக்கு நான்கு கைகள் இரண்டு தலைகள் வேண்டும் என்று கேள் என்றாள்.
அவனும் தேவதையை அப்படியே கேட்டான்-அதுவும் அப்படியே தந்தது. அவன் சந்தோஷமாக வீடு திரும்பினான். அவனை பார்த்த மக்கள் பயந்து இது ஏதோ ஒரு பேய் அல்லது காட்டு மிருகம் என்று அவனை அடித்து கொன்றுவிட்டார்கள். முட்டாள்தனமான ஆசையால் முதலே போய்விட்டது.
நல்ல நேரம் வரும்போது நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment