Wednesday, August 25, 2010

அரங்ககனை அநுபவித்தவர்கள்
ஆழ்வாரும், பட்டரும்

லியுகத்தில் நம்மை சுற்றி பெரும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கொலை, கொள்ளை, விபத்துக்கள், சூராவளி, வெள்ளப்பெருக்கு, நெருப்பு, கற்பழிப்பு, கேளிக்கைகள் இப்படியாக பல இன்னல்களை நாம் அநுபவித்துக்கொண்டிருக்கிறோம். மனம் அமைதியை நாடுகிறது. மனதில் ஏதோ ஒரு பயம்.

நாம் துக்கங்கள் நீங்கி சுகத்துடன் வாழ நினைக்கின்றோம். இது இயல்பு. அதை அடைவது எப்படி. அதற்கு புதிய முயர்ச்சிகள் தேவையில்லை. நம் முன்னோர்கள் நமக்காக வழியை காட்டியுள்ளார்கள். அதில் ஒன்றுதான் நாம சங்கீர்த்தனமும் ஆழ்வார்களும் பட்டர்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்து நமக்கு விட்டு சென்ற பாசுரங்களும் அருளிசெயல்களும்.

கலியின் கொடுமையால் அவதியுரும் நமக்கு இந்த பாசுரங்கள்  நம் மனதில் பதிய வைத்துக்கொண்டு நித்ய பாராயணம் செய்துவந்தால் இடர்படும் தொல்லைகள் நசியும் நன்மையும் செல்வமும் நாளும் பெருகும்.

ஆழ்வாரும் பட்டரும் அனுபவித்த அரங்கன்:     

அரங்கனை பற்றி அவரோடு கலந்துவிட்ட பெரியோர்-திருப்பாணாழ்வாரும் பராசர பட்டரும்:
அவர்கள் பாடியுள்ள இரு பாசுரங்கள் மணியாகவும், ரத்தினமாகவும் அமைந்துள்ளன. அவைகள் இரண்டையும் பக்கது பக்கத்தில் இணைத்து பார்க்க ஆசை பட்டேன். இரண்டுமே 10, 8 ஸ்லோகங்கள் கொண்டவை. அரங்கனை பாதம் முதல் திருமுடி வரை அனுபவித்து எழுதியவை. இவைகளை தினம் பாராயணம் செய்பவர்கள் பாக்கியசாலிகள். நாமும் அரங்கனோடு கலந்துவிடுகிறோம்.

அமலாதிபிரான், ஸ்ரீரெங்கநாத ஸ்தோத்ரம்:

தனியன்:

ஆபாதசூடமநுபூயஹரிம்சயாநம்
மத்யேகவேரதுஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ருஷ்ருதாம்நயநயோர்விஷயாந்தராணாம்
யோநிச்சிகாயமநவை முநிவாஹநாந்தம்- பாணாழ்வார்.

காட்டவேகண்ட பாதகமலம் நல்லாடைஉந்தி
தேட்டமுதரபந்தம் திருமார்புகண்டம்செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து
பாட்டினால்கண்டுவாழும் பாணர்த்தாள்பரவினோமே //- பாணாழ்வார்

ஸ்ரீ பராசர பட்டார்ய: ஸ்ரீ ரங்கேச புரோஹித:
ஸ்ரீ வத்ஸாங்கஸுத: ஸ்ரீ மாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே // - பராசர பட்டர்.
-----------------------

அமலாதிபிரான் அடியார்க்குஎன்னையாட்படுத்த
விமலன்*   விண்ணவர்கோன் விரையார்பொழில்வேங்கடவன்
நிமலன்நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம்வந்து எங்கண்ணினுள்ளவொக்கின்றதே ! - பாணர்.

ஸப்தப்ராகார மத்யே
ஸரஸிஜமுகுளோத்பாஸமாநே விமாநே
காவேரிமத்யதேசே
ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம்
கடிநிகடசிர: பார்ச்வவிந்யஸ்தஹஸ்தம்
பத்மாதாத்ரீகராப்யாம்
பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம் // பராசரப்ட்டர்.

உவந்தவுள்ளதனாய் உலகமளந்துஅண்டமுற*
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரை
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான்* அரை
சிவந்தஆடையின்மேல் சென்றதாம் என்சிந்தனையே! --பாணர்.

கஸ்தூரி கலிதோர்த்வ புண்ட் ரதிலகம்
கர்ணாந்த லோலேக்ஷணம்
முக்தஸ்மேரமநோஹராதரனம்
முக்தாகிரீடோஜ்ஜ்வலம்
பச்யந் மாநஸபச்யதோஹரகுச:
பர்யாய பங்கேருஹம்
ஸ்ரீரங்காதிபதே: கதா நு வதனம்
ஸேவேய பூயோப்யஹம் - // பராசர ப்ட்டர்.

மந்திபாய் வடவேங்கடமாமலை*வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவிணையான்
அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப்படைத்ததோரெழில்*
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.-பாணர்

கதாஹம் காவேரீ
தடபரிஸரே ரங்கநகரே
சயாநம் போகீந்த்ரே
சதகமணி ச்யாமலருசிம்
உபாஸீந: க்ரோசந்
மதுமதந! நாராயண! ஹரே!
முராரே! கோவிந்தேத்யநிசம்
அபநேஷ்யாமி திவாஸந் // பட்டர்

சதுரமாமதிள்சூழ் இலங்கைகிறைவந்தலைபத்து
உதிரவோட்டி* ஓர்வெங்கணையுய்த்தவன் ஓதவண்னன்
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான்* திருவயிற்று
உதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகினறதே - பாணர்.

கதாஹம் காவேரீ
விமலஸலிலே விதகலுஷ:
பவேயம் தத்தீரே
ச்ரமுஷி வஸேயம் கநவநே
கதா வா தம் புண்யே
மஹதி புளிநே மங்களகுணம்
பஜேயம் ரங்கேசம்
கமலநயனம் சேஷசயநம்//-பட்டர்.

பாரமாய பழவினைப்பற்றறுத்து*  என்னத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்தன்றியென்னுள்புகுந்தான்
கோரமாதவம்செய்தனங்கொலறியேன் அரங்கத்தம்மான்*திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே - பாணர்.

பூகீகண்டத்வயஸஸரஸ
ஸ்நிக்தநீரோபகண்டாம்
ஆவிர்மோதஸ்திமித
சகுநாநுதிதப்ரம்ஹகோஷாம்
மார்கேமார்கே பதிகநிவஹை
உஞ்ச்யமாநாபவர்காம்
பச்சேயம் தாம் புநரபி புரீம்
ஸ்ரீமதீம் ரங்கதாம்ந: // - பராசர பட்டர்.

துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன்* அஞ்சிறைய
வ்ண்டுவாழ்பொழில்சூழ் அரங்கமேயவப்பன்
அண்டரண்டபகிரண்டத்து ஒரு மாநிலமெழுமால்வரை*முற்றும்
உண்டகண்டம்கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே //- பாணர்.

நஜாது பீதாம்ருதமூர்ச்சிதாநாம்
நாகௌகஸாம்   நந்தவாடிகாஸு
ரங்கேச்வர த்வத் புரமாச்ரிதாநாம்
ரத்த்யாசுநாம் அந்யதமோ பவேயம் //- பட்டர்.

கையனார் சுரிசங்கனலாழியர்* நீள்வரைபோல்
மெய்யனார் துளபவிரையார் கமழ்நீண்முடிஎம்
ஐயனார்* அணியரங்கனார் அரவினணைமிசைமேயனார்
செய்யவாய் ஐயோ! என்னைசிந்தைகவர்ந்ததுவே- பாணர்

அஸந்நிக்ருஷ்டஸ்ய நிக்ருஷ்டஜந்தோ
மித்த்யாபவாதேந கரீஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி ஸந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்கபதே கரோஷி //- பட்டர்

பரியனாகிவந்த அவணணுடல்கீண்ட* அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன்முகத்து*
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி* நீண்ட அப்
பெரியவாய்கண்கள் என்னைப்பேதமைச்ய்தனவே //- பாணர்.

ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்சநகரீம்
தார்க்ஷ்யாத்ரி ஸிம்ஹாசலௌ
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச
பதரீநாராயணம்    நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதீ ப்ரயாக மதுரா
அயோத்யா கயா புஷ்கரம்
ஸாளக்ராமகிரீம் நிஷேவ்ய ரமதே
ராமாநுஜோயம் முநி: - பட்டர்

ஆலமாமரத்தினிலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவிணையான்*
கோலமாமணியாரமும், முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேணி ஐயோ! நிறைகொண்டதுஎன்நெஞ்சினையே! - பாணர்

கொண்டவல்வண்ணைக் கோவலனாய்வெண்ணை
உண்டவாயன்* என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே - பாணர்.

----------------------------------








No comments:

Post a Comment