Sunday, August 15, 2010

Hithopadesa Stories-1

content="Word.Document" name="ProgId">

ஹிதோபதேச கதைகள்

நம்முடைய நாடு பழமை வாழ்ந்த நாடு. எவ்வளவோ பெரியவர்கள் நாம் நல்ல அறிவோடு, இயற்கை வளம் நிரம்பி, செல்வம் தழைத்து நல்லவர்களாக வாழ்ந்து நம் சந்ததிகளும் சீறும் சிறப்போடும் வாழ பல நீதி கதைகளும், வழிகாட்டிகளாக பல்வேறு சாதனங்களையும் விட்டு சென்றிருக்கிறார்கள்.

முக்கியமாக நம் குழந்தைகளை வருங்கால நல்ல அறிவுள்ள இளைஞர்களாக வளர்க்கவும் அவர்களுக்கு சுலபமாக புரியவும் எளிதில் கடைபிடிக்க கூடிய அறிவுரைகளை சின்ன சின்ன நீதி கதைகள் மூலம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

மிருகங்கள் என்றால் சிறுவர்களும், பெரியவர்களும் ஆவலோடு பார்ப்பார்கள், அவைகளை கண்டால் மகிழ்ச்சியடைவார்கள். நீதி கதைகளை மிருகங்கள் மூலம் போதித்தால் சிறுவர்கள் மனதில் ஆழமாக பதியும் என்று முன்னோர்கள் பல கதைகளை தந்திருக்கிறார்கள்.

அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

தங்க வளையல்



ஒரு காட்டில் ஒரு புலி இருந்தது. அது வேட்டையாடி தனது பசியை தினமும் தீர்த்துக்கோண்டிருக்கும். ஒரு சமயம் அது ஒரு திருடனை துரத்தியது. அவன் திருடிய மூட்டையிலிருந்து சில நகைகள் கீழே விழுந்தன. அதில் பளிச்சென்ற வளையல் ஒன்று கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு பத்திரமாக வைத்துக்கொண்டது.

சில வருஷம் கழிந்தது.

புலியும் வயதாகி கொண்டே போனது. அதன் பலம் குறைய ஆரம்பித்தது. கன்ணும் சரியாக தெரியவில்லை. முன்பு போல் அதால் வேட்டையாடி இறை தேட முடியவில்லை. இனி தன் சாமர்த்தியத்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று புது யுக்தியை கையாள ஆரம்பித்தது.

புலி புதரில் ஒளிந்து கொண்டு தன் கையில் இருக்கும் வளையளை ஆட்டும். அதன் பளிச்சென்ற ஒளியை பார்த்து ஏமாந்து பல மிருகங்கள், பறவைகள் அதனிடம் சிக்கிகொள்ளும். புலி அந்த வளையளை ஆசை காட்டி அவைகளை தன்பால் இழுத்துகொள்ளும்.



ஒரு நாள் அந்த வழியே ஏழை ஹரி என்பவன் அவ்வழியே சென்றான். புலி அவனை பார்த்துவிட்டதுபுலி அவனை அழைத்தது. " ! நல்லவனே! எனக்கு இந்த வளையளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதை வாங்கிகொண்டு நீ உன் பிழப்பை நடத்திக்கொள் " என்றது.


ஹரியோ ஆச்சர்யத்துடன் சுற்றுமுற்றெல்லாம் பார்த்து யாரையும் காணாமல் ஒரு வெளிச்ச்த்தை மட்டும் பார்த்தான். பிறகு புலி அதை வைத்துக்கொண்டு ஆட்டுவதை பார்த்தான். அவன் அதை கண்டு ஓடிப்போக பார்த்தான். ஆனாலும் அந்த வளையல் மீது ஆசை சற்று தயங்கினான்.

அதை பயன்படுத்திகொண்டு புலி-ஹரியை பார்த்து-நீ என்னைகண்டு பயப்படவேண்டாம். எனக்கோ வயதாகி விட்டது, கண் சரியாக தெரியவில்லை, நகங்கள் எல்லாம் விழுந்துவிட்டன, பல்கள் விழுந்துவிட்டன. நான் எல்லா கெட்ட செயல்களையும் விட்டுவிட்டேன்-என்னை நம்பு- என்றது. இவைகளுக்கு பரிகாரமாக இந்த வளையலை உனக்கு அளிக்கிறேன்- என்றது.

ஏழை ஹரியோ வளையளின் மோகத்தால் தன் புத்தியை இழந்து அதை வாங்கிகொள்ள புலியிடம் சென்றான். அது சமயம் புலி அவன்மேல் பாய்ந்து அவனை கொன்று தன் பசியை தீர்த்துக்கொண்டது. ஹரியோ தான் சாகும் சமயம் காட்டு மிருகத்தை போய் நம்பினேனே! என்று தன் மடத்தனத்தை நொந்துகொண்டே செத்தான்.


---------------------

 

No comments:

Post a Comment