Tuesday, August 17, 2010

Monkey and the Bell

ஹிதோபதேச கதைகள்-7

குரங்கும் மணியும்



ஹரித்வார் அருகில் ஹிரிஷேகேஷ் என்ற மலை பகுதி உள்ளது. அதன் அடிவாரத்தில் ஒரு சிறிய நகரம் உள்ளது. ஒரு நாள் அந்த பகுதி வழியே ஒரு திருடன் தான் திருடிய மூட்டையுடன் சென்று கொண்டிருந்தான். அவனை பார்த்த ஒரு புலி அவன்மீது பாய்ந்து அவனை கொன்றுவிட்டு தன் இறையை முடித்துகொண்டு அந்த மூட்டையும் குதறி போட்டுவிட்டு போய்விட்டது. அதில் உள்ள நகைகளும் சிதறி விழுந்தன.

கொஞ்சநேரம் கழித்து குரங்கு படைகள் அதன் வழியாக சென்றன. அதில் ஒரு குரங்கு மூட்டையின் பக்கம் வந்து அங்கு கிடக்கும் மணியை பார்த்தது. அதை எடுத்து ஆட்டியது. மணியும் கனீரென்று ஒலித்தது. அதை கேட்ட குரங்கும் அதன் கூட்டமும் மகிழ்சியுடன் ஆர்பரித்தன.

அதை மலைக்கு எடுத்து சென்று ஆட்டி விளையாட ஆரம்பித்தன. திடீரென்று மலையிலிருந்து மணி சப்தத்தை கேட்ட மக்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். அவர்களுக்கு புரியவில்லை. பயமாகவும் இருந்தது. அவர்களிடையே உள்ள ஒரு தைரியசாலி தான் போய் மலையில் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று புறப்பட்டான்.

அவன் அந்த திருடன் இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் வந்தான். நகைகள் தாறுமாறாகவும் திருடனும் ரத்தவெள்ளத்தில் கிடப்பதையும் பார்த்து பயந்து-இது ஏதோ பிசாச் வேலை என்று ஓடிவிட்டு நகரத்திற்கு வந்து தான் கண்டதை சொன்னான்.

தினமும் மணி அடிப்பதையும் சிலர் இறந்ததாக கற்பனை செய்துகொண்ட மக்கள் அந்தஊர் அரசரிடம் முறையிட்டார்கள். அதில் ஒரு தைரியசாலி கிழவி இதில் நம்பிக்கை கொள்ளாமல் தான் மட்டும் போய் என்ன நடக்கிறது என்று ரகசியமாக மலைக்கு புறப்பட்டாள். அவளும் திருடன் இறந்து கிடப்பதையும் நகைகளையும் பார்த்தாள். நகைகளை எடுத்துகொண்டு மறுபடியும் மேலே பார்த்தாள். அங்கு குரங்கு கையில் மணியையும் அவைகள் ஆனந்தமாக அதை ஆட்டுவதையும் பார்த்தாள்.

நகைத்துக்கொண்டே-இது குரங்கின் வேலை என்றும் இதை சமயோசிதமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தீர்மானித்து-அரசரிடம் தான் இந்த பிசாசை விரட்டிவிடுவதாகவும் தனக்கு நிறைய சன்மானத்தையும் கேட்டாள். அரசரரும் சம்மதித்து ஆட்களை கூட்டி கொண்டு போ என்றார். கிழவி அதெல்லாம் வேண்டாம் என்றும், வழியில் கூடையில் நிறைய பழங்களை எடுத்துகொண்டு மலைக்கு போனாள். அங்கு குரங்குகள் மணியை அடித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தன.

கிழவி கூடையை இறக்கி வைத்துவிட்டு பழங்களை வாரி இறைத்தாள். குரங்கும் மணியை போட்டுவிட்டு பழங்களை தின்ன ஆரம்பித்தது. கிழவி அந்த மணியை எடுத்துகொண்டு கிழே வந்து அரசரிடம் தான் அந்த பிசாசை விரட்டிவிட்டேன் என்றும் இந்த மணிதான் காரணம் என்று கொடுத்தாள். அரசரும் சந்தோஷம் அடைந்து கிழவிக்கு நிறைய சன்மானம் அளித்தார்.

எதையும் அவசரப்பட்டு முடிவு கட்டக்கூடாது. சமயோசிதமாக மூளையை
உபயோகித்தால் நிறைய லாபம் உண்டு.

------------------

No comments:

Post a Comment