Tuesday, August 17, 2010

The Crow and snake


ஹிதோபதேசகதைகள்:6

காக்கையும் பாம்பும்


காட்டில் ஒரு மரத்தில் இரண்டு காக்கைகள் ( ஆணும், பெண்ணும் ) சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தன. அவைகள் கூடு கட்டி முட்டைகளை பத்திரமாக பாதுகாத்து வந்தன. அவைகள் இறை தேடி செல்லும்போது அந்த மரத்தின் அடியில் பொந்தில் ஒரு பாம்பு வசித்துவந்தது. அது காக்கைகள் இல்லாத சமயம் பார்த்து மரத்தில் ஏறி முட்டைகளை தின்றுவந்தது.



காக்கைகள் வந்து பார்த்தபோது முட்டைகளை காணவில்லை. அவைகள் வருத்தப்பட்டன. மறுபடியும் முட்டை இடும் காலம் வந்தபோது ஆண் காக்கை, பெண் காக்கையிடம் ஜாக்கிரதையாக முட்டைகளை பாதுகாத்து நம் எதிரி யார் என்று தெரிந்துகொள் என்று கூறிவிட்டு இறை தேட போய்விட்டது.

பெண் காக்கை ஜாக்கிரதையாக கவனித்துக்கொண்டிருந்தபோது மரத்தின் பொந்திலிருந்து பாம்பு வெளிவந்து மரத்தின் மேல் ஏறி வருவதை பார்த்தது. பாம்பு கூண்டிற்கு வந்து முட்டைகளை தின்றுவிட்டு கீழே இறங்கி பொந்திற்கு போய்விட்டது.



பெண் காக்கை தன் கணவன் வந்தபோது மேற்படி சம்பவத்தை சொல்லி இனி இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது, நாம் வேறு பத்திரம்மான இடத்திற்கு போய்விடலாம் என்று கூறியது. அதை கேட்ட ஆண் காக்கை-கவலைப்படாதே! இதற்கு ஒரு வழி செய்வோம்-நாம் புத்திசாலித்தனமாக செயல் படவேண்டும். கோழை போல ஓடிவிடக்கூடாது. வேறு இடத்திற்கு போனாலும் இது மாதிரி எதிரிகளை சந்திக்கவேண்டும். ஆகையால் யோஜிப்போம் என்று கூறியது.

அந்த சமயம் அந்த தேசத்து அரசி தோழிகளுடன் ஆற்றில் நீராட வந்தாள். தினமும் அவள் நீராட வருவாள்தன்னுடைய நகைகளை கழட்டி கரையில் வைத்துவிட்டு நீராட செல்வாள். காக்கை இதை கவனித்தது. தன் மனைவியிடம் நாளை அரசி நீராட வருபோது நகைகளை கரையில் வைக்கும் சமயம் நீ போய் ஒரு நகையை எடுத்துவந்து பாம்பு வசிக்கும் மரப்பொந்தில் போட்டுவிடு. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார் என்று கூறியது.

அதன்படியே அரசி நீராட வந்து நகைகளை கழட்டி வைத்தவுடன் காக்கை ஒரு நகையை எடுத்துக்கொண்டு பாம்பு பொந்தில் போட்டுவிட்டது. அதை துரத்திக்கொண்டுவந்த காவலாளிகள் மரப்பொந்தை அகற்றும்போது பாம்பு வெளியே வந்தது. அவர்கள் அதை அடித்து கொண்றுவிட்டு நகையை எடுத்து சென்றார்கள். காக்கைகளும் இதை பார்த்து சந்தோஷமடைந்து இனி பயமில்லை என்று தங்கள் இல்லற வாழ்க்கையை தொடர்ந்தன.

துஷ்டர்களின் சகவாசம் பேராபத்துக்குறியது. கஷ்டம் வரும்போதுநிதானமாகசிந்தித்துயல்படவேண்டும்-பலமான எதிரிகளையும் நம் சாமர்த்தியத்தால் வெல்லலாம்

-----------------------

No comments:

Post a Comment