Sunday, August 15, 2010

Blue Jackal

நீல நிற நரி




ஒரு சமயம் ஒரு நரி அருகில் உள்ள கிராமத்தில் தற்செயலாக நுழைந்தது. வழியில் வண்ணான் சாயம் ஏற்றுவதற்காக நீல கலரை ஒரு தொட்டியில் வைத்திருந்தான். அதில் அந்த நரி தவறி விழுந்துவிட்டது. அதைவிட்டு வெளியேறி மறுபடியும் காட்டை நோக்கி ஓடியது.

வெய்யலில் கலர் காய்ந்து அது நீல நிறமாக மாறிவிட்டது. அதை கண்டு அதிசயம் அடைந்து இந்த மாறுதலை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ள நினைத்தது. இதன் மூலம் தன் கூட்டத்தை அரசாள நினைத்தது. உடனே காட்டில் உள்ள எல்லா நரிகளையும் கூட்டியது.

அந்த கூட்டத்தில்-இந்த காட்டில் உள்ள தேவதை தன்னை படைத்து உங்களை எல்லாம் அரசாள உத்தரவிட்டிருக்கிறாள். அதற்காக தான் என்னை நீல நிறமாக படைத்து உங்களிடம் அனுப்பியிருக்கிறாள். எனக்கும் அசாதாரண பலத்தையும் தந்திருக்கிறாள்.

எல்லா நரிகளும் இந்த நரியை பார்த்து ஆச்சர்யம் அடைந்ததாய் அது சொல்வதை நம்பி அதை தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டன. தன்னுடைய இந்த புதிய பதவியை பயன்படுத்தி அந்த நரி அதிகாரம் செய்ய தொடங்கியது. வேலை செய்யாமல் நல்ல சாப்பாடு. தனக்கு வேண்டியவர்களை மந்திரிகளாக அமைத்துக்கொண்டது. இப்படியே ஆனந்தமாக பொழுதை கழித்துவந்தது.

அதிகாரம் தலைக்குமேல் ஏறியதால் காட்டில் உள்ள மற்ற மிருகங்களையும் அரசாள நினைத்தது. அவைகளும் அதன் நிறத்தை கண்டு அதை தலைவனாக ஏற்றுக்கொண்டன. பரமானந்தத்தையடைந்த அந்தநரி அதிகாரம் தலைக்குமேல் சென்றதால் தன்னுடைய மந்திரி சபையை கலத்துவிட்டு சிங்கத்தையும், புலியையும் மந்திரிகளாக நியமித்தது.

இதனால் வருத்தம் அடைந்த நரிகள் தனியே கூடி தலைவனின் நம்பிக்கை துரோகத்தை பற்றி விவாதித்தன. ஒரு வயதான நரி-நாம் எல்லாம் கவலைப்படவேண்டாம். அந்த நரிக்கு நல்ல பாடம் கற்பிக்கலாம் என்று யோஜனை சொல்லியது- அதாவது எல்லா நரிகளும் அரச சபைக்கு வந்து ஒரே குரலாக ஊளையிடவேண்டும். அந்த சப்தத்தை கேட்டு தலைவனும் வந்து ந்ம்மோடு சேர்ந்து ஊளையிடும். அப்போது சிங்கமும் புலியும் அதன் உண்மை சொரூபத்தை கண்டு அதை கொன்றுவிடும்- இது தான் அந்த யோஜனை.

எல்லா நரிகளும் இதை ஆமோதித்து அரச சபைக்கு வந்து ஊளையிட ஆரம்பித்தன. இதைகேட்ட தலைவனும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஊளையிட ஆரம்பித்தது. இதை பார்த்துக்கொண்டிருந்த சிங்கமும் புலியும் சடாரென்று அதன் மீது பாய்ந்து அதை கொன்று ஆகாரமாக்கிகொண்டன.

என்ன தான் முட்டாள் அறிவாளிகளின் மத்தியில் புகுந்தாலும் அவனுடைய சாயம் வெகு சீக்கிரத்திலேயே வெளுத்துவிடும்

No comments:

Post a Comment