Sunday, August 15, 2010

Foolish Ass


முட்டாள் கழுதை


நகரத்தின் ஒரு கோடியில் ஒரு வண்ணான் இருந்தான். அவன் ஒரு கழுதையை வைத்துக்கொண்டு நகரவாசிகளின் துணிகளை வெளுக்க வாங்கி வந்து வெளுத்து சலவை செய்து கொடுத்து வந்தான்.கழுதையும் அவனிடம் பல காலம் வேலை செய்து வந்தது. அதற்கும் வயதாகிகொண்டே போனது. இனிமேல் அது தனக்கு உதாவாது என்று உணர்ந்த வண்ணான் அந்த கழுதையை வெளியேற்ற முடிவு செய்தான்.

அந்த கழுதையை புலி தோலால் சுற்றி அதை அருலில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று ஒரு வயலில் விட்டு விட்டு வந்துவிட்டான். கழுதையும் அந்த வயல் செழிப்பாக இருப்பதை கண்டு ஆனந்தம் அடைந்து அதில் மேய ஆரம்பித்தது. அதற்கு தீனி நிறைய கிடைத்ததால் அந்த இடத்தையே தன்னுடைய வாசஸ்தலாமாக ஏற்படுத்திகொண்டது. தன்னுடைய இந்த புதிய வாழ்க்கையை-வேலை செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தது.

அதனுடைய புலி தோலை கண்டு பயந்து அந்த வயலின் சொந்தக்காரன் ஓடிவிட்டான். கழுதையும் பயமில்லாமல்   மேய தொடங்கியது. கொஞ்ச நாளில் அது கொழு கொழுவென்றாகி பழைய பலத்தையும் பெற்றது.

பயிர்கள் நன்றாக விளைந்து அறுவடைகாலம் வந்தது. இப்போது அந்த வயலின் சொந்தக்காரன் ஒரு கருப்பு போர்வையை போத்திக்கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் வயலுக்கு வந்தான். அவன் குனிந்து குளிருக்காக நெருப்பை மூட்ட முனைந்தான். அவன் அப்படி குனிந்தபோது அது இன்னொரு கழுதைபோல வயலில் உள்ள கழுதைக்கு தோற்றமளித்தது. இதைகண்டு ஆனந்தம் அடைந்த கழுதை அந்த சொந்தக்காரனை நோக்கி கத்திகொண்டு ( கறைத்துக்கொண்டு ) ஓடி வந்தது.

அவன் கழுதை குரலை கேட்டு இது புலி இல்லை-கழுதை என்று தெரிந்துகொண்டு தன் துப்பாக்கியால் அதை சுட்டான். கழுதையும் தன் உயிரை விட்டது.

என்ன தான் தன் சுய உருவத்தை மாற்றிக்கொண்டாலும் ஏதோ ஒன்று நம்
சுய உருவத்தை காட்டிக்கொடுத்துவிடும். நாம் நாமாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment