

ஜய மங்கள ஸ்லோகங்கள்
சதுச்லோகீ
ஆளவந்தார் ஸாதித்த 4- ஸ்லோகங்கள் மஹாலக்ஷிமியின் த்வம், ஸௌலப்யம், உபாயத்வம், ப்ரயோஜனம் ஆக 4- குணங்களை பற்றி குறிப்பிடுகின்றன.
காந்தஸ்தே புருஷோத்தம: பணிபதிச்ஸ்ய்யாஸநம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா மாயா ஜகந்மோஹிநீ
ப்ரஹ்மேசாதிஸுவ்ரஜஸ் ஸதயிதஸ்த்வத்தாஸதாஸீகண:
ஸ்ரீர்த்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம் //
தேவியே! நீ எப்பேர்ப்பட்டவள் ! புருஷோத்தமன் உனது பர்த்தா. ஆதிசேஷனே திருவணை. பக்ஷிராஜனே உனது வாஹனம். உலக்மமே மயங்கும் மாயை திரையாக விளங்குகிறது. பரமேச்வரன், ப்ரஹ்மா உனது அடியார்கள். உனது மஹிமையை அறியமுடியாதவர்கள் நாங்கள்.
யஸ்யாஸ்தே மஹிமாந மாத்மந இவ த்வத்வல்லபோsபி ப்ரபு:
நாலம் மாதுமியத்தயா நிரவிதம் நித்யா/நுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரப்ந்ந இதி ச ஸ்தோஷ்யாம்யஹம்
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே தயாம் தே விதந் //
தேவியே! உன்னுடைய எல்லையில்லா அநுகூலமாயிருக்கும் மஹிமையை உன் பர்த்தாவான நாதனே அளவிட்முடியாதவராயிருக்கிறார். உன்னுடைய கருணையை புரிந்துகொண்டு என்னால் வாயால் துதிக்க சக்தி
யற்றவனான நான் உன்னை சரணடைகிறேன்.
ஈஷத் த்வத் கருணா.நிரீக்ஷணஸுதா ஸ.துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ்த்ரிபுவ.நம் ஸம்ப்ரத்யநந்தோயம்
ச்ரேயோ ந ஹுரவி.ந்தலோசனமந: காந்தப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷரவைஷ்ணவாத்வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்
தாயே உன்பொருட்டுதான் பகவான் பக்தர்களிடம் அருள் பாலிக்கிறார். தங்களின் கருணை கண்கள் இவ்வுலகை ரக்ஷிக்கின்றன. முன்பு சோபையற்ற இம்மூவுலகம் இன்று சோபையடைகிறது.
சாந்தாநந்தமஹா விபூதிபரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மர்த்தம் ப்ரஹ்ம ததோsபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யாநி யதாஸுகம் விஹரதே ரூபாணி ஸர்வாணி தா
ந்யாஹூஸ்ஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோபகூடாதி தே
சாந்தமானதும் அநந்தமானதுமான மஹத்தான விபூதிகள் நிறைந்த ப்ரஹ்ம ரூபத்தைவிட அத்யாச்சர்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம் ஹரிக்கு பிரியமானது. பகவானின் அந்த ரூபங்கள் எல்லாம் தங்களுடைய அநுரூபமான மஹிமை பொருந்திய ஸ்வரூபத்துடன் நன்கு சேர்/ந்தவையே
நம் தாய் மஹாலக்ஷ்மி நமக்காக பரிந்து பேசுபவள். நமக்காக பாப மன்னிப்பு கேட்பவள். இந்த ஸ்லோகத்தை சொல்பவர்கள் எல்லா ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்.
No comments:
Post a Comment