Tuesday, December 15, 2009

சரணாகதி கத்ய சாரம்



சரணாகதி கத்ய சாரம்


இந்த சரணாகதி கத்யமானது ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்தரத்தின் போது பெருமாளும் தாயாரும் சேர்த்த்யில் -- அதாவது சிங்காதனத்தில் எழுந்தருளியிருந்தபோது எம்பெருமானார் பெருமாளின் திருவடிகளிலே விழுந்து வணங்கி சரணம் புகுந்து அவரிடமிருந்து வெளிவந்தது.

புகழ் ஒன்றும் இல்லாத அடியேன் -ஸமஸ்த்த கல்யாண குணங்களுக்கு பரிபூரணனான ஸ்ரீமந்நாராயணனுக்கு உகப்பாயும் தகு.ந்ததுமாயிருக்கிற-எல்லையில்லா குணங்களுடைய ஐஸ்வர்யம், சௌசீல்யம், வாத்ஸல்யம் இவைகளை கொண்டவளும், பகவானை விட்டு பிரியாதவளும், கமல்வனத்தை வாசஸ்தலமாக கொண்டவளும், பரிசுத்தமானவளும், ஜகத்துக்கெல்லாம் தாயனவளும் பெருமானின் திவ்ய மஹிஷியுமான பெரிய பிராட்டியை- சரண் அடைகிறேன்.

தாயே! இந்த சரணாகதியானது அது அமையவேண்டிய விதத்தில் ஒரு இடையூரும் இல்லாம்ல் இருக்க உன்னையே சரண் அடைகிறேன். தாயாரும் அப்படியே அருள் பாலித்து மேலும் தொடற்கிறார்.

இனி எம்பெருமானார் ஸ்ரீமந்நாராயணனின் திவ்ய மங்களரூபத்தை விவரிக்கிறார்.
அ.ந்த ரூபம் எப்பேற்ப்பட்டது- திவ்ய மங்களரூபம், அன.ந்த குணம், ஸௌ.ந்தர்யம், ஸௌக.ந்தம், ஸௌகுமார்யம், ( என்றுமே இளமை ) ஸௌசீல்யம், வாத்ஸல்யம், மார்த்வம், ஆர்ஜ்வம், ஸௌஹார்த்தம், ஸாம்யம், காருண்யம், மாதுர்யம், காம்பீர்யம், ஔதார்யம், சாதுர்யம், ஸ்தைர்யம், தைர்யம், ஸொர்யம், பர்ரக்ரமம் இவ்வளவு லக்ஷணங்ளை கொண்டவர்.

ஸௌசீல்யம் : பெரியவர், தாழ்.ந்தவர்களிடம் அன்புடன் பேதமில்லாமல் கலப்பது
வாத்ஸல்யம்: பசு கன்றிடம் தாயன்பு காட்டுகிறதோ அப்படியே அடியார்களிடம் தாயன்பு.
மார்த்வம்: தன்னையண்டியவர்களின் மனக்கவலையை போக்குதல்.
ஸௌஹார்த்தம்: எப்போதும் பக்தர்களின் நன்மையே சிந்திப்பது.
ஸாம்யம்: ஜாதிகுண விஷயத்தில் ஏற்ற தாழ்வு பாராட்டாமல் எல்லோருக்கும் ஆசார்யனாக இருப்பது.
காருண்யம்: துக்கமடை.ந்திருப்பவர்களை பார்த்து இரக்கப்படுதல்
மாதுர்யம் : தன்னை கொல்லவருபவனிடம் கூட அன்பாக,இனியனாக இருப்பது.
காம்பீர்யம் : தன்னை ஆச்ரிதவர்களுக்கு செய்யும் அனுக்ரஹம் யாருக்கும் தெரியாதவாறு அருள் பாலிப்பது.
ஔதார்யம்: கைமாறு கருதாது வேண்டியவை எல்லாம் தருவது.
சாதுர்யம்: ப்ரதிகூலரையும் அனுகூலராக்கிக்கொள்ளும் சாமர்த்யம்.
ஸ்தைர்யம்: அடியார்களை ஒருபோதும் கைவிடாதவர்.
தைர்யம்: எப்பேற்ப்பட்ட எதிரியையும் வென்று தன் வசமாக்கி கொள்ளுதல்
சௌர்யம்: எப்பேற்ப்பட்ட எதிரிகளையும் ஒருவரே சமாளிப்பது
பராக்ரமம்: போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பது.

இவையெல்லாம் பகவானின் கல்யாண குணங்கள்.

இனி எம்பெருமானார் பகவானின் திவ்யபூஷணங்களை விவரிக்கிறார்.

கிரீடம்: ஒப்புயர்வற்ற அழகையுடையதான கிரீடம், கொண்டை, தொப்பாரம், துராய் ஆன மூன்று முடிகள்.
மகர குண்டலம்: மகரவ்டிவான தோடுகள்
க்ரைவேயக: திருகழுத்தில் சாத்துபவைகள்
கேயூர: தோள்வளைகள்
கடக: முன் கையில் சாத்தும் வளையள்கள்
ஸ்ரீவத்ஸ: திறுமறு, கௌஸ்துப மாலை, குருமாமணிபூண்
முக்தாதாம: ஏகாவளி, த்ரிஸரம், பஞ்சஸரம் எனும் முக்தாஹாரங்கள்
உதரபந்தன: திறுவயிறுப்பட்டை
பீதாம்பர: பட்டாடை
காஞ்சீகுண: மேல்பட்டாடை
நூபுர: திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி

அடுத்து எம்பெருமானார் பகவானின் திவ்யாயுதங்களை விவரிக்கிறார்.

அடுத்து பகவானை திவ்ய மஹிஷிகளுடன், நித்யசூரிகளின் சேர்க்கையாலும், நித்ய விபூதி நாயகனாகவும் ஸத்ய காம, ஸத்ய ஸங்கல்ப குணவிசேஷாணகுணங்கள் நிரம்பியவரான பகவானை சரண் அடைகிறேன்.

இந்த சரணாகதியை ஏற்றுக்கொண்ட பகவான்- ராமானுஜரே என்னுடைய திவ்ய ம.ந்திரத்தை உச்சரிதததாலேயே உன்னுடைய சகல பாபங்களும் விலகிப்போயிற்று. இனி நீ பரபக்தி, ப்ரஜ் ஞான பக்திகளை பெற்றுக்கொண்டு என்னையே அணுபவிப்பாய். எனக்கே தொண்டு செய்பவராய் , இவ்வுடல் சரிந்தபின் இ/ந்த திருவரங்கம் பெரிய கோவிலேயே வாழக்கடவீர் என்று அநுக்ரஹம் செய்தருளினார்.

பகவானின் வாக்கு பிரகாரம் உடையவர் இன்றும் பெருமாள் அருகிலேயே நித்ய கைங்கர்ய நிரதரராக காட்சி அளிக்கிறார்.

R.Jagannathan

No comments:

Post a Comment