Thursday, December 10, 2009

திருவிளக்கு பூஜை



ஜெயா மங்கள ச்லோகங்கள்

பல அன்பர்கள் ஜெயா மங்கள் ஸ்லோகங்களை படித்து நல்ல நனமைகளை
பெற்றதாக எழதி உள்ளார்கள் மனதில் உள்ள பாரங்ககள் இறங்கி அமைதியாக வாழ்க்கையை தொடர ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாக எழுதி இது மேலும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அதற்கு என் மனமார்ந்த நன்றி


திருவிளக்கு பூஜை


விளக்கே! திருவிளக்கே வே/ந்தனுடன்பிறப்பே ஜோதிமணிவிளக்கே! ஸ்ரீதேவிபொன்மணியே அலங்கார.நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷி தாயே பசும்பொன்விளக்கு வைத்து பஞ்சு திரிபோட்டு குளம்போல /நெய்விட்டு கோலோலமுடனேற்றி வைத்தேன் எந்தன் குடி விளங்க
மாளிகையில் ஜோதிமாதாவை கண்டுக்ண்டேன். மாங்கல்ய பிச்சை, மடிப்பிச்சை தாருமம்மா, சந்தான்ப்பிச்சையுடன் தங்களையும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா கொட்டில் நிறைய குதிரைகள் தாருமம்மா புகழ் உடம்பை
தந்து என் பக்கத்தில் நில்லுமம்மா

அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா சேவித்தெழு/ந்திருந்தேன்
தேவி வடிவு கண்டேன் முத்து கொண்டை கண்டேன் முழுபச்சை மாலை கண்டேன் ச்வுரி முடிய கண்டேன் தாழமடல் சூடகண்டேன் வஜ்ஜிர கிரீடம் கண்டேன் வைடூர்ய மணி கண்டேன் பின்னழகு கண்டேன் பிறைபோல் நெற்றி கண்டேன் சாத்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவு கண்டேன் கமல்த்திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன் மார்பில் பதக்கம் மின்ன மாலையசைய கண்டேன் கைவளையல் கலகலென்ன கணையாழி மின்ன கண்டேன் தங்க ஒட்டுயாணம் தகதகென ஜொலிக்க கண்டேன்.

காலில் சிலம்பு கண்டேன் பாலாழி பீழிகண்டேன் மங்கள .நாயகியே மனம் குளிர கண்டு கொண்டேன் அன்னையே அரு.ந்துணையே அருகிலிரு.ந்து காத்திடுவாய் வந்த வினையகற்றி மகா பாக்கியம் த/ந்திடுவாய் தாயே உந்தன் காலடியில் சரணம் என்றேன் மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன் குடும்ப கொடி விளக்கே குற்றங்கள் பொறுத்திடுவாய் குறைகள் தீர்த்திடுவாய் குடும்பத்தை காத்திடுவாய் த/ந்தையும் தாயும் நீயே தயவுடன் ரக்ஷிப்பாய் கருணை கடல் நீயே கற்பகவல்லி நீயே ஸகல கலாவ்ல்லி தாயே ரக்ஷிப்பாய் தஞ்சம் உனையடே.ந்தேன் துக்கமெல்லாம் போக்கிடுவாய் அடைக்கல்ம் நீயே அம்மா !!

ஸர்வ மங்கள மாங்கல்யே ச்வே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே தேவி நாராயணி நமோ ( அ) ஸ்து தே
ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
ஸமஸ்தம் அகிலம் தேஹி தேஹிமே பரமேஸ்வரி
அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம

R.Jagannathan.

No comments:

Post a Comment