

அபம்ருத்யுவை விலக்குகின்ற ஸ்லோகங்கள்
கௌரீவல்லப காமாரே! காளகூடவிஷாசன/
மாமுத்தராபதம்போதே ஸ்த்ரிபுரக்னாந்தகாந்தக /
ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே /
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:: //
மஹாதேவம் மஹேசானம் மஹேஸ்வரமுமாபதிம் /
மஹாஸேனகுரும் வந்தே மஹாபயநிவாரிணம் //
இந்த ஸ்லோகம் பார்வதியின் பத்யான பரம சிவனை குறித்து வேண்டி ம்ருத்யுவின் பயத்தை போக்கி அவர் விஷத்தை உண்டு நீலகண்டனாகி எல்லோரையும் காப்பாற்றின மாதிரி நம்மையும் காக்க அருள்பாலிக்கவேண்டும் என்ற த்யானம்.
கெட்ட ஸ்வப்னம் வராதிற்க
துஸ்ஸ்வப்ன துச்சகுன துர்கதிதௌர்மனஸ்ய
துர்பிக்ஷதுர்வ்யஸன துஸ்ஸஹதுர்யசாம்ஸி
உத்பாததாபவிஷபீதிமஸத்க்ரஹார்த்திம்
வ்யாதீம்ச்ச நாசயது மே ஜகதாமதீச:
கெட்ட ஸ்வப்னம், கெட்ட சகுனம், மனக்கவலை, ஏழ்மை, கொடிய துக்கம், அபகீர்த்தி, மற்றும் பலவிதமான சங்கடங்களும் விலக இந்த ஸ்லோகத்தை தியானிக்கவும்.
No comments:
Post a Comment