This blog offers articles on religion, spiritual and cultural subjects to help improve our life and enrich our knowledge.
Wednesday, December 23, 2009
ஸ்ரீ குருவாயூரப்பன் நமஸ்காரம்
ஸ்ரீ குருவாயூரப்பன் .நமஸ்காரம்
>கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜன்மம் பாபம் தீர
குருவாயூரப்பா!நம்ஸ்காரம் செய்கின்றோம்.
திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
சந்தன காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்
எண்ணைய் ஸ்நானம் செய்து கையில் வாழைபழத்தோடு நிற்கும்
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக்கொண்டு
குழல் ஊதும் க்ருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்
தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்
தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னைநமஸ்காரம் செய்கின்றோம்
ஸ்ரீ குருவாயூரப்பன் எழில் அழகு
பீலி தலையில் அசையக்கண்டேன் குருவாயூரப்பா
முகத்தில் புன்னகை தவழக் கண்டேன் குருவாயூரப்பா
சந்தனமெங்கும் மணக்க கண்டேன் குருவாயூரப்பா
துலாபாரம் தூக்கக் கண்டேன் குருவாயூரப்பா
ஓடக்குழலின் ஓசையை கேட்டேன் குருவாயூரப்பா
ஓம் ஓம் என்னும் ஒலியை கேட்டேன் குருவாயூரப்பா
பஞ்ச வாத்யம் முழங்கக் கேட்டேன் குருவாயூரப்பா
பக்தர்கள் பரவசம் அடைய கண்டேன் குருவாயூரப்பா
வேழச் சிவிகையின் எழிலை கண்டேன் குருவாயூரப்பா
வினை தீர்க்கும் வடிவம் கண்டேன் குருவாயூரப்பா
காலை குளிரின் கடுமையை மறந்தேன் குருவாயூரப்பா
காணத் துடித்தேன் கண்டேன் தரிசனம் குருவாயூரப்பா
குழ.ந்தைகள் சாதம் உண்னக் கண்டேன் குருவாயூரப்பா
குமிழ் சிரிப்பின் இதழகைக் கண்டேன் குருவாயூரப்பா
கண்ணா கண்ணா கார் முகில் வண்ணா குருவாயூரப்பா
உன் திருவடி மலரே சரணம் சரணம்
R.Jagannthan
Subscribe to:
Post Comments (Atom)
very nice. Hare Krishna.
ReplyDelete