Monday, December 14, 2009

ஸ்ரீ ஆஞ்சனேயர் பூஜை


ஸ்ரீ ஆஞ்சனேயர் பூஜை

ஸர்வ கார்ய ஸித்தியை அளிக்கும், வியாபார லாபம், உத்தியோக லாபம், விவாஹம், சத்ரு பயம் ,நீங்குதல், கடன் .நிவாரணம், வித்யா லாபம், ஆரோக்கியம், சந்தானம், தம்பதிகள் ஒற்றுமை, மனக்கவலை நீங்குதல், வியாஜ்யத்தில் ஜயம் இவைகள் நிச்சியம் உண்டாகும்.

ஆஞ்சநேயர் கைக்கு ஒரு அடி உயரமான ப்டம் இருக்கவேண்டும். .நெற்றியில் சந்தனம் இடும்போது, அடி வாலில் ஒரு பொட்டு வைக்கவும். வடக்கு முகமாக உட்கார்.ந்து பூஜை செய்யவும். ஒரு மண்டலம் பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வாலில் பொட்டு வைத்துகொண்டு மண்டல முடிவன்று வட மாலை சார்த்தவும்.

சங்கல்பம்:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் /
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே //

ஆசமனம்:

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸ்ரீ ஆஞ்சநேய பூஜாம் கரிஷ்யே //
ஸ்ரீ ஆஞ்சனேயம் த்யாயாமி- அக்ஷதை அல்லது புஷ்பத்தை பிம்பத்தின் மேல் போடவும்.
ஸ்ரீ ஆஞ்சநேயம் ஆவாஹயாமி - புஷ்பம், அக்ஷதை போடவும்.
ஆஸனம் ஸம்ர்ப்பயாமி- அக்ஷதை போடவும்.
பாத்யம் ஸமர்ப்பயாமி- ஒரு உத்தரிணீ ஜலத்தை கின்னத்தில் விடவும்.
அர்க்யம் ஸமர்ப்பயாமி-ஜலத்தை விடவும்.
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி- கின்னத்தில் ஜலத்தை விடவும்.
ஸ்னானம் ஸமர்ப்பயாமி- பிம்பத்தின் மீது ஜல திவலைகளால் ப்ரோக்ஷணம் செய்யவும்.
ஸ்னாந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி---கின்னத்தில் ஜலம் விடவும்
வஸ்த்ர யக் ஞோபவீத உத்தரீய ஆபரணார்த்தே இமே அக்ஷதா- அக்ஷதை போடவும்.
க.ந்தாந் தாரயாமி / நெற்றியிலும், வாலிலும் ச/ந்தன பொட்டு இடவும்.
ஹரித்ரா சூர்ணம் ஸமர்ப்பயாமி / சந்தனப்பொட்டில் குங்குமம் வைக்கவும்.
அக்ஷதான் ஸமர்ப்பயாமி /
புஷ்பாணி ஸம்ர்ப்பயாமி.
அர்ச்சனை

ஸ்ரீ ஆஞ்சனேயாய நம:
வாயு புத்ராய நம:
ப்ரும்ம்சாரிணே நம:
ஸர்வாரிஷ்ட நிவாரகாய நம:
சுபகராய நம:
பிங்காக்ஷாய நம:
அக்ஷாபஹாய நம:
ஸீதான் வேஷண தத்பராய நம:
கபிவராய நம:
கோடீ.ந்து சூர்யப்ரபாய நம:
லங்காத்வீப பயங்கராய நம:
ஸகல்தாய நம:
ஸுக்ரீவ ஸம்மானிதாய நம:
தேவேந்ராதி ஸம்ஸ்ததேவவிநுதாய நம:
காகுஸ்தாய நம:
ஹ.நுமதே .நம:

தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ ஆஞ்சனேயாய நம: ஏதத் ஸர்வம் நிவேதயாமி //
கர்ப்பூர தாம்பூலம் ஸம்ர்ப்பயாமி
கர்பூரம் காட்டவும்.

நீராஜனம் ஸுமாங்கல்யம் கோடி ஸூர்ய ஸமப்ரபம்
அஹம் பக்த்யா ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயா/நிதே

ஸ்ரீ ஆஞ்சனேயாய நம: ஸம்ஸ்தாபராத க்ஷமார்த்தம் ஸர்வ மங்கள ப்ராப்த்யர்த்தம் கர்பூர நீராஜனம் தர்ஸ்யயாமி

ரக்ஷாம் தாரயாமி

மந்த்ர புஷ்பம் ஸம்ர்ப்பயாமி

வஜ்ரதேஹாய காலாக்னி ருத்ராயாமுநதேஜஸே
ப்ரும்மாஸ்திர ஸ்தம்பனாயாஸ்மை நமஸ்தே ருத்ர மூர்த்தயே//
மர்க்கடேச மஹோத்ஸாஹ ஸர்வ சோக வினாசக/
சத்ருன் ஸம்ஹர மாம் ரக்ஷ ச்ரியம் தாஸாய தேஹிமே//

ஸ்ரீராமார்ப்பணமஸ்து //

ஆஞ்சனேய பூஜை முற்றிற்று

R.Jagannathan




No comments:

Post a Comment