Sunday, December 20, 2009

நாராயணீயத்தில் ப்ரஹ்லாத சரித்திரம்




நாராயணீயத்தில் ப்ரஹ்லாத சரித்திரம்


பிதா சுருண்வன் பாலப்ரகரமகிலம் த்வத்ஸ்ருதிபரம்
ருஷாந்த: ப்ராஹைனம் குலஹதக! கஸ்தே பலமிதி
பலம் மே வைகுண்டஸ்தவ ச ஜகதா ஞ்சாபி ஸ பலம்
ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலமிதி தீரோ sயமகதீத //


ப்ரஹ்லாதனை அவன் தகப்பனார் நீ எந்த பலத்தினால் எனது ஆக்ஞையை மீறுகின்றாய் என்று வினவ- 3- வயது குழ.ந்தையான ப்ரஹ்லாதன் வைகுண்டாதிபதியான ஸ்ரீமந் நாரயணனே எனக்கும் பலம், உமக்கும் பலம் மூவுலகத்திற்கும் பல்ம் என்று தைர்யத்துடன் சொன்னான் அல்லவா!

அரே! க்வாஸௌ க்வாஸௌ
ஸகலஜகதாத்மா ஹரிரீதி
ப்ரபந்நே ஸ்ம ஸ்தம்பம்
சலிதகரவாளோ திதிஸுத:
அத: பச்சாத்விஷ்ணோ ஸஹஸா
க்ருபாத்மன் ! விஸ்வார்த்மன்!
பவனபுரவாஸின் ம்ருடய மாம் //


ஸகல உலகத்திற்கும் அதிபதியான உன் ஹரி எங்கு இருக்கிறான் என்று வினவ தூணை பிளந்து நரசிங்கமாய் அவதாரம் செய்த பெருமாள் ஹிரண்யகசிபுவை வதம் செய்த காட்சியை கண் முன்னே .நிறுத்த என்னை ரக்ஷிக்கவேண்டும் என்று குருவாயூரப்பன் ச்ன்னதியில் அவனை வேண்டி நின்றார்.
பட்டத்ரி நம்மையும் அவ்ரோடு அழைத்து குருவாயூரப்பன் முன்னே நிறுத்தி அவன் அருளையும் நரஸிம்மர் அருளையும் பெற நம்மை அழைக்கிறார்.

அப்பேற்ப்பட்ட குருவாயூரப்பன் நம்மையும் காக்கட்டும்.

R.Jagannathan


No comments:

Post a Comment