Tuesday, December 22, 2009

நாராயணீயம்-முடிவில் கோபாலனை வர்ணனை



நாராயணீயம்-முடிவில் கோபாலனை வர்ணனை

நாராயணீயம்-முடிவில் கோபாலனை வர்ணனை

பட்டத்ரி நாராயணீயத்தை முடிக்கும் போது பரீக்ஷித் மஹாராஜா பாகவதத்தை கேட்ட புண்யத்தினால் பகவானை .நேரில் கண்டார். அ.ந்த பாக்கியத்தை பட்டத்ரிக்கும் பகவான் இ.ந்த ஸ்லோகத்தை அனுச.ந்தானம் செய்யும் போது அவருக்கும் காட்சி அளித்து அவருடைய வியாதியை போக்கி அருளினார். இந்த 10-ஸ்லோக்த்தை எவன் அனுசந்தானம்செய்கிறானோ அவனுடைய குறைகளை பகவான் .நிச்சியம் கேட்பார்.

அக்ரே பச்யாமி தேஜோ.நிபிடதரகலா
யாவலீலோப.நீயம்
பீயூஷாப்லாவிதோsஹம் ததனு ததுதரே
திவ்யகைசோரவேஷம்
தாருண்யாரம்பரம்பம் பரம்,அஸுகரஸாஸ்வாத
ரோமாஞ்சிதாங்கை
ராவீதம் நாரதாத்யைர்விலஸதுப.நிஷத்
ஸு.ந்தரீமண்ட்லைச்ச //

மேக கூட்டம் போல பரம காந்திபொரு.ந்தின பதினாறு வயது நிரம்பிய
அழகிய திவ்ய ரூபத்தையும் நாரதர் போன்ற மகரிஷிகளால் சூழப்பட்ட பகவத்ரூபத்தை காண்கிறேன்.

நீலாபம் குஞ்சிதாக்ரம் கனமமலதரம்
ஸம்யதம் சாரு பங்க்யா
ரத்னோத்தம்ஸாபிராமம் வலயிதமுதயச்
ச.ந்த்ரகை பிஞ்சஜாலை
ம.ந்தாரஸ்ரங்நிவீதம் தவப்ரதுகபரீபார
மாலோகயேsஹம்
ஸ்.நிக்தச்வேதோர்த்வபுண்டராமபி ச
சூளளிதாம் பாலபாலேந்துவீதிம் //

கருத்த காந்தியுடையதும் சுருண்ட அழகிய்தான முடிச்சிடப்பட்டதும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டதும் மயில் தோகையினால் அனங்கரிக்கப்பட்டதும் மந்தார மாலையினால் சுற்றப்பட்ட பின்னல் முடிச்சை நான் காண்கிறேன்.

ஹ்ருத்யம் பூர்ணானுகம்பார்ணவம்ருதுலஹரீ
சஞ்சல ப்ரூவிலாஸை
ரா.நீலஸ்.நிக்தபக்ஷ்மாவலி பரிலஸிதம்
நேத்ரயுக்மம் விபோ ! தே!
ஸா.ந்த்ரச்சாயம் விசாலாருணகமல்தளா
கார முக்ததாரம்
காருண்யாலோகலீலாசிசிரிதபுவனம்
க்ஷிப்யதாம் மய்யநாதே //
.நேத்ர வர்ணனை: அழகிய கண்கள், அதன் கா.ந்தி' கருணை, குளிர்ச்சி-அப்பேற்ப்பட்ட கண்கள் தம் மேல் விழவேண்டும்.

உத்துங்கோல்லாஸி.நாஸம் ஹரிமுகுர
ப்ரோல்லஸத்கண்டபாலீ
வ்யாலோலத்கர்ணபாசாஞ்சிதமகரமணீ
குண்டலத்வ.ந்த்வதீப்தம்
உன்மீலத்தந்தபங்க்தி ஸ்புரருணதரச்
சாய பிம்பாதராந்த:
ப்ரீதிப்ரஸ்யந்திமந்தஸ்மித சிசிரதரம்
வக்த்ரமுத்பாஸதாம் மே //

அழகிய மூக்கு, தொங்கட்டான், மகர குண்டலங்கள், உதடு முக வர்ணனை

பாஹுத்வந்த்வேன ரத்னாங்குலிவலயப்ருதா
சோணபாணிப்ரவாலே
நோபாத்தாம் வேணு.நாலீம் ப்ரஸ்ருதக மயூ
காங்குலீஸங்கசாராம்
க்ருத்வா வக்த்ராவிந்தே ஸுமதுரவிகஸத்
ராகமுத்பாவ்யமானை:
சப்தப்ரம்ஹாம்ருதைஸ்த்வம் சிசிரிதபுவனை:
ஸிஞ்ச மர் கர்ணவீதீம் //
உள்ளங்கை , விரல்கள், புல்லாங்குழல் கீதம் வர்ணனை

உத்ஸர்ப்பத்கௌஸ்துபஸ்ரீததிபிரருணிதம்
கோமளம் கண்டதேசம்
வக்ஷ: ஸ்ரீவத்சரம்யம் தரள்தரஸமுத்
தீப்த ஹாரப்ரதானம்
நானாவர்ணப்ரஸூனாவளிகிஸலயினீம்
வன்யமாலாம் விலோல
ல்லோலம்பாம் லம்பமானாமுரஸி தவ ததா
பாவயே ரத்னமாலாம் //

கௌஸ்துபமாலை, மார்பு அலங்க்காரம், வைஜய/ந்தி மாலை வர்ணனை

அங்கே பஞ்சாங்கராகைரதிசயவிகஸத்
ஸௌரபாக்ருஷ்டலோகம்
லீனானேகத்ரிலோகீவிததிமபி க்ருசாம்
பிப்ரதம் மத்யவல்லீம்
சக்ராச்மன்யஸ்த தப்தோஜ்வலகனக.நிபம்
பீதசேலம் ததானம்
த்யாயாமோ தீப்தரச்மிஸ்புடமணிரசனா
கிங்கிணீமண்டிதம் த்வாம் //
சரீரத்தில் வாசனை திரவியங்களால் அலங்கரிக்கப்பட்டதும் கொடிபோன்ற இடை ரத்னப்பட்டை வர்ணனை.

ஊரு சாரூ தவோரு கனமஸ்ருணர்சௌ
சித்தசோரௌ ரமாயா
விச்வக்ஷோபம் விசங்க்ய த்ருவமனிசமுபௌ
பீதசேலாவ்ருதாங்கௌ
ஆநம்ராணாம் புரஸ்தான்ந்யஸ.நத்ருத ஸமஸ்
தார்த்தபாளிஸமுத்க
ச்சாயம் ஜானுத்வயம் ச க்ரம்ப்ருதுலமனோக்ஞே
ச ஜங்கே நிஷேவே //

துடைகள், முழங்கால் கணுக்கால் வர்ணனை

மஞ்சீரம் மஞ்ஜுநாதைரிவ பதபஜனம்
ச்ரேய இத்யாலனந்தம்
பாதாக்ரம் ப்ராந்திமஜ்ஜத்ப்ரணதஜனமனோ
ம.ந்தரோத்தாரகூர்மம்
உத்துங்காதாம்ரராஜந்நகரஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்ரிதானாம்
ஸ.ந்தாபத்வாந்தஹந்த்ரீம் ததிமனுகலயே
மங்களாமங்குலீனாம் //

பாதஸரம், குதிகால், .நகங்கள் வர்ணனை

யோகீ.ந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிகஸுமதுரம்
முக்திபாஜாம் நிவா ஸோ
பக்தானாம் காமவர்ஷத்யுதருகிஸலயம்
.நாத! தே பாதமூலம்
.நித்யம் சித்த ஸ்திதம் மே பவனபுரபதே
க்ருஷ்ண! காருண்யஸிந்தோ
ஹ்ருத்வா .நிச்சேஷதாபான் ப்ரதிசது பரமா
ந.ந்தஸந்தோஹலக்ஷ்மீம் //

கல்பக வ்ருக்ஷமாகிற நீ என்றும் என் சி.ந்தையில் இரு.ந்து என் தாபங்களை போக்கி என்னை ஆட்கொள்ளவேணும் ஹரே குருவாயூரப்பா


R.Jagannathan.

No comments:

Post a Comment