சிரத்தாஞ்சலி - நினைவலைகள்
2009- இந்த வருஷம் எனக்கு இரண்டு பெரும் இழப்பை தந்துவிட்டு போய் விட்டது.மிகவும் துக்ககரமான சம்பவங்கள். இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் சற்று ஆறுதலாகவும் அதே சமயம் அவர்கள் விட்டு சென்ற சில் சுவடுகளை நாம் நினைவாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
G.RAGHAVAN
வாழ்க்கையில் நான் எவ்வளவோ வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருக்கிறேன். பிற்காலத்தில் அவைகள் எனக்கு ஒரு பிடிமானத்தை அளித்து எதிகாலத்தை தைரியமாக அணுக உதவின. இந்த நிலைக்கு பல்ர் காரணமாக நின்று கடைசீ வரையில் சேர்ந்தே வழி நட்ந்தோம். ஒரு காலகட்டத்தில் அவர்கள் பாதை மாறி போய்விட்டார்கள் அல்லது மறைந்து விட்டார்கள்.
மறைந்தாலும் சில காலத்தால் அழியாத நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார்கள். இருப்பவர்கள் அவைகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செய்வது ந்ம்முடைய கடமையும் பிற்கால்த்தில் நாம் அடையும் மன் சாந்திக்கு உதவும்.
ராகவன் என்னுடைய நெருங்கிய உறவினர் மட்டும் அல்ல( மைத்துனர் ) நான் 14- வருஷ ஸ்ரீரங்க வாசத்தை ம்கிழ்ச்சிகரமாகவும் அதே சமயம் என்னுடைய சுக துக்கங்களில் பெறும் பங்கு கொண்டு என்னோடு உறு துணையாக நின்றவர். க்டந்த ஏப்ரல் 4-ம் தேதி அவர் இறைவன் அடி சேர்ந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஒரு நல்லநண்பரை இழந்தது ஒரு கையை இழந்தாற்போல் இருக்கிறது
குடும்ப சூழ்நிலையால் ராகவன் S.S.L.C க்கு பிறகு காலேஜ் ப்டிப்பு தொடரமுடியாமல் வின்ஸண்ட்டில் ரேடியோ ரிப்பேர், எலக்ட்றானிக்ஸ் ப்டித்துவிட்டு ரெயில்வேயில் சாதரண பிட்டர் க்ம்யூனிகேஷன்ஸ் ஆக வேலையை தொடங்கி அயாரத உழைப்பால் படிப்படியாக உயர்ந்து ரெயிவே ஒர்க் ஷாப் போத்தனூரில் மேனேஜராக ஓய்வு பெற்றவர்.
இது அவருடைய வேலையை பற்றி. இவர் ரெயிவேயில் சேர்ந்த புதுதில் எனக்கு க்ல்யாணம் ஆனது. குடுத்தனம் வைக்கும்போது முதலில் தன் அக்கா, அப்பா, தம்பியோடு நான் வேலை பார்க்கும் இடமான் நாக்தாவிற்கு வந்தார். அது தான் என் முதல் சந்திப்பு. அதற்கு பிறகு நான் பெங்களூரில் வேலை பார்க்கும் போது அடிக்கடி சந்திப்போம்.
குடும்பத்திற்கு உற்ற துணையாக, அப்பாவிற்கு துணையாக குடும்ப பாரத்தை தாங்கினவர் என்று என் மனைவி அடிக்கடி சொல்லக்கேட்டிருக்கின்றேன். கஷ்டப்பட்டு சேமித்து அப்பாவிற்கு பணம் அனுப்புவாராம்-கிட்டத்தட்ட என்மாதிரியே என்று சொல்லுவார்கள். அப்பா ரிடையராகி விட்டதாலும் அக்கா க்ல்யாண செல்வு போன்றவைகளாலும் கொஞ்சம் சிரம்மான நாட்கள்.
என்னுடைய வேலை, அடிக்கடி வேலையில் மாற்றம் போன்றவைகளால் எனக்கும் இவருக்கும் நெருங்கிய இணக்கம் முதலில் இருந்த்தில்லை.
இவரோடு அதிக் பழகிய நாட்கள் அவரும் நானும் பெங்களூரில் வேலையில் இருந்தபோது தான்.
முதன் முதலில் இவர் எனக்கு ஒரு டேப் ( ஸ்பூள் ) ரிக்கார்டர் கொடுத்தார். அப்போதுதான் எங்கள் நட்பு ஆரம்பித்த்து. அதைவைத்துக்கொண்டு நான் எடுத்த டேப்புக்கள் எவ்வளவோ-முக்கியமாக என் தம்பியின் கல்யாணத்தின்போது நான் ரிக்கார்ட் செய்த நிகழ்ச்சிகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. இப்படியாக பல் நிகழ்ச்சிகள்-ஒன்றாக கினிமா போவது, சீட்டாட்டம் ஆடுவது போன்றவை இன்றும் மறக்கமுடியாத நாட்கள்
அத்ற்கு பிறகு 15-வருஷ கால்ம் நான் மலேஷியாவில் வேலை பார்த்ததும் மற்றும் பல்வேறு காலகட்டங்கள். எங்களுடைய நட்பு மீண்டும் தொடர்ந்தது. 1990 ல். நான் காரைகுடியில் மில் நிறுவியதிலி/ந்து ஆரம்பித்தது...
எனக்கும் என் மனைவிக்கும் கொஞ்சநாள் ஸ்ரீரங்கத்தில் வசித்து ரெங்கனை சேவிக்க வேண்டும் என்று விருப்பம். அதற்கு பெரிதும் உதவியவர் ராகவன். என்னுடைய ச்ந்திரா நகர் வீட்டை சரி செய்து நாங்கள் குடித்தனம் அமைக்க பெரிதும் உதவியவர்.
அதிலிருந்து நாங்கள் தினமும் சந்திப்போம், ஒன்றாக கோவிலிற்கு போவோம். நாங்கள் அவரை பார்க்காவிட்டால் எங்களை பார்க்க அவர் வருவார், அதே மாதிரி அவரை பார்க்க நாங்கள் போவோம். எங்கு சென்றாலும் ஒன்றாகவே போவோம் எத்தனை தடவை குணசீலம், சென்னை போன்ற இடங்களுக்கு போய்வந்திருக்கின்றோம்.
நாங்கள் ரோஹிணீ ஸ்ரீவத்ஸம் வீட்டில் வசித்தபோது எங்களுக்குள் இன்னும் இறுக்கம் அதிகமாயிற்று. நாள் தவறாமல் அவர் வருவார், நாங்களும் அவரிடத்திற்கு போவோம். வரும்போது ஏதாவது கொண்டு வருவார், போகும்போது நாங்கள் ஏதாவது கொடுப்போம் அவரோடு சேர்ந்து பல தடவை வைஷ்ணவ திவ்ய தேச யாத்திரை மேற்க்கொண்டிருக்கிறோம்
அவர் கோயிலில் பெருமாளை தரிசிக்கும் அழகே தனி. கோபுர வாசலில் நுழைவதற்க்கு முன் கோபுரத்தில் உள்ள சிற்பங்களை - முக்கியமாக நரஸிம்ஹர்,கருடன் இவர்களை த்ரிசித்து விட்டுத்தான் உள்ளே நுழைவார். ரெங்கமண்டபத்தில் குறைந்தது 15- நிமிஷமாவது நிற்பார். வீர ஆஞ்சநேயரை தரிசிக்காமல் வீடு திரும்பமாட்டார். தீர்த்தம், சடாரி வாங்காமல் திரும்ப மாட்டார்-அவ்வளவு பக்தி, ஈடுபாடு.
இதற்கு முக்கிய காரணம் என்ன என்று நான் ப நாட்கள் யோசித்திருக்கின்றேன். இதே குணத்தை என் சம்ஸாரத்திடமும் பார்த்திருக்கின்றேன்-இவர்கள் எல்லோரிடமும் இதை பார்க்கலாம். அத்ற்கு அவர்கள் அப்பா வள்ர்த்தவிதம் என்று தான் சொல்லலாம். சிறு வயது முதல் நல்ல குணங்களை கற்று அதை வாழ்க்கையில் கடைபிடிப்பது என்பது ஒரு புணிதமான செயல்.அதை செவ்வனே மேற்கொண்டவர் ராகவன்.
இந்த குடும்பத்தில்- அக்கா முதல் அண்ணன், தம்பிகள் வரை நல்ல குணம், அதிர்ந்து பேசாமல் கடைசீவரை தெரிந்த ஸ்லோகங்ககளை தினமும் சொல்லிக்கொண்டு தங்களால் யாருக்கும் தீங்கு ஏற்படக்கூடாது என்று வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும், பிறருக்கு தங்களால் உதவும் குணம் நாம் எல்லோரும் போற்றவேண்டியவை. அதை ராகவன் முழுமையாக கடைபிடித்தார் கடைசீவரையில்.
தற்பெருமையில்லாமல் வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்பது ஒரு சிலரிடமே பார்க்கலாம். இதை ராகவனிடம் பார்க்கலாம். நான் வீட்டில் நுழைந்தால் கையை கூப்பி வரவேற்கும் பாணியே தனி-எந்த பெரியவர்களானாலும் இதே வரவேற்பு.
எல்லோரிடமும் குறைகளும், நிறைகளும் கல்ந்தே இருக்கும். இது மனித iயல்பு.குறைகளைவிட நிறைவுகள் அதிகம் கண்டால் அவர் போற்றபடவேண்டியவரே-அப்படி பார்த்தால் ராகவன் நிச்சியம் போற்றப்படவேண்டியவரே.
இவர் வாழ்க்கையில் கடைசீ கட்டத்தில் சில நிகழ்ச்சிகள் அவருக்கு மனவேதனையை கொடுத்தாலும் அதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் தன்னிடமே அடக்கி கொண்டு அமைதியாக பொறுத்துக்கொண்டு அவர் பகவானின் திருவடியை அடைந்தார். இதற்கு சில மாத்ங்களுக்கு முன்னால் நான் ஜாதகம் பார்த்துக்கொண்டிருந்தபோது BV. Raman ஜோதிட புத்தகத்தில் மறு பிறவியை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம் வந்து உட்கார்ந்து கொண்டு இருந்தபோது அவருடைய ஜாதக்த்தை பார்த்து உங்களுக்கு மறு பிறவி கிடையாது சொன்னேன். அது எப்படி என்பதையும் விள்க்கினேன். ஒரு சிரிப்ப்போடு சென்றுவிட்டார்.
கிட்டதட்ட 14- வருஷ கால்ம் அவரோடு இணைந்து வாழ்ந்த கால்ம் இன்றும் பசுமையாக இருக்கிறது. அவருக்கு கண்டிப்பாக பகவான் வைகுண்ட ப்ராப்தியை அளித்திருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
ஒவ்வொருவருக்கும் பகவான் அவர்களின் கர்மா முடியும் வரையில் தான் இந்த உலகத்தில் வைத்திருப்பார். அது முடிந்தவுடன் தன்னிடம் அழைத்துக்கொள்வார் என்று மனதுக்கு சமாதானம் சொல்லலாம். ஒரு உறவினர் என்ற முறையை காட்டிலும் இனிய நண்பரை இழந்த துக்கம் கால்த்தால் தான் தணியும்.
2. பச்சு என்கிற தேவநாதன்
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஒருவர் நம் வாழ்க்கையில் வேகமாக வருவார் வேகமாகவே மறைந்தும் விடுவார். அது போல்தான் பச்சு என்று அழைக்கும் தேவநாதன். இவர் என் மனைவிக்கு ஒன்றுவிட்ட அண்ணா பிள்ளை நாங்கள் ஸ்ரீரங்கத்தில் குடி ஏறி 8- வருஷங்களுக்கு பிறகு டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஸ்ரீரங்கவாஸம்-தாய் தந்தையருடன். முதலில் எனக்கு அவ்வளவாக ப்ரிச்சியம் கிடையாது.
இவருடைய தகப்பனார் ஸ்ரீ ராகவாச்சாரி. பிரபல ஆகாசவாணி இஞ்சினியர். திருச்சி, காஷ்மீர் போன்ற பல இடங்களில் ரேடியோ சேவையை அமைத்துக்கொடுத்தவர். என் சம்சாரத்திடம் மிகுந்த அன்பு. என்னிடம் மிகுந்த மரியாதை.
நாங்கள் எங்கிருந்தாலும் தவறாது வ.ந்து பார்ப்பவர்.ஸ்ரீரங்கம் வந்தவுடன் அடிக்கடி எங்களை வந்து பார்ப்பார். சாந்தமான் சுபாவம். நல்ல விஷயங்கள் தெரிந்தவர். பல இடங்களில் சேவை செய்ததால் நல்ல அநுபவம். இவர் அடிக்கடி வந்தாலும் இவருடைய பையன் பச்சுவை பற்றி எனக்கு அவ்வளவு ப்ரிச்சியம் கிடையாது.
என்னுடைய இன்னொரு உறவினர் வாசு ஸ்ரீரங்ககத்தில் எங்களுக்கு ரொம்பவும் உதவி செய்துகொண்டிருப்பவர்- நல்ல உதவாளி. எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடித்து கொடுப்பவர். எங்களுக்கு உறுதுணையாக நிற்பவர். இவர் ஸ்ரீ ராகவாச்சாரி சித்தப்பா. பச்சு சித்தப்பா பையன். இவர்கள் குடும்பத்திற்கு ரொம்பவும் வேண்டியவன்.
ஒரு சமயம் பச்சு வீட்டிற்கு போயிருந்த சமயம் பேச்சு வாக்கில் கம்ப்யூடரை பற்றி பேச்சு எழுந்ததில் என்னை பற்றியும் நான் கம்ப்யூடரில் ஆடியோ கேஸட்டிலிரு.ந்து ஸி.டி க்கு மாற்றி கொண்டிருப்பதையும் பற்றி பச்சுவிடம் ப்ரஸ்தாபித்திருக்கிறான். ஒரு நாள் பச்சு என் வீட்டிற்கு வந்து நான் எப்படி ஸி.டி.க்கு மாற்றுகிறேன் என்று பார்த்து தனக்கும் அம்மாதிரி அவர்கள் கம்ப்யூடரில் செய்து தரவேண்டும் என்று கேட்டு கொண்டார். இதிலிருந்து ஆரம்பித்தது தான் எங்கள் நட்பு.
எங்களுக்குள் ஒரு மரியாதை கலந்த நட்பு தொடர்ந்தது. பச்சு நல்ல ப்டித்த அறிவாளி. நிறைய விஷயங்கள் தெரிந்து இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளாத அடக்கம். I.I.T. இஞ்ஜினியர். தன் வேலை உண்டு. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதவர் சுறுசுறுப்பானவர்.. ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பவர்.
என்னுடைய ஆன்மீக கட்டுரைகளையும் தமிழ் புத்தகங்களையும் ஆவலோடு விரும்பி படிப்பார். ஒரு சமயம் அவர் பல வ்ருஷங்களாக நம்முடைய சனாதன தர்மத்தை பற்றி குறித்துக்கொண்ட குறிப்பேடுகளை காட்டினார். 40- பக்கம் நோட் புக்கில் எழுதிய 11-புத்தகங்களை என்னிடம் கொடுத்து பார்க்க சொன்னார்.
நானும் எல்லாவற்றையும் படித்து விட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோஜித்தோம். முதலில் இதை புத்தக வடிவமாக ஆக்கவேண்டும் பிறகு பிரசுரிப்பதை யோஜிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
பச்சு இது தமிழிலும் ஆங்கிலத்திலும் சுறுக்கமாக ஒரு அகராதி மாதிரி இருக்கவேண்டும் என்று அபிப்ராயப்பட்டார். அப்படி தயாரிக்கப்பட்டது தான் - சநாதன தர்மம்-வைஷ்ணவம் என்ற தலைப்பில் 11-பகுதிகளாக தொகுக்கப்பட்டது. இதை முடித்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோஜித்துக்கொண்டிருந்தோம்.
ஆனால் எதிர்பாராத வகையில் அவர் ந்ம்மை விட்டு பிரிந்து விட்டு சாஸ்வதமான் வைகுண்ட பதவிக்கு சென்று விட்டார். ஒரு அருமையான நண்பரை இழந்து விட்டேன். அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலி நானும் அவரும் சேர்ந்து எழுதிய அந்த புத்தகத்தை என் பிளாக்கில் நம் எல்லோருக்கும் உதவும் வண்ணம் பிரசுரிப்பதே. வரும் பிளாக்கிலிருந்து இதை ஆரம்பிக்கலாம் என்றும் உங்கள் மேலான ஆதரவை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
R.JAGANNATHAN.
No comments:
Post a Comment